நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 19, 2023

நாகத்தீஸ்வரர் 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 3
 புதன் கிழமை

 நன்றி ஸ்ரீ அகஸ்திய விஜயம்

 நன்றி
ஸ்ரீ அகஸ்திய விஜயம்

பாற்கடலில் தோன்றி இங்கு நிலைபெற்ற சந்தன மரத்தில் இருந்து சந்தனச் சாந்து எடுத்து ஈசனுக்கு காப்பிட்டு அம்பிகை பக்தியுடன் வழிபட்ட திருக்கோலம் தான் ஸ்ரீபக்தீஸ்வரர்..

ஸ்ரீபக்தீஸ்வரரே பூலோக ஜீவன்களுக்கு என, நாகத்தியில் ஸ்ரீ பக்தவத்சலேஸ்வரர் ஆனார்!..

பூர்ண கலைகளுடன் சௌபாக்ய நாயகியாகத் திகழும் அம்பிகையின் திருப்பெயர் ஸ்ரீவித்யா சௌபாக்ய நாயகி..

அவளே இத்தலத்தில் 
ஸ்ரீ சௌந்தர நாயகியாக விளங்குகின்றாள்..




இத்திருக்கோயிலில்
இருதய கமல கோலத்தை  அரிசி மாவால் வரைந்து அதை பதினாறு தாமரை மலர்களை வைத்து அலங்கரித்து வணங்கினால் எத்தகைய இருதய சம்பந்தமான நோய்களுக்கும் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும் என்பது ஸ்ரீ அகத்திய மகரிஷியின் அருள் வாக்கு..




வெயிலில் நிழல் என்று ஒதுங்குவதற்கு அரச மரமோ ஆல மரமோ வாய்த்தால் அது அகத்தியர் பெருமானின் அருள்..

சித்திரை சதய நட்சத்திரத்தில் உற்பவித்த சிவலிங்க மூர்த்தி ஆனதால் இங்கு அகத்தியர் பெருமானே ஸ்தூல, சூட்சும வடிவாக ஒவ்வொரு சித்திரை சதயத்திலும் வந்து வழிபட்டுச் செல்கின்றார்.. 

இறைவன் அட்சரங்களை வடித்து அதனை ஓதிய போது, அந்த அட்சர த்வனியில் எழுந்த ஒளிப் பிழம்பில் தோன்றியவரே அகத்தியர்..

சித்தர்களுக்கு சித்தராகிய - சிவ மஹா யோகி ஸ்ரீ அகஸ்திய மகரிஷி தான் ஜீவன்களுக்கு சிவ சிந்தனையைத் தருபவர்..





ஒரு யுகத்தில் அதி அற்புத சந்தனக் காப்புத் தலமாக மிகவும் பிரசித்திப் பெற்று விளங்கிய  ஸ்ரீபக்தவத்சலேஸ்வர சிவாலயம் இன்று பலருக்கும் தெரியாத , குக்கிராமத்தில் இருக்கின்றது..

இவ்வூரின் தலச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் குடத்தினுள் இட்ட விளக்காகி விட்டன..

சித்திரைத் சதயத் திருநாளில் இங்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு இட்டு வழிபடுவோர்க்கு அவரவர் நம்பிக்கை, பக்தியைப் பொறுத்து ஸ்ரீ அகத்தியர் பெருமானின் திவ்ய தரிசனம் நிச்சயம் கிட்டும் - என்பது சித்தர்களின் அருள்வாக்கு

அகத்தியர் பெருமானும் மானுடம் , யானை, பசு, குதிரை என, வந்தருள்வார்.. 





இறைவனை அடைவதற்கு முன் - பக்தியைப் பெற வேண்டும். பக்தி உணர்வு வளர்வதற்கு குருவை அடைய வேண்டும். சற்குருவை அடைதற்கு ஆழ்ந்த நம்பிக்கையும் ஈசன் அருளும் கூடி வருதல் வேண்டும்..

இந்த பக்தியை எளிதில் அருளக் கூடியவரே பக்தீஸ்வரர். 
பக்தீஸ்வரரே நாகத்தி
தலத்தில் ஸ்ரீ பக்தவத்சலேஸ்வரராகப் பொலிகின்றார்..

அகத்திய மகரிஷியின் ஆசிகள் கூடி வந்தால் தான் நாகத்தி பற்றி சிந்திப்பதற்கும் தரிசிப்பதற்கும் இயலும் என்பது வெளிப்படை...

சிவ குடும்பத்தில் இணைந்திருப்பவர் ஸ்ரீ அகத்திய மகரிஷி..



ஏதாவதொரு மாதாந்திர சதயத்தில் இங்கு வந்து வணங்குவதற்கு சிந்தை செய்வோமாக..

நாகத்தி தலத்தைப் பற்றிய தொன்மையான குறிப்புகள் ஸ்ரீ அகஸ்திய விஜயம் எனும் சித்தர் நூல் குறிப்பில் இருந்து பெறப்பட்டவை..

நாகத்தி கோயிலைப் பற்றிய செய்திகளை இந்த - இணைப்பில் கண்டு கொள்க.

இன்றைக்கு பெரும்பாலான
மனிதர்க்குத் தெரியாத -  சமுதாயத்தால் மறக்கப்பட்ட தலமாக இருக்கின்றது நாகத்தி.. 

என்னுள் நாகத்தி பற்றிய நினைப்பினை வளர்த்து ஒவ்வொரு நிலையாய் நகர்த்துபவர் ஸ்ரீ அகத்தியரே..

சிவ ஆலயத்திற்குச் சென்ற போதும் கோயிலை வலம் செய்த போதும் காணப்படாததாய் இருந்த ஒன்று அங்கிருந்து புறப்படும் போது இளங்கன்றென அருகில் வந்து அன்பு கொண்டாடி நின்றது.. கைப் பையில் இருந்து பிஸ்கெட் எடுத்துக் கொடுக்க - என்னுடன் உரசிக் கொண்டிருந்தது..

வீட்டுக்கு வந்த பிறகு தான் அங்கே வந்து என்னருகில் நின்றது கன்றல்ல - என்று புரிந்தது..

இதே போல கடந்த வருடம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் சமஸ்தானத்திலும் நிகழ்ந்தது..

நாகத்தி தரிசனத்திற்கு ஏழாம் நாள் பிள்ளையார்பட்டி கோயிலில் எதிர்பாராத விதமாக ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்ரை தரிசனம்..

எல்லாம் ஒரு கணக்கில் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன..





மேலுள்ள படத்தில் வெட்டாற்றின் வடபுறக்கிளை..

தேவார காலத்திற்கு முற்பட்டதான இக்கோயில் தேவாரத்தில் எந்தப் பெயரில் சொல்லப் பட்டுள்ளதோ தெரியவில்லை..

தேவாரத் திருப்பதிக பாடல்கள் பலவற்றிலும் சந்தனச் சாந்து பற்றி பேசப்பட்டுள்ளது.. 

அதனை வேறொரு பதிவினில் காண்போம்..

நாகத்தியின் ஈசான மூலையில் நான்கு கிமீ., தொலைவில் அரசூர் கிராமத்தில் அகத்தியர் வழிபட்ட மேற்கு நோக்கிய சிவாலயம் இருப்பதும் சிந்திக்கத் தக்கது..

ஓம் அகத்தீசாய நம:

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. உங்களுக்கு கிடைத்த அனுபவம் சிலிர்ப்பானது.  அகத்திய மாமுனிவர் ஸ்தூல வடிவமாக சதயத்திருநாளில் வருவார் என்கிற நம்பிக்கை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகத்திய மாமுனிவர் ஸ்தூல வடிவமாக சூட்சுமமாக வருகின்றார் என்பது உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அனுபவம் அருமை ஐயா...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்

      நீக்கு
  3. வியக்க வைக்கும் சில விஷயங்கள். உங்கள் அனுபவம்!

    கோயில் கோபுரங்கள் அழகு அது போலவே வெட்டாற்றின் வடபுறக் கிளை..ஈர்க்கிறது. படங்கள் மிக அழகு துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது இன்னும் அழகாக இருக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. சிலிர்ப்பான அனுபவம். இந்தக் கோயில் இதன் விபரங்களை அறியத் தந்தமைக்கு நன்றி. மனதாலேயே நினைச்சுக்கலாமே! அருமையான சிறப்பான தகவல்களும் விபரங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அருமையான சிறப்பான தகவல்களும் விபரங்களும்.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  5. இத் தலம் மிக அருமையான அனுபவங்களை கொடுத்து இருக்கிறது உங்களுக்கு. இத்தலத்து இறைவனை பற்றி விவரங்கள் அருமை. நாகத்தி கோவிலில் உங்களை வழி நட்த்தி சென்றவர் அகத்தியரே!

    ஆனைத்து படங்களும், விவரங்களும் அருமை.
    எல்லாம் ஒரு கணக்கில்தான் இயங்கி கொண்டு இருக்கிறது என்பது உண்மையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நாகத்தி கோவிலில் உங்களை வழி நட்த்தி சென்றவர் அகத்தியரே!.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நாகத்தி கோவில் படங்களும், பதிவின் விபரங்களும் மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்கள் அனுபவம் சிறப்பானது. இறைவனின் பரிபூரண அருளில்லாமல் எதுவும் நடக்காது. குருவின் துணை தங்களுக்கு எப்போதும் உள்ளது. அகஸ்திய மகாமுனி பாதங்களை நானும் சரணடடைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. 'எல்லாம் அவன் அருளே' சிலிர்ப்பான நிகழ்வுகள்.

    இத் தலத்தை நாங்களும் வணங்கி இறைவன் பாதம் பணிகின்றோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..