நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 25, 2023

திருக்கயிலை 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
செவ்வாய்க்கிழமை


திருக்கயிலாயம்


தேவாரப் பாடல் பெற்ற  வட நாட்டுத் தலம். 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  - என, மூவராலும் பதிகம் பெற்றிருக்கின்ற்து..

பாரதத்தின் புனிதத் தலம்..
சிவ வழிபாட்டில் உள்ள மக்களின் புனிதத் தலமாக மட்டுமல்ல.ஆதி திபெத்தியர்க்கும் சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும்  புனிதத் தலமாகத் திகழ்கின்றது..

திருக்கயிலை மாமலையைத் தரிசித்தவர்கள் - காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார்
பெருமிழலைக் குறும்பர் நாயனார். ஒளவையார்..

சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா  - இன்னும் சில நதிகள் இந்த மலையில் தான் உற்பத்தியாகின்றன.. 

ஐம்பத்திரண்டு கிமீ., சுற்றளவு கொண்டது கயிலாய மலை..

இங்கிருக்கும் நீர்நிலை மானசரோருவம் - மானசரோவர் ஏரி.. பிரம்மதேவரின் மனதில் இருந்து உருவானது..

பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானோடு சேர்ந்து வந்து தேவர்களும், முனிவர்களும் இந்த ஏரியில்  நீராடுவதாக நம்பிக்கை..

மானசரோவர் ஏரியில் வாழும் அன்னப் பறவைகள் பாலையும் நீரையும் பகுத்து அருந்தும் தன்மை உடையன என்று சொல்லப்படுகின்றது.. 

உலகின் மிக உயரத்தில் இருக்கும்  நன்னீர் ஏரி இது ஒன்றே!.. - என்ற புகழை உடையது..

இதுவரை கயிலாய மலையில் யாரும் 
ஏறியது இல்லை..

1926 ல் ஹக் ரட்லஜ் என்பவன் கைலாயத்தின் வடக்கு முகமாக ஏறுவதற்கு முனைந்த போது முயற்சியைக் கைவிட நேர்ந்தது.. 1936 ல்  ஹெர்பர்ட் டைச்சி என்பவனும் இதில் தோற்றுப் போனான்..

இலங்கை வேந்தன் ராவணனே கயிலாயத்தில் தனது  வீர தீர பராக்கிரமத்தைக் காட்டுதற்கு முனைந்து மலையின் கீழ் சிக்கிச் சீரழிந்தான் என்று இருக்கையில் மானிடப் பதர்கள் எம்மாத்திரம்!?..

" கைலாஷ் பரிக்ரமா " எனும் கிரி வலத்தின் போது, ​​கயிலாய மலையின் மையத்தில் இருந்து பிரார்த்தனைகளும் கோஷங்களும் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கின்றனர்.. 
சில வேளைகளில் பிரபஞ்சப் பேரொலிகளும் இயங்குகின்றன..

திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 6638 மீட்டர்
(21778 அடி).. இதில் 1800 மீட்டர் (6000 அடி) செங்குத்து என்று கணக்கிடப்பட்டுள்ளது..


இந்த மலையில்  ஒளிந்துள்ள மர்மங்களைக் 
கண்டறிவது என்பது இயலாது.. 

உண்மையைக் கண்டறிகின்றேன் - என்று பலர் புறப்பட்டு உயிரை விட்டதாகவும் சொல்லப்படுகின்றது..

" பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும் " - என்றொரு சொல் வழக்கு திபெத் மக்களிடம்..

பாவங்கள் அற்ற மனிதனுக்கு இப்படியான எண்ணங்கள் வராது என்பதே உண்மை..

தஞ்சை தட்சிணமேரு

புற்றரவு பற்றியகை நெற்றியது 
மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு 
குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி 
பெற்றகயி லாயமலையே.. 3/68/2
-: திருஞானசம்பந்தர் :-

பண்ணின் இசையாக
நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..6/55/7
-: திருநாவுக்கரசர் :-


மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள் புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே.. 7/100/3
- : சுந்தரர் :-

ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி!..
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. தகவல்கள் சுவாரஸ்யம்.  எனக்கும் கயிலாய மலையில் அபப்டி என்னதான் இருக்கும் என்று யாராவது பார்த்து சொல்ல மாட்டார்களா என்ற எண்ணம் உண்டு.  பிளாக் ஹோல் போல கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் இடம் கயிலாய மலை என்று எங்கோ படித்த நினைவு.  அடைய முடியாத உயரங்களை, விளங்கி கொள்ள முடியாத விஷயங்களை பணிந்து வணங்கி விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடைய முடியாத உயரங்களை, விளங்கி கொள்ள முடியாத ஆழங்களை அப்படியே பணிந்து வணங்கி ஏற்றுக் கொள்வோம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும் அருமை. கைலாய மலை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். மலையின் தகவல்களை படிக்கும் போது மனம் பக்தியினால் சிலிர்ப்பெய்துகிறது. தூய அன்போடு மலையேறி இறைவனை தரிசித்த அடியார்களை வணங்கிக் கொள்வோம். என் அடியார்களை தொழுவது என்னை வணங்குவது போன்று என அந்த ஆண்டவனே அருளியுள்ளார் அல்லவா...!! அதனால் ஈசனிடம் அன்பிற்சிறந்த அந்த அடியார்களை பணிந்து வணங்கி உலகில் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி. ஈசனே போற்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈசன் அடி போற்றி
      எந்தை அடி போற்றி..
      தேசன் அடி போற்றி
      சிவன் சேவடி போற்றி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கயிலை மலை தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. தகவல்கள் சிறப்பு...
    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  6. கயிலாயம் பற்றிய தகவல்கள் சுவாரசியம். துரை அண்ணா. படங்களும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. கயிலை மலை விவரங்கள் அருமை.
    படங்கள் மிக அழகு. பாடல்களிய பாடி நொடித்தான் மலை உத்தமனை தொழுது கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சிவாய நம..

      நீக்கு
  8. கயிலை மலைத் தகவல்கள் சிறப்பு. அந்த எட்டாயிரம் அடி செங்குத்துப் பாதையில் தான் இரண்டாம் நால் பரிக்ரமா வரும். இதைப் படிக்கையில் நாங்க போனது எல்லாம் நினைவில் வருது. நாங்க போனது நேபாளம் வழியா! ஏனெனில் இந்திய வழி போக எங்களுக்கு உடல் நலம் சீராக இல்லாததால் அனுமதி கிடைக்காது. நேபாளம் வழியிலேயே பயத்துடன் தான் போனோம். ஆனால் எனக்கு ஒண்ணும் பண்ணவில்லை. மானசரோவரில் தங்கி இருந்தப்போ நம்மவருக்கு மட்டும் கொஞ்சம் மூச்சுத் திணறல். மற்றபடி ஒண்ணும் பிரச்னை இல்லை. போக வர 21 நாட்கள் ஆனது அப்போ. பதினேழு வருடங்கள் முன்னால் 2006 ஆம் வருடம் செப்டெம்பரில். பிரம்மபுத்ராவைக் கடந்து செல்கையில் திக், திக், திக் தான். ஆனால் அடுத்த வருடமே வழியைச் சரி பண்ணி இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  9. கோமதி அரசும் நாங்க போயிட்டு வந்தப்புறமா மறு வருஷமோ என்னமோ போயிட்டு வந்து எழுதி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  10. கைலாய மலை தரிசனமும் சிறப்புக்களும் கண்டோம்.

    அவனருளால் அவன்தாள் பணிகின்றோம்.
    ஓம் சிவாய நமக..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..