நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 21, 2022

தை வெள்ளி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
**
இன்று
தை மாதத்தின்
இரண்டாவது
வெள்ளிக்கிழமை..

அம்பிகையையும்
அவள் ஈன்றெடுத்த
அறுமுக வேலனையும்
வழிபடுவதற்கு
உகந்த நாள்..

இன்றைய
பதிவில்
அருணகிரிநாதர்
அருளிச் செய்த
வேல் விருத்தத்தின்
திருப்பாடல் ஒன்று..

அம்பிகையின்
திருப்பெயர்களை
அருணகிரி நாதர்
சொல்கின்ற
அழகே.. அழகு..

சிந்தித்து
இன்புறுவோம்!..


வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்

விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்


கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ


சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்


சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே..
***

வெற்றிவேல்
முருகனுக்கு
அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா!..
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. படிக்கும்போதே கவனமாக படிக்க வேண்டியிருக்கிறது.  என்ன ஒரு தமிழ்.. ஓம் முருகா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் .ஸ்ரீராம்.
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகா.. முருகா..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. படங்களும், பாடலும் அருமை. அம்பிகையின் பெயர்கள் அத்தனையும் சொல்லும் போதே நாவு இனிக்கிறது. வாரகி அன்னையையும், அவள் செல்வ மைந்தன் சிங்கார வேலனையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன். முருகா சரணம் என சொல்லும் போது மனது அமைதியாகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகா.. முருகா..

   நீக்கு
 3. என்ன அழகான பெயர்கள்! அத்தனையும் மனதை ஈர்க்கின்றன!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகா.. முருகா..

   நீக்கு
 4. மனதை ஈர்க்கும் திருப்பெயர்கள். அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   முருகன் துனை..

   நீக்கு
 5. பெயர்களை சொல்லிச்சென்ற பாடல் சிறப்பு. நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் துனை..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..