நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 13, 2022

திருப்பூந்துருத்தி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திருப்பூந்துருத்தி பதிவின் மூன்றாவது பகுதி..


சப்த ஸ்தான தலங்களுள் ஆறாவதான திருக்கோயிலாக விளங்குவது  திருப்பூந்துருத்தி..

ஆதியில்
திருமழபாடி தலத்தில் நந்தியம்பெருமானின் திருமணம் நடைபெற்ற போது மலர்களும் மாலைகளும்  - புஷ்பவனமாகிய திருப்பூந்துருத்தியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக ஐதீகம்..


சப்த ஸ்தானத்தன்று திரு ஐயாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக் கண்டியூர் - என, ஐந்து ஊர் பல்லக்குகளும் இங்கு வந்து சேர்ந்த பின், அவற்றுடன் திருப்பூந்துருத்தி பல்லக்கும் சேர்ந்து திருநெய்த்தானம் கோயிலுக்கு எழுந்தருள்வது கண்கொள்ளாக் காட்சி..


காசித் தீர்த்தம்





ஸ்ரீ காசி விஸ்வநாதர்




நந்தி மண்டபம்
அம்பாள் சந்நிதிக்கு எதிரே இருக்கும் நந்தி மண்டபத்தின் நிலை மேலே உள்ள படத்தில்..



பழமையான திருக்கோயில்.. பராமரிப்பதில் இன்னும் அதிக கவனம் தேவை என்பது  நேரில் கண்டால் தான் விளங்கும்..


ஸ்வாமி எழுந்தருளும் வீதிகளில் நம்மவர்களின் வீடுகள் குறைந்து விட்டன..


தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன.. நகரப் பேருந்துகளும் இயங்குகின்றன..


திருப்பூந்துருத்திக்குக் கிழக்கே 2 கி.மீ
தொலைவில் வீரட்டானமாகிய திருக் கண்டியூர் தலம்.. மேற்கே 2 கி.மீ தொலைவில் திரு ஆலம் பொழில் திருத்தலம்..
*
மூவ னாய்முத லாய் இவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத்தி நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.. 5.032.4
-: திருநாவுக்கரசர் :-

திருநாவுக்கரசர் 
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. கோவிலில் பராமரிப்பு தேவை என்று தெரிகிறது.  இங்கெல்லாம் அறநிலையத்துறை வராது.  வருமானம் இல்லையே...வராமல் இருப்பதும் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  2. புதர் மண்டிய சன்னதிகள், விளக்கெரியா தீபங்கள், காசு பார்க்காத தட்டுகள், உண்டியல்கள்...  பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்களுடன் இன்றைய தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள். திருப்பூந்துருத்தி கோயிலை நேரில் பார்த்த மகிழ்ச்சி. நந்தி மண்டபம், கோபுர படம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பழமையான கோயில்கள் பலவற்றில் பராமரிப்பு இல்லை என்பது தான் வேதனை. படங்களும் தகவல்களும் சிறப்பு. 16.05.2022 அன்று சப்த ஸ்தான பல்லக்கு திருவிழா. இந்த வருடத்தின் திருவிழா முழு விவரங்களும் இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. பழைய கோயில், பழைய மண்டபங்கள். சீராக்க வேண்டிய நிலையில் அம்பிகைக்கு எதிரே நந்தி! ஏதோ வழிபாடுகள் முறையாக நடப்பது தான் ஒரே சந்தோஷம். :(

    பதிலளிநீக்கு
  7. மிகவும் சிறப்பான கோவில். பராமரிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அழகாக இருக்கின்றன. அழகான பழங்கோயில் ஆனால் பராமரிப்பு இல்லை என்பது வேதனை. புதியதாகக் கட்டுவதை விட இக்கோயில்களைப் பராமரித்தாலே நல்லது இல்லையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. நந்தி மண்டபம் பார்க்க அழகாக இருக்கிறது அதுவும் செடிகளின் நடுவில். இதுவே அழகு எனும் போது பூந்தோட்டம் நடுவில் மண்டபம் நல்ல நிலையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    காசி விஸ்வநாதர் சன்னதி, அதன் மேலே இருக்கும் மண்டபம் தூண்கள் அழகு. நேரில் பார்த்தால் தெரியும் என்றாலும் படங்களே சொல்கின்றன பராமரிப்பு தேவை என்பதை. பல படங்கள் கோயிலின் அழகைச் சொல்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் பற்றி பதிவு செய்யுங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..