நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 05, 2022

மங்கல மார்கழி 21

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.. 166
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 21


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


தாயே தந்தை யென்றும் தாரமே கிளை மக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோ ராசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியா ளென்னைக் கொண்டருளே.. 1028
-: ஸ்ரீ திருமங்கையாழ்
வார் :-
*
-: சிவ தரிசனம் :-

தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
திருவெண்ணெய் நல்லூர்


இறைவன்
ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை

தீர்த்தம் பெண்ணை
தலவிருட்சம்
புன்னை, மூங்கில்

அம்பிகை வெண்ணெய் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபட்ட திருத்தலம்..


நம்பி ஆரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தலம்..
*
பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா
எத்தான்மறவாதே
நினைக்
கின்றேன் மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள்துறையுள்
அத்தாஉனக்காளாய் இனி
அல்லேன் எனலாமே..7/1
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருப்பொன்னூசல்
திருப்பாடல் எண் - 4


நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
இன்றும் ஒரு காணொளி..
சந்நிதானத்தில்
ஸ்வாமி தரிசனம்..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. காணொளி கண்டேன்,  கைகூப்பினேன்.

  பதிலளிநீக்கு
 2. தரிசித்தேன் ஜி வாழ்க வையகம்...

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப வருடங்களாய் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் திருத்தலம் திருவெண்ணெய்நல்லூர். இன்னமும் கிடைக்கலை. இங்கே கிடைத்த தரிசனத்துக்கு நன்றி. காணொளி பின்னர் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய திருப்பாவை பாடல் அருமை. பாடி பரந்தாமனை தொழுது கொண்டேன். திருவெண்ணெய்நல்லூர் ஈஸ்வரரையும், அம்பிகையையும் மனதாற வேண்டியபடி தரிசித்து கொண்டேன். தெய்வ தரிசன படங்கள் அழகு. அந்த அருமையான கோவில் விபரங்களை தந்து இங்கேயே இறைவன், இறைவியை தரிசனம் செய்ய வைத்தமைக்கு உங்களுக்கு நன்றி. 🙏.

  காணோளி கண்டு ஐயப்ப ஸ்வாமியை தரிசனம் செய்து மனநிம்மதியடைந்தேன். எல்லா பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. பாசுரங்களோடு நல்ல தரிசனம். காணொளி வழி தரிசனமும் ஆயிற்று

  கீதா

  பதிலளிநீக்கு
 6. எங்கள் அம்மா இருந்தபோது உத்தரகோசமங்கையை நினைத்து தினமும் பாடுவார்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..