நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 03, 2022

மங்கல மார்கழி 19

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.. 138
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 19


குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங்
கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்..

-: ஆழ்வார் திருமொழி :-


பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப் புகலிடம்பார்த்து ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.. 2246
-: ஸ்ரீ பூதத்தாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்


திருத்தலம்
திரு ஆலவாய்
மதுரையம்பதி


இறைவன்
ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர்
ஸ்ரீ சொக்கநாதப் பெருமான்


அம்பிகை
ஸ்ரீ மீனாக்ஷி
ஸ்ரீ அங்கயற்கண்ணி

தீர்த்தம் பொற்றாமரை
தலவிருட்சம் கடம்ப மரம்


வெள்ளியம்பலத்தில்
இறைவன் கால் மாறி ஆடிய  திருக்கோலம்..

அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த திருத்தலம்..


மரகதவல்லி மீனாக்ஷி
செங்கோல் தாங்கி
அரசாட்சி செய்து
சுந்தரேசப் பெருமானின்
கைத்தலம் பற்றியருளிய திருத்தலம்..


மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள் தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 2


மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித் தித்தித்து அமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. ஆஹா! காலையில் நம்ம மீனாளோட தரிசனம் கிடைத்தது. சுமார் 2,3 வருடங்களுக்கும் மேலாகப் பார்க்கவே முடியலை. இன்னிக்காவது இங்கே பார்க்க முடிஞ்சது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  2. பாசுரம்/பதிகம் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு நாட்களுக்கு முன்னால் இளையராஜா மதுரை சென்று தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார். இன்று இங்கு நாமும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நானும் படித்தேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மதுரையை ஆளும் மீனாட்சி! உலகம் நன்மை பெறட்டும்!

    மரகதவல்லி என்று பார்த்ததும் டக்கென்று ஓரு பாடல் நினைவுக்கு வந்தது அதிசயமாக!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் சகோ..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பகிர்வு. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..