நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
ஞாயிற்றுக்கிழமை
கும்பகோணம்
ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயிலில் நிகழ்வுற்ற காளியாட்ட வைபவத்தின் சில காட்சிகள்...
நன்றி நன்றி
திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்காக...
ஆடி வரும் காளியம்மா
ஆறுதல் மொழிவாய்
அவரவர் தம் குறைகள் தீர
அருள்மழை பொழிவாய்..
தேடி வரும் காளி உந்தன்
திருவடியைப் போற்றி
பாடி வரும் ஏழை மனம்
திருவிளக்கை ஏற்றி!...
ஓம் சக்தி ஓம்
***








படங்கள் அருமை. குடந்தை பலமுறை சென்றும் இந்தக் கோவில் பற்றி நான் அறிந்ததில்லை.
பதிலளிநீக்குஎனக்கும் இந்தக் கோயில் குடந்தையில் எங்கே என்று தெரிய வில்லை...
நீக்குகாளியிடம் வேண்டுதற்பா அருமை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
காளி அம்மன் ஆட்டம் படங்கள் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்கு"ஆடிவரும் காளியம்மா.....பாமாலை நன்றாக உள்ளது.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
காளியம்மன் ஆட்டம் படங்கள் பிரமிக்க வைத்தன. இது போன்ற நிகழ்வு குறித்து அறிந்ததில்லை. காளியம்மாவிற்கான பாமாலை நன்று.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. கும்பகோணம் ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற காளியாட்டப் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
சித்திரை ஞாயறுகள் அம்மனுக்கு உகந்த நாள். கோடை வெயிலுக்கு வீட்டுக்கு வீடு மஞ்சள் நீராட்டுக்கள் குடம் குடமாக (உச்சிமாகாளி அம்மன், சந்தன மாரியம்மன் என்ற கோவில்களின் கொடை திருவிழாவின் போது.) அம்மனுக்கு முன்பு பிறந்த வீட்டில் இருக்கும் போது, சமர்பித்திருக்கிறோம். தங்கள் பதிவை கண்டவுடன் பழைய நினைவுகள் வந்தது. இன்றைய தினத்தில் சிறப்பான தரிசனத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.
காளியம்மனிடம் வேண்டுதற்பா நன்றாக உள்ளது. பக்தியுடன் படித்து பிரார்த்தித்துக் கொண்டேன். மேலும், எனக்காக நீங்கள் காளியம்மனிடம் வேண்டுதலை வைத்தமைக்கு கண்டு மனம் நெகிழ்வுற்றேன். உங்களது அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்.!! மிக்க நன்றி சகோதரரே. 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.