நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 23, 2024

கருந்திட்டைக்குடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
வியாழக்கிழமைதேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாக  திகழ்வது கருந்திட்டைக்குடி.. 

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக  விளங்குவது..

தேவாரத்தில் கருந்திட்டைக்குடி என்று குறிக்கப்படுகின்ற இத்தலத்திற்கு வடபுறத்தில் ஆதி தஞ்சபுரி எனப்படும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.. தென்புறத்தில் தஞ்சைத் தளிக்குளம்.. 

இப்படி இரண்டு தலங்களுக்கு நடுவில் விளங்குகின்ற இத்தலத்தில் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அருந்ததி அம்மையுடன் தங்கியிருந்து வழிபாடு செய்து நோய் நீங்கப் பெற்றிருக்கின்றார்.. 

எனவே ஸ்வாமிக்கு  ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் என்று திருப்பெயர்..

தைப் பூசத்தன்று ஸ்ரீ ஸ்வாமி அம்பாள், வசிஷ்டர் அருந்ததி திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகின்றது..


வருடாந்திர வசந்தோற்சவத்தில் விசாக நட்சத்திரத்தில்  ஸ்வாமி பெரும் பல்லக்கில் ஏழூர் உலா எழுந்தருள்கின்றார்..
வைகாசி 11 (24/5) வெள்ளிக்கிழமை - காலை ஐந்து மணியளவில் மகாதீப ஆராதனைக்குப் பின் -  

1. கரந்தையில் இருந்து புறப்பட்டு -
2. ஆதி தஞ்சபுரி (ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்)
3. தென்குடித் திட்டை (ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்)
4. திருக்கூடலூர் (ஸ்ரீ சுந்தரேஸ்வரர்)  
5. கடகடப்பை (ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்) 
6. புன்னை நல்லூர் (ஸ்ரீ கயிலாயநாதர்) 
7. தஞ்சை கீழவாசல் (ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர்) என, 

வலம் செய்து மறுநாள் திருக்கோயிலுக்கு வந்து சேர்கின்ற ஸ்வாமிக்கு மாலைப் பொழுதில் பூமாலை சூட்டும் வைபவம் நடைபெற உள்ளது..


காணொளி
 நன்றி தினமலர்


காணொளி
நீண்ட இடைவெளிக்குப் பின்
கடந்த வருடத்தில் நிகழ்ந்த
முதலாண்டு வைபவம்

அனைவரும் வருக்
இறையருள் பெறுக..

நற்கொடி மேல் விடை உயர்த்த நம்பன் 
செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே..  6/71/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. தஞ்சையில் இருந்த காலங்களில் வேறெங்கோ செல்லும்போது இரண்டு மூன்று முறை கரந்தையை தாண்டிச் சென்றிருக்கிறேன்... அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 2. கிருஷ்ணா தியேட்டர் அங்கா இருந்தது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிருஷ்ணா தியேட்டர் இருந்த இடம் வடக்கு அலங்கம் பகுதியில்..

   நீக்கு
 3. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 4. இறைவனை வணங்கி ஆரோக்கியமான வாழ்வு பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///ஆரோக்கியமான வாழ்வு பெறுவோம்///

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. கருந்திட்டைக்குடி தரிசனம் கண்டோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..