நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
வெள்ளிக்கிழமை
முருகனடியார் பகர்கின்ற இசைக் காணொளி வாயிலாகக் கிடைத்த திருப்புகழ்
**
கச்சித் திருப்புகழ்
தத்தத் தனதான தத்தத் ... தனதான
தத்தத் தனதான தத்தத் ... தனதானா
அற்றைக் கிரைதேடி அத்தத் ... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் ... பெறுவேனோ..
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் ... பெருமாளே..
அன்றைக்கு வேண்டிய உணவைத் தேடுவதோடு
அந்தந்தப் பொருட்கள் மீதும் ஆசையினை வைத்துக் கொண்டு தவிக்கின்ற நான்
அதற்கு மேலான தன்மையினைப் பெறுதற்கு இயலுமோ?..
வெற்றியே விளங்கும் கதிர் வேலினை உடையவனே,
கிரெளஞ்சமலையைத் தொளைத்த பெருமானே,
கற்று தியானித்து உணரத்தக்க
ஞானஸ்வரூபனே.
கச்சிப் பதியில் அமர்ந்த பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..