நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 02, 2019

விநாயக போற்றி



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு!..


மலரில் இருந்து மணத்தைப் பிரிக்க முடிந்தாலும் -
தமிழில் இருந்து பிரித்தறிய முடியாத சொல் - ஒளவையார்.

விநாயகப்பெருமானின் அருளைப் பெற  -  நமக்கு, 
அவர் அறிவுறுத்தும் எளிய வழி..

கடும்விரதம் , அருந்தவம் என - உடலை வருத்திக் கொள்ளாமல் -
பவளம் எனச் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய
விநாயகப் பெருமானது திருவடிகளை,  
நாளும் தவறாது நல்மலர்களால் வணங்குவோர்க்கு -
கலைமகளின் அருளால்  பேச்சு வன்மையும்  நல்ல மனமும் உண்டாகும்.. மலர்களுள் சிறந்ததாகிய செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருட்பார்வையும்  கிட்டும்... 

இதில் -
மேனி நுடங்காது என்பதற்கு -
பெருமானை வணங்குபவர் மேனி பிணிகளால் வருந்தாது...
உடல் நலங்கொண்டு விளங்கும் எனவும் கொள்ளலாம்... 


ஆக, விநாயகப் பெருமானை அன்புடன் அருகம் புல் அல்லது அன்றலர்ந்த மலர்  கொண்டு வணங்கி வருவோர்க்கு - அறிவும் திருவும் ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஒளவையாரின் அமுத மொழி.

இத்திருப்பாடல் - ''மூதுரை'' எனும் நீதி நூலின்  காப்புச் செய்யுள் .

இந்த மூதுரையில் தான்,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்..

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ (டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.    

- என  அமுத விருந்தளிக்கின்றார் - ஒளவையார்..
பின்னும், 


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா..

என்று - ''நல்வழி'' எனும் நூலில் -
மக்கள் இயற்ற வேண்டிய அறச்செயல்களை வகுத்தளிக்கும் போது
துங்கக்கரி முகத்துத் தூமணியாகிய கணபதியை
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றார்...

இந்த நூலில் தான்-

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
'இல்லை' என மாட்டார் இசைந்து..

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்றறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்..

ஆற்றங் கரையின் மரமும், அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும்அன்றே; ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்;
பழுதுண்டு வேறோர் பணிக்கு..  

- போன்ற இன்சுவைப் பாடல்கள் விளங்குகின்றன. 

இந்தப் பாடல்களை ஊன்றிக் கவனித்தால் அறிவின் மகத்துவத்தையும் செல்வத்தின் அவசியத்தையும் ஒளவையார் வலியுறுத்துவதை அறியலாம்.

சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்றுய்ய வேண்டும் எனில் -
நல்ல அறிவு வேண்டும் என்பது திண்ணம்...

அப்படிப்பட்ட அறிவின் வடிவாகத் திகழ்வது - 

தமிழ்!..  

அமுதத்தமிழ்.. தமிழமுதம்.. - சொல்லிப் பாருங்கள். நாவினில் தேனூறும்.

மற்ற மொழிகளுடன் அமுதம் கலந்திருக்கின்றதா!.. அறியோம்!..

மற்ற மொழிகள் அறியத் தருபவை...
தமிழ் ஒன்றே - அறிவைத் தருவது!.

அதனால் தான் - பாரதிதாசன்,

''தமிழுக்கும் அமுதென்று பேர்!..'' - என்று முழங்கினார்..


இப்படி அமுதாக விளங்கும் தமிழை - இயல், இசை, நாடகம் - எனும் மூன்றின் வடிவாகத் தனக்கு வழங்குமாறு ஒளவையார் வேண்டிக் கொள்ளும் போது - 

அவர் - கணபதிக்கு  சமர்ப்பிப்பது - பால், தேன், பாகு, பருப்பு எனும் நான்கு...

பால் - தன்னுடன் நான்கு நற்பொருள்களைக் கொண்டு விளங்குவது...

தேன் - தனித்து மருந்தென விளங்குவது..
தானும் கெடாது... தன்னுடன் சேர்ந்தவைகளையும் கெடுக்காது.

பாகு - மூலிகைகளுடன் சேர்ந்து மருந்தெனத் திகழ்வது...

பருப்பு - சாத்வீக உணவுப்பொருட்களுள் முதன்மையானது...

இவை நான்கும் - நிவேதிக்கப்பட்ட பின் பிரசