நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 20, 2020

கண்டேன் கயிலை..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று அமாவாசை..
ஆடி அமாவாசை..

அப்பர் ஸ்வாமிகள்
திரு ஐயாற்றில்
திருக்கயிலாய தரிசனம்
கண்ட நாள்..

இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
திருக் கயிலாய தரிசன
திருப்பதிகம்..
***
நான்காம் திருமுறை
மூன்றாவது திருப்பதிகம்

இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி..
***

அம்மையும் அப்பனும்
சகல உயிர்களிலும்
பொலிந்து நிற்பதைக்
கண்ணாரக் கண்ட ஸ்வாமிகள்
அருளிய திருப்பதிகம்..

காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன க
ண்டேன்!..(1)

போழிளங் கண்ணியினானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றி என்றேத்தி வட்டம்
இட் டாடா வருவேன்
ஆழி வலவன் நின்றேத்தும் ஐயா
றடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (2)

கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
எரிப்பிறைக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடி 
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந்தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்றபோது
வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(3)

சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
பிறை இளங் கண்ணியினானைப்
பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயிலாலும் ஐயா
றடைகின்றபோது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல்
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (4)

ஏடு மதிக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடிக் 
காடொடு நாடு மலையுங் கைதொழுதாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (5)

 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து..

தண்மதிக் கண்ணியி னானைத்

தையல் நல்லா ளொடும் பாடி
உண்மெலி சிந்தையன் ஆகி உணரா
உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்துறை கின்ற ஐயா
றடைகின்றபோது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி
வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (6)

கடிமதிக் கண்ணியி னானைக்
காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயா
றடைகின்றபோது
இடிகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (7)

விரும்பு மதிக் கண்ணியானைத் மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலைஎழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயா றடைகின்றபோது
கருங்கலைப் பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(8)

நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
முற்பிறைக் கண்ணியினானை
மொய்குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும்
ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா
றடைகின்றபோது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (9)

திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி 
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினியென்னா வருவேன்
அங்கிள மங்கையராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(10).

இளமண நாகு தழுவி வரும் ஏறு
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்

கண்டறி யாதன கண்டேன்!.(11)



பொல்லா வினையின் காரணத்தால்
இவ்வருடம் காவிரிக் கரையில்
அமாவாசை தர்ப்பணம்
செய்வதற்குத் தடை விதிக்கப்
பட்டுள்ளது.

அருள்மிகு ஐயாறப்பர்
அருள்தரு அறம் வளர்த்த நாயகியுடன் 
எழுந்தருளும் வைபவம் திருக்கோயிலின்
உள்ளேயே நிகழும் என சொல்கிறார்கள்..

கைத் தொலைபேசியில் எல்லாமும்
 செய்ததால் ஒழுஙகமைவு சரியாக
 இல்லை... பொறுத்தருளவும்...

கயிலாய நாதனைக் கண்ணில்
நிறுத்தித் தரிசிப்போம்!..  
மங்கலமும் மனையறமும்
விளங்கப் பெறுவோம்!.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

24 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு.   ஐயாறப்பர் அருள் செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே வாழ்க..

      நீக்கு
  2. சிறப்பான பதிகத்தோடு கூடிய பகிர்வுக்கு நன்றி. அருமையான பதிகத்துக்கு ஏற்ற படங்கள். வரிக்குயில் என்றால் இத்தனை நாட்கள் எப்படி இருக்கும்னு தெரியாமல் இருந்தது. இன்று கண்டு கொண்டேன். அனைத்துப் படங்களும் பொருத்தமாக அமைந்து விட்டன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வரிக்குயில் ஜோடியை நானும் பார்த்தது இல்லை.. எப்படியோ படம் கிடைத்தது..
      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. இங்கேயும் அம்மாமண்டபம் படித்துறை நான்கு மாதமாகப் பூட்டியே இருக்கிறது. கிரஹணத்தின்போது சிலர் மேற்கே உள்ள கரையில் தர்ப்பணம் செய்ய வந்தப்போவும் விரட்டி விட்டதாகச் சொன்னார்கள். காலம் தான் இந்த அலங்கோலத்தைச் சரி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      காலம் தான் இந்த அலங்கோலத்தை சரி செய்ய வேண்டும்...

      மீள் கருத்துரைக்கு நன்றியக்கா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உங்களுடன் நாங்களும் கண்டறியாதன கண்டோம். இந்தப் பாட்டிற்கு பிறிதொரு பாட்டை ஈடாகக் கூறமுடியுமோ? இவற்றையெல்லாம் ரசிக்கவே எம்பெருமான் நமக்கு இப்பிறவியைத் தந்துள்ளானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ..

      இதையெல்லாம் ரசித்து மகிழத் தான் இந்தப் பிறவி.. நல்ல கருத்து..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமை ஐயா...

    இணைத்த படங்கள் மனதை கவர்ந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் மிகவும் அழகு ஜி
    தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பாடலுக்கு பொருத்தமான படங்கள்
    பாடலைப்பாடி கயிலை நாதனை மனகண்ணில் கொண்டு வந்து தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  9. படங்களை பொருத்தமாக இணைத்து சிறப்பான பதிகத்தையும் பகிர்ந்தது சிறப்பு.

    எல்லோரும் நலமாக இருக்க எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      எல்லாரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொள்வோம்..

      நன்றி..

      நீக்கு
  10. திருப்பதிகம் அருமை. தெய்வ தரிசனம் கிட்டியது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  11. அருமை , இணையான பறவை விலங்குகள் படங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. பதிகமும் தெய்வதரிசனமும் அருமை சார்

    துளசிதரன்

    அண்ணா படங்கள் அட்டகாசம். பொருத்தமும் கூட! பதிகமும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்/ கீதா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..