நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 11, 2020

சண்முகத் தெய்வமணி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
தீனினும் இனிய தீந்தமிழ்ப்பாடல் ஒன்று..

அருட்திரு வள்ளலார் ஸ்வாமிகள் 
செய்தருளிய திருப்பாடல்..


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்


மருவு பெண்ணாசை மறக்க வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்



தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே..
-: திருச்சிற்றம்பலம் :-

முருகா வருவாய்.. முதல்வா வருவாய்.. 
முத்துக் குமரா வருவாய்.. வருவாய்..  
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. முருகா சரணம்
    முத்துக் குமரா சரணம்
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  2. சூலமங்கலம் ராஜலஷ்மி குரல் காதில் ஒலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல். சின்ன வயசில் இருந்தே அறிமுகம் ஆனதும் கூட. ஆறாம் வகுப்பில் தமிழ்ப் பாட நூலில் கடவுள் வாழ்த்துக்கு வைத்திருந்த பாடல். பின்னாட்களில் கந்தகோட்டம் முருகனைப் பார்க்கும் ஆவலை அதிகரித்த ஆவல். முதல் முதல் 1963 ஆம் ஆண்டு கந்தகோட்டத்து முருகனைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைத்த பாடல்.

    பதிலளிநீக்கு
  4. ஓம் சரவணபவ!

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நான் விரும்பிக்கேட்கும் பாடல்களில் ஒன்று. பகிர்வு கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. திருப்புகழ் பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..