நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 04, 2021

கோடி உற்சவம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த
செவ்வாய்க்கிழமை முதல்
தஞ்சையில்
நடைபெற்று வந்த
ஸ்ரீ கோடியம்மன்
காளியாட்ட உற்சவம்
நேற்று முன் தினம்
நிறைவு பெற்றதன்
காணொளிக் காட்சிகள்..




Fb ல் வழங்கிய நண்பர்
திரு.குணசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***



தஞ்சை மேல ராஜவீதி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
திருக்கோயிலில்
காளி பிரவேச தரிசனம்..



கும்பிட்டார் குறையிரந்தார்
கோடியம்மன் சந்நதியில்
கோடியம்மன் எழுந்து வந்தாள்
குறை தீர்க்க வீதியினில்

நம்பி நின்றார் வாசலிலே
நாயகியும் தேடி வந்தாள்
நானிருக்க பயம் எதற்கு
என்றவளும் ஆடி வந்தாள்..

தேடி வரும் கோடியம்மா
போற்றி உந்தன் பாதம் அம்மா..
ஏற்றி வைக்கும் திரு விளக்கில்
முகம் காட்டும் கோடியம்மா..

பச்சை என்றும் பவழம் என்றும்
ஆடி வரும் கோடியம்மா..
ஊர் முழுதும் காத்துப் பகை
தீர்க்க வேணும் கோடியம்மா..

தீப மணித் திருவிளக்கே
கோடியம்மா கோடியம்மா..
தெய்வ மகள் பேர் வாழ்க
போற்றி போற்றி போற்றியம்மா!..

ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. ஸ்ரீ கோடியம்மன் அனைவரின் வாழ்விலும் நல்ல பலன்களை தந்து வரமளிக்க வேண்டும். அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை மனங்குளிர தரிசனம் செய்து கொண்டேன். காணொளிகள் கண்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தங்களது கருத்துரைக்குக் காத்திருக்கிறேன்.. நன்றி..

      நீக்கு
  2. தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. காணவேண்டிய விழா. பகிர்ந்து சிறப்பு செய்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தரிசித்தேன்.  தஞ்சைக் கோவில்கள் பெயர், குறிப்பாக கொங்கணேஸ்வரர் கோவில் பெயர் பழைய நினைவுகளை மீட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம்..
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காணொளியுடன் படங்களும் பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. காளியாட்டம், காளி பிரவேச தரிசனம் மிக அருமை.
    கோடியம்மன் மேல் நீங்கள் இயற்றிய கவிதை அருமை.
    கோடியம்மன் அனைவருக்கும் நல்வாழ்க்கை அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கும்பிட்டோர் அனைவரையும் கோடியம்மனின் திருவருள் காத்து நிற்கட்டும்...

      அன்னை ஆருயிர்கட்கு ஆறுதல் அளிப்பாள்..

      ஓம் சக்தி.. ஓம் சக்தி..

      நீக்கு
  8. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு.

    ஓம் சக்தி. அனைவருக்கும் அன்னை அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    காணோளி மூன்றும் கண்டேன். சக்தியின் வீதி உலா ஆட்டமும்,அன்னை கோவிலுக்குள் ஆடிக் கொண்டு வரும் போதும் நன்றாக உள்ளன. அம்மன் வேண்டி தாங்கள் இயற்றிய பாடலும் அருமை. அன்றே பாடலை படித்து காணொளியும் பார்த்து விட்டேன். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      மீண்டும் வருகை தந்து கருத்துரைத்த தங்களுக்கு நன்றி..

      அகிலம் எல்லாம் விளங்கும்
      அம்மன் அருள்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..