நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
கார்த்திகை 18
செவ்வாய்க்கிழமை
அன்றைக்கு -
இந்த ஊர்ப் பேருந்து நிலையத்தில்
பேருந்திற்காக காத்திருந்த போது அங்கிருக்கின்ற சிற்றுண்டிக் கடைகளில் மக்களின் பரபரப்பு...
" எனக்கு ரெண்டு வடை.. "
" எனக்கு மூனு போண்டா.. "
" வடைக்கு சட்னி இருக்கா?.. இல்லையா!.. "
காணாததைக் கண்ட மாதிரி மக்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தனர்..
கடைக்காரன்
வெள்ளை நிறத்தில் அழுக்குப் பிடித்த வாளியில் இருந்து குரூட் ஆயில் மாதிரியான ஒன்றை இருப்புச் சட்டியில் ஊற்றியதைக் கவனித்து விட்டு வெளியில் வந்து சாவகாசமாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வடை பஜ்ஜியை விட சுவையாக இருந்தன..
பதிவின் படங்களில் காணப்படும் வடை பஜ்ஜி போண்டா வகையறாக்களைப் பற்றி எவ்வித சந்தேகமும் வேண்டாம்..
உணவு விற்பனை செய்கின்ற பெரிய கடைகளில்
காலை நேரத்தில் வழுக்கு பிடித்த பெரிய வாணலியில் பனை எண்ணெயை (Palm oil) ஊற்றி முதலில் ராசியான உளுந்த வடை..
பின்னர் அதே எண்ணெயில் பருப்பு வடை பஜ்ஜி, போண்டா, சமோசா - என, இன்ன பிற வகையறாக்கள்..
இதெல்லாம் அடுத்தடுத்ததாக தயாரிக்கப்பட்டு பொது மக்களிடம் விற்கப்படுபவை என்பதை நினைவில் கொள்ளவும்..
வேறு சில கடைகளில் இதே என்ணெயில் அவித்த முட்டையைக் கடலை மாவு விழுதில் புரட்டி பொரித்து எடுக்கின்றனர்..
இப்படியானவர்களின் பார்வையில் முட்டை என்பது சைவ உணவு..
( இந்த காரணத்தால் தான் - வெளியில் சாப்பிடுவதில் மிகக் கவனமாக இருக்கின்றேன் நான் )
மேலும் சில கடைகளில்
இதே எண்ணெயில் உருளைக் கிழங்கை (சிப்ஸ் ) சீவித் தள்ளி பொரித்து அள்ளுகின்ற வைபவமும் உண்டு..
இத்தனைக்கும் ஒரு சில கடைகளில் மட்டுமே எண்ணெய்யை அவ்வப்போது மாற்றுகின்றனர்..
பெரும்பாலான இடங்களில்
எண்ணெய் குறையக் குறைய கொதிக்கின்ற எண்ணெயுடன் வேறு பழைய எண்ணெயைக் கலந்து கொள்வதே வழக்கம்..
ஒரு முறை கொதிநிலைக்கு வந்த எண்ணெயை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்குக் கேடு என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்... ஆனால் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவது இல்லை..
இத்தோடு இந்த எண்ணெய் மகாத்மியம் முடிகின்றதா... - என்றால்,
இதற்குமேல் தான் ஆரம்பிக்கின்றது...
அடுத்த நாள் உருகிய களிம்பு மாதிரி காட்சி தருகின்ற - இந்த எண்ணெயைப் பலரும் காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்..
எதற்காம்??..
வேறெதுக்கு!..
சாலையின் ஓரங்களை அலங்கரிக்கின்ற அதி விரைவு வறுவல் பொரியல்
கடைகளின் நித்திய பயன்பாட்டிற்குத்தான்..
விலையும் மலிவு.. பயனும் அதிகம்!!..
இப்படி இந்தக் களிம்பு எண்ணெய்யைக் கொண்டு வந்து - மெழுகு பதத்திற்கு வரும் வரை பாடாய்ப்படுத்தி - அதனோடு புதிய எண்ணெயைக் கலந்ததும் புலால் உணவுகளின் வழி ஆதாயம் தொடங்குகின்றது..
தின்பவர்க்கோ ஆரோக்கியம் குறைகின்றது..
அன்றைய மொத்த வருமானத்திற்கும் இந்த அழுக்கு எண்ணெய் தான் அடிப்படை..
மொளகாத் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் மசாலாவை அள்ளிப் போட்டு களிம்பு எண்ணெயைக் கலந்து அடித்தால் திங்கிறவங்களுக்கு தலையும் புரியாது.. காலும் புரியாது... ஏனென்றால் புலால் வகை உணவுகளின் மகத்துவம் அப்படி!..
இப்படியான உணவுகளைக் குடும்பத்துடன் தின்று தீர்த்து - திளைக்கின்றவர்கள் ஏராளம்...
