நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 22, 2024

விசாகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 9
புதன்கிழமை
விசாகத்திருநாள்


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ... தனதான


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..


ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


முருகா சரணம்
சரணம் சரணம் 
முத்துக்குமரா
சரணம் சரணம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. வைகாசி விசாகத் திருநாள்..  வடிவேல் குமரனின் திருநாள்...  முருகா..  முருகா...

  பதிலளிநீக்கு
 2. வைகாசி விசாக நாளில் வேல் முருகன் விசாகன் பகிர்வு சிறப்பு.
  வெற்றிவேல் பாதம் பணிவோம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  வைகாசி விசாக பதிவு அருமை. படங்களில் அழகு முருகனை தரிசித்துக் கொண்டேன். அருணகிரிநாதரின் பாமாலை பாடி முருகனை சரணடைந்தேன். அனைவருக்கும் முருகன் நல்லதையே நடத்தி தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  வடிவேல் முருகனே சரணம் சரணம்.வண்ண மயில் வேலவனே சரணம் சரணம்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வைகாசி விசாகத்திருநாளில் எனக்கு பிடித்த திருப்புகழ பாட்டு பகிர்வு அருமை. பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..