நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 22, 2023

ஸ்ரீ சக்ர தரிசனம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 6
சனிக்கிழமை
திரு ஆடிப்பூர நன்னாள்




ஒரு சமயம் - தானே ஒளிப் பிழம்பு என்று தருக்கியதால் சூரியன
தனது ஒளியினை இழக்க நேரிட்டது.. 

தனது பிழையை உணர்ந்த சூரியன் - ஸ்ரீமந் நாராயணனைச்  சரணடைந்து - தான் இழந்த ஒளியை மீண்டும் பெற வேண்டும் என்று வணங்கி நின்றான்.

கமல மண்டபம்


ஸ்வாமியும் வைகாசி மாத பௌர்ணமி அன்று ஸ்ரீ சக்கரத்தில் இருந்து  மூன்று கண்கள் எட்டு திருக் கரங்களுடன் ஸ்ரீ சக்ரபாணியாக வெளிப்பட்டு
அக்னி மயமாக திருக் காட்சி நல்கி  - ஆதவனின் ஒளியை மீளவும் தந்து அருள் புரிந்தார்..

இதனால் திருக்குடந்தைக்கு பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் பெயருண்டு..

கிழக்கு ராஜ கோபுரத்தைக் கடந்ததும் கமல மண்டபம்.. கொடிமரம். பலிபீடம். வடபுறத்தில் சுதர்சன தீர்த்தம்..











திருக்கோயில் கட்டு மலையாக விளங்குகின்றது.. தட்சிணாயன, உத்தராயண வாசல்கள் விளங்குகின்றன..

தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய  உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயன வாசலும் திறக்கப்பட்டிருக்கும்..

மூலஸ்தானத்தில் -  பத்ம பீடத்தின் மேல் வட்டத் திகிரியுடன் கூடிய அறு கோணத்தின் நடுவில் திவ்ய தரிசனம்..

எட்டுத் திருக் கரங்களிலும் சக்கரம், உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, சார்ங்கம், பாசம், கதை ஆகியவற்றை ஏந்திய வண்ணம் திருக்காட்சி நல்கும் ஸ்ரீ சக்ரபாணி ஸ்வாமியின் அருகில் அபய, வரத கரங்களுடன் ஸ்ரீ சுதர்சன வல்லித் தாயார் காட்சியளிக்கின்றாள்.

கருவறையின்  நிருதி மூலையில் தும்பிக்கை ஆழ்வார்.. வாயு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர்..

தென்புற கோட்டத்தில் லக்ஷ்மி நரசிம்மர்.
மேல் புறத்தில் லக்ஷ்மி நாராயணன்.
வடபுற கோட்டத்தில் வைகுந்த நாதன் விளங்குகின்றனர்..




கோயிலின்  வடபுறத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீ விஜய வல்லித் தாயார் அருள் பாலிக்கின்றாள்..

பார்வைக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வந்து  ஸ்ரீ சக்ரபாணி ஸ்வாமியை வணங்கி வழிபடுவதால் நலம் எய்துவர் என்பது ஐதீகம்..


தஞ்சை சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்ரபாணி சுவாமியை வழிபட்டு குணமானதால் அவர் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கின்றார்.. மன்னரின் சிலை ஸ்வாமிக்கு எதிரில் அமைக்கப்பட்டு உள்ளது..


கும்பகோணம் நகரில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது.. கோயிலின் அருகில் உள்ள படித்துறைக்கு சக்கரப் படித்துறை என்று பெயர்..





தஞ்சை - கும்பகோணம் பேருந்துகளில் செல்வோர்
கும்பேஸ்வரர் கோயிலின் தெற்கு வாசல் மொட்டைக் கோபுரத்தின் அருகில் இறங்கி பெரிய தெருவில்  விசாரித்துக் கொண்டு கடை வீதியில் நடந்தால் அரை கிமீ., தொலைவில் ஸ்ரீ சக்ரபாணி கோயில்..

செல்லும் வழியில் - ஸ்ரீ தசவதாரப் பெருமாள், ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில்கள் உள்ளன..

தூய்மை யோகமாயினாய்  துழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ நின் -
நாமதேயம் இன்னதென்ன வல்லமல்ல மாகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே.. 765
-: திருமழிசை ஆழ்வார் :-

ஸ்ரீ சுதர்சனவல்லி 
ஸ்ரீ விஜயவல்லி சமேத 
ஸ்ரீ சக்ரபாணயே நமோ நம:

ஓம் ஹரி ஓம்
***



7 கருத்துகள்:

  1. கோவில் தகவல்கள் சிறப்பு.  படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சூரியனுக்கு மறுபடி கொஞ்சம் கர்வம் வந்தால் தேவலை.  கொஞ்சம் வெப்பத்தை இழக்கும்படி சாபம் வாங்குவார்!   மக்கள் செய்யும் அநியாயங்களால் விழும் ஓசோன் ஓட்டையை காக்கலாம்!

    பதிலளிநீக்கு
  3. படங்களும் விளக்கங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்ரீ சக்ரபாணி கோவிலின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டேன். இன்று சனிக்கிழமை ஸ்ரீமந் நாராயணரின் தரிசனம் கண்டு கொண்டேன். கோவிலின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. இன்று இக் கோவிலின் கோபுர தரிசனம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி.
    ஸ்ரீமந் நாராயணர் அனைவருக்கும் உடல் பிணியகற்றி நலன்களை தந்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல்கள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  6. நாங்கள் இந்த கோவில் அடிக்கடி போய் இருக்கிறோம். கடைசியாக நாங்கள் போய் வந்த பதிவு போட்டு இருக்கிறேன்.
    படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    தரிசனம் செய்து கொண்டேன். பாசுரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தரிசித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..