ஏராளம்.
கெட்ட கொழுப்பு உட லில் சேர்வதற்கு இதுவே அடிப்படை..
நாம் நினைத்துக் கொண்டு இருப்போம்... கடைக்காரன் ரொம்பவும் நல்லவன்... சட்னி சாம்பார் எல்லாம் நாம கேக்காமலேயே தர்றான்!.. - என்று...
ரோட்டுக் கடை சமாச்சாரம் என்பது இன்றைய நாட்களில் யோசித்துக் கொள்ள வேண்டிய விஷயம்..
இதே போல ரோட்டோரத்தில் இரண்டும் கூடிய உணவகம் என்பது வேறொரு பயங்கரம்..
பணம் பண்ணுகின்ற விஷயத்தில் ஈவு இரக்கம் என்று எதுவும் இல்லை...
உணவு ஏவாரத்தில்
எல்லாருமே இப்படித் தான் - என்று சொல்வதற்கும் வழி இல்லை..
பெரும்பாலான உணவு ஏவாரிகள் இப்படித்தான்..
நமது ஊரில் உணவின் மீதான விழிப்புணர்வு என்பது அறவே இல்லை..
முன்னும் பின்னும்
எவ்வித விவரக் குறிப்புகளும் இன்றி சிறுதீனிப் பொட்டலங்கள் பேருந்து நிலையங்களில் பரவலாக விற்கப்படுவதே இதற்கு சாட்சி..
மேலும்,
இதை யாரும் கண்டு கொள்வதும் இல்லை.. கருத்தில் கொள்வதும் இல்லை..
இந்நிலையில் நாம் என்ன செய்வது?..
முற்றாக அவற்றில் இருந்து ஒதுங்குவது..
அல்லது,
விழித்துக் கொண்டோர் எல்லாம்
பிழைத்துக் கொண்டார்...
- என்ற பாடலை நினைத்துக் கொண்டே வடையை வாங்கித் தின்பது!..
ஃஃ
நமது நலம் நமது கையில்..
வடை பஜ்ஜி இன்ன பிற
கோஷ்டிகளிடம் இருந்து காப்பாத்துங்க முருகா..
முருகா முருகா
***
படிப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. தெரிந்தே இதை எல்லாம் சாப்பிடத் தோன்றுகிறது. இப்படி எல்லாம் சாப்பிட்டு இம்யூன் ஆகிவிடுகிறார்கள் மக்கள்.
பதிலளிநீக்குஉண்மை சற்றே கூடக் குறைய இருக்கலாம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
ஸ்ரீராம் ..
நலம் வாழ்க.
படங்களை பார்க்கும்ப்போது காலை ஆறுமணிதான் ஆகிறது என்றாலும் வடை சாப்பிடத் தோன்றுகிறது!!
பதிலளிநீக்குஆகா...
நீக்குஇப்போதெல்லாம் வடை பகோடா வகைகள் வீட்டில் தான்..
மகிழ்ச்சி.
நன்றி ஸ்ரீராம்..
தலைப்புப் பார்த்ததும் உள்ளே வந்திட்டேன், உண்மைதான் துரை அண்ணன், நடப்பதை அப்படியே எழுதியிருக்கிறீங்கள்... இப்போதான் எல்லாமே யூ ரியூப்பில் பார்க்க முடிகிறதே...
பதிலளிநீக்குஉணவின் அழகைப் பார்க்க வாங்கிச் சாப்பிடோணும் எனும் ஆசைதான் வருது, ஆனா சுத்தம் என்பது இருப்பதில்லை.
ஆனாலும் குறையும் சொல்ல முடியாது, இப்படியான உணவுகளால்தான் பல மக்கள் உயிர் வாழ்கின்றனர், எல்லோராலும் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுமளவுக்கு முடியாதெல்லோ, அதே நேரம் பசியையும் அடக்கோணும் தானே, அதனால இப்படியான உணவுகளால்தான் சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர்.
உங்களது கருத்து நியாயமானது தான்...
நீக்குஆனால்
நம்முடைய நலம் நமக்கு முக்கியம் அல்லவா!..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் கருத்து உண்மைதான்..! படங்களை பார்க்கும் போது நன்றாகத்தான் உள்ளது. அதன் பிண்ணனியில், ஒவ்வொரு பண்டங்களின் பயன்பாட்டுக்கு பின்னர் எண்ணெய்களின் மாறி வரும் நிலை தெரிந்த பிறகு, படிக்கும் போதே மனது வேதனையடைகிறது. ஆனால், மக்களும் அதனை தெரிந்து கொண்டேதான் இதையெல்லாம் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிடுகிறார்கள். (அதற்கு அவர்களின் பொருளாதாரங்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.) ஆனாலும், வாய்க்கு ருசி வயிற்றுக்கு கேடு என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லதுதான்.!! நல்ல பதிவுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.