நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 03, 2023

வெள்ளத்தனைய

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 18
திங்கட்கிழமை


வெள்ளைத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு (595)

சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்
-: அதிகாரம்: குடிமை. குறள்: 956 :-

 மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் 
என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு
தகுதி இல்லாதவற்றைச் செய்யமாட்டார்..
டாக்டர் மு வரதராசனார்.
(நன்றி : குறள் திறன்)

ஆம்பல் - அல்லி (நன்றி விக்கி)
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்..
-: ஔவையார் :-

குலம் என்ற வார்த்தை தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் வருகின்றது..

குலம் என்பதற்கான  தெளிவு - குடி மரபு..
ஒளவையார் சுட்டிக் காட்டும்  குலம் 
என்பதற்கு வளரியல்பு எனக் கொள்ளலாம்.. 

அல்லது
அவரவர் விரும்பியபடியும் அர்த்தம் 
செய்து கொள்ளலாம்..

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைநீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
-: நாலடியார்:-

அள்ளி எடுத்துக் கொள்ளும் படியான அழகுடன் சிறிய இதழ்களை உடையவை..

என்றாலும்,
சூடிக் கொள்வதற்கு தக்கதல்ல என்பதனால், கள்ளியின் மேல் கை நீட்டி அதன் பூவினை யாரும் பறிக்க மாட்டார்கள்.. அதுபோல,

கீழான செயல்களைச் செய்யும் மனிதர் - மிகுந்த செல்வத்தை உடையவரானாலும், அவரை மெய்யான அறிவினை உடையவர்கள் விரும்ப மாட்டார்கள்.. 

ஆதலின்,
இழி செயல்களில் இருந்து நீங்குக - 
என்பது அக்காலத்தின் நீதி..
*

வாழ்க நலம்
நலம் வாழ்க..
***


8 கருத்துகள்:

  1. வளரியல்பு... நல்ல வார்த்தை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மலர்கள் படங்கள் அழகு. மலர்களுக்கேற்ற பாடல்களும், அவற்றின் மூலம் நாம் கற்றுணர வேண்டிய பாடங்களுமாக பதிவு நன்றாக உள்ளது. நீதிப்பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அழகிய கருத்துப் பகிர்வு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. வெள்ளைத் தனைய : இந்த திருக்குறள், கணக்கியல் செய்வதற்கான பல காரணங்களில் ஒன்று...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.
    பகிர்ந்த பாடல்கள் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விளக்கங்கள், பாடல்கள். குடிமரபு - வளரியல்பு - அதாவது அந்தக் குடியில் பிறந்தற்கான இயல்புகள் - மரபணு அல்லது அந்தச் சூழலில் வளர்ந்ததால் வரும் இயல்புகள் எனலாமா?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மலர்களை வைத்துத் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை. தற்கால மாணவ, மாணவியர் இவற்றை அறிதல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. இதற்கு நான் போட்ட கருத்து காக்கா தூக்கிட்டுப் போயிடுத்தோ? என்னனு நினைவிலும் இல்லை. மெயிலில், ட்ராஷிலும் கிடைக்கலை.. :(

    மலர்களைப் பற்றி எழுதி இருந்த நினைவு இருக்கு. மலர்களை வைத்துப் போட்டிருக்கும் இந்தப் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..