நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 21, 2023

ஆடி வெள்ளி 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 5
வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
அபிராமி பட்டர் அருளிச்செய்த 
திருப்பதிகப் பாடல்கள்..


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
     கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
     விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
     மணி மிடறும் மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
     இலங்கு கர தலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
     பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ்சேவடியை நாளும்
     புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடை மேல்
மங்கலம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள் செய்
     வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமி பதிகம் :-


 மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.. 5
-: அபிராமி அந்தாதி :-
**

அம்மையும் அப்பனும்   
நமது சிந்தையில் 
பொருந்தி விட்டார்கள் 
என்றால் அதற்கு மேல் 
வேறு என்ன வேண்டும்!..
*

ஓம் சக்தி சக்தி ஓம்
***

11 கருத்துகள்:

  1. அப்பனே..  என் அம்மையே...  எமை ஆட்கொண்டிட வேண்டும்.  இறைஞ்சுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      ஆடி வெள்ளி வாழ்த்துகள்..

      நீக்கு
  2. அம்மையும் அப்பனும் நம் எல்லோரையும் காக்க வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  3. ஆடி வெள்ளி நாளில் கண்குளிர அம்மை அப்பன் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. ஆடி வெள்ளியில் அருமையான தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆடி வெள்ளியில் அம்மையப்பன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அபிராமி பதிகம் வாசித்து மகிழ்வடைந்தேன். அம்மையப்பன் அனைவரையும் காத்தருள மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டேன். காலையில் வர இயலவில்லை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..