நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 4
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
-: பொது :-
தானதன தத்த தானதன தத்த 
தானதன தத்த ... தனதான
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு 
மேவதுப ழிக்கும் ... விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி 
லேமருவி மெத்த ... மருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள் 
நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும் 
நாடிநர கத்தில் ... விழலாமோ
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி 
யாடுமொரு பச்சை ... மயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில் 
ஆருமுய நிற்கு ... முருகோனே
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில் 
மேவியகு றத்தி ... மணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி 
மீளவிடு வித்த ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
பூங்கணைகளைக் கொண்டு
போர் செய்கின்ற மன்மதனின்  
அம்புகளையும் தமது 
கொடுந்திறத்தால் - வென்று, 
பழிக்கக்கூடிய கண்களால்
எல்லாப் பொருள்களையும் 
அழிக்கவல்ல பெண்களின்
மயக்கத்தில் சிக்கி
நான் எனது நாட்டையும் நகரையும்  வீட்டையும் நிறைந்த 
செல்வத்தையும் பெண்களையும் குழந்தைகளையும் சுற்றத்தாரையுமே பேணி நின்று 
இனியும் நான்
ஞானம் இன்றி, ஏழ் பிறப்பையும் தேடி  
நரகத்தில் விழலாமோ?..
படமெடுத்தாடும் பாம்பைக் கண்டதும் அதனைக் கொத்திப் பிடித்தவாறு ஆடுகின்ற  பச்சை மயில் வீரனே
வேதங்கள் கூறும் மெளன நிலையில் சகல உயிர்களையும் வாழச் செய்கின்ற முருகனே..
வேடர்களின் தினைப் புனத்தில் நீண்ட பரணில் காவல் புரிந்த குறமகள் வள்ளி நாயகியின் மணவாளனே
முன்பு அசுரர்கள் -   தேவர்களுக்கு இட்ட
சிறையை நீக்கி அவர்களை விடுவித்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



முருகா... வேண்டுதல்கள் வரிசையில் நிற்கின்றன. ஒவ்வொன்றாய் பைசல் செய் முருகா...
பதிலளிநீக்குவேல் முருகன் அனைவரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்குமுருகா சரணம்.
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
முருகன் அனைவரையும் காக்க வேண்டும்.
பதிலளிநீக்குதிருப்புகழை பாடி வணங்கி கொண்டேன்.