நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 01, 2022

மங்கல மார்கழி 17

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

-: குறளமுதம் :-

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.. 126
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.17
*
-: ஆழ்வார் திருமொழி :-


காப்புன்னை  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.. 2156
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருச்சிராப்பள்ளி


இறைவன்
ஸ்ரீ தாயுமானஸ்வாமி
ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மட்டுவார்குழலி
ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை

தீர்த்தம்
காவிரி, பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

ஆதரவற்றுத் தவித்த நிறை கர்ப்பிணிக்கு - ஈசன் தாயாக வந்து பேறு காலம் பார்த்தருளிய திருத்தலம்..

தென் கயிலாயம் எனப் புகழப்படுவது..
மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள மலை..

மலை உச்சியின் மீது பிள்ளையார் விளங்குகின்றார்..

எண்ணரும் சிறப்புகளை உடைய இந்த மலைக் கோயிலில் தான்
அப்பர் ஸ்வாமிகளால் மனம் மாறிய மகேந்திர பல்லவர் சமணம் விடுத்து சைவம் சார்ந்த விவரங்களைக் கூறும்  கல்வெட்டுகள் அமைந்துள்ளன..


நன்றுடையானைத் தீயதிலானை  நரைவெள்ளேறு
ஒன்றுடையானை யுமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.. 1/98
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருக்கோத்தும்பி
திருப்பாடல் எண் - 18


பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..231
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
நல்லவர் தம் நலம் நிறைக
நல்லறமும் தான் பொலிக..
நல்லருளும் துணை வருக
நாடெங்கும் வளம் பெறுக..

அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!..
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

17 கருத்துகள்:

 1. அனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. உமையும் ஈசனும் அனைவரையும் காக்கட்டும்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நலம் எங்கும் வாழ்க..

   நீக்கு
 3. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நலம் எங்கும் வாழ்க..

   நீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நலம் எங்கும் வாழ்க..

   நீக்கு
 5. வாழ்க வையகம்

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் ஜி..
  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நலம் எங்கும் வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. மிகவும் பிடித்த சிறப்பான குறள்...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. நலம் எங்கும் வாழ்க..

   நீக்கு
 8. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். பாசுரமும்/பதிகமும் அருமை. சின்ன வயசில் மலைக்கோட்டைக்கு நிறையத் தரம் போனாலும் சமீபத்தில் 2013 ஆம் ஆண்டில் போனது தான் நினைவில் நிற்கிறது. மேலே ஏற முடியாமல் ஏறியதும் இறங்கப் பட்ட கஷ்டமும் மறக்கவே முடியாதது. எப்படியோச் சமாளித்துப் போனதில் சமணர் குகைகள் மற்றச் சரித்திரச் சின்னங்களெல்லாம் பார்க்க முடியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 9. சிராப்பள்ளி குறித்த தகவல்களும் பதிவு சொல்லும் மற்ற விஷயங்களும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வெங்கட்..
  தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘ வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..