நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 02, 2022

மங்கல மார்கழி 18

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-
ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.. 131
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 18


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகி லென்னே எனக்கு.. 2169
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

இனியதொரு
தரிசனம்
திருவேங்கடவன் திருக்கோலத்தில்
தென்நாங்கூர்
ஸ்ரீ ரகுமாயி சமேத
ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமான்..


-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திரு ஆனைக்கா


இறைவன்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - நாவல்
*
மேற்கு நோக்கிய
திருக்கோயில்..
பஞ்சபூதங்களுள் நீரின் பகுப்பாகத் திகழும் திருத்தலம்..
கருவறையில் எந்நேரமும் நீர் ஊறிக் கொண்டு இருக்கும்..


ஒரு முறை இறைவனிடம் - போகத்திற்கும் யோகத்திற்கும் விளக்கங்களை அருளுமாறு அம்பிகை வினவினள்.. 

இவ்வண்ணம் கேட்டு தானே தவக்கோலம் கொண்டு மாணவியாய் அமர்ந்தனள்.. ஈசன் குருவாக இருந்து உபதேசித்தனன்..

இதனால் தான் இத்திருத்தலத்தில் திருக்கல்யாண வைபவம் நிகழ்வதில்லை..


அம்பிகை நீரினால்
சிவலிங்கம் அமைத்து
தினமும்
உச்சிகால பூஜையில்
வழிபட்டனள்..

எனவே இத்தலத்தில்
உச்சி கால பூஜையை
அம்பிகையே
நிகழ்த்துவதாக ஐதீகம்..


தவமிருந்த அம்பிகைக்கு ஜம்பு முனிவர் வெண் நாவல் மரமாகி நிழல் கொடுத்தார்.. அந்த நிழலில் ஈசன் சுயம்புவாக எழுந்தருளியதால் இறைவனுக்கு 
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்பது திருப்பெயர்..

தான் படைத்த திலோத்தமையின் அழகைக் கண்டு வியந்த நான்முகனுக்கு ஏற்பட்ட பழி நீங்கிய திருத்தலம்..

பின்னொரு சமயம் நாவல் மரத்தின் கீழிருந்த லிங்கத்திற்கு தன் வலையால் நிழல் அமைத்தது சிலந்தி.. அதில் சருகுகள் சிக்கிக் கொள்ள அதை சகித்துக் கொள்ளாத யானை வலையை அழித்தது.. 

யானைக்கும் சிலந்திக்கும் பிரச்னை ஏற்பட்டு இரண்டும் இறையடி சேர்ந்தன யானை முக்தியடைய சிலந்தி  கோச் செங்கட் சோழராகப் பிறந்தது..

இவரே யானை ஏற இயலாதபடிக்கு மாடக் கோயில்களை அமைத்தவர்..

திரு அரங்கத்தின் மடைப்பள்ளியில் வேலை செய்த வரதன்  - கவிராஜ காளமேகம் என்றானது ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அளித்த தாம்பூலத்தினால்..


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில்  இன்மொழித் தேவிபாகம்  ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதம் இல்லையே.. 3/53
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத்
தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 1


சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ...
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. ஸ்ரீ அகிலாண்டஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் அருள் நமக்கு கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய திருப்பாவை பாடலும், மற்ற தெய்வீக பாடல்களும் படங்களும் மிக அருமை. தென்னாங்கூர் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கனின், மங்கள ஆர்த்தியை மனமுருக கண்டு தரிசித்துக் கொண்டேன். திருவானைக்கா என்னப்பன் ஈஸ்வரரையும், அம்பிகையையும் மனம் கனிந்து வழிபட்டேன். கோவிலைப்பற்றிய சிறந்த தகவல்களுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. காணொளி தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி.
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மிகவும் பிடித்தது சிவஸ்தலங்களில் திருவானைக்கோவில் உம் ஒன்று. நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அறிந்திராத புராணம் அறிந்தேன். திருஆனைக்காவல் பிடித்த தலம். ஒரே ஒரு முறை சென்றதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. சகோ..

   நீக்கு
 6. திருவானைக்கோவில் தரிசனம் மிக அருமையாக இருந்தது.
  பாண்டுரங்கன் திருமலை பெருமாளாக காட்சி கொடுத்த காணொளி மிக அருமை. எனக்கும் வந்தது வாட்ஸ் அப்பில்.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..