நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 22, 2020

மார்கழி முத்துக்கள் 07

 தமிழமுதம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..(020)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 07

ஸ்ரீ கள்ளழகர் - அழகர்மலை
கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவங் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..  

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீமந் நாராயணன் - மேல்கோட்டை
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு..(2122)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஐயாறு


இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அருள்மிகு ஐயாறப்பர்..

அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி 



தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி 
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு


கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருஐயாறே!..(1/130) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 07  


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
என்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..
***

திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 03 -04


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்... 3

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்... 4

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. காலை வேளையில் கள்ளழகர் தரிசனமும், மேல்கோட்டை ஸ்ரீமந் நாராயணன் தரிசனமும் கண்களுக்கு குளிர்வாக இருந்தது.

    திருஐயாறு இறைவன்
    ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் இறைவி ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்துக் கொண்டேன். பாடல்கள் பதிகங்கள், பாசுரங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இப்போது இந்த மார்கழியில் தினமும் காலையில் தங்கள் தளம் வந்தால்,கோவிலுக்கு சென்று வந்த பூரண திருப்தி உணர்வு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வேளையில் அருமையான தரிசனமும் அற்புதமான பாடல்களும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..