நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 11
வியாழக்கிழமை
குறளமுதம்
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.. 49
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச் செய்த
திருப்பாவை
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.. 11
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டும் இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்... 1
**
ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
நவகோள் வினை தீர்க்கின்ற திருப்பதிகம்
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.. 1
**
ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
கச்சித் திருப்பதிகம்
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
வணக்கம் செல்வாண்ணா..
பதிலளிநீக்குநல்வரவு ஸ்ரீராம்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
பல பதிகம் பாடி இறைவனை இன்புற வைத்த சுந்தரர் பாடும்போது பார்வையினைத் திரும்பப் பெற்றார் என்று சொல்லலாமா?
பதிலளிநீக்குசொல்லலாமே...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்
ஓம் ஹரி ஓம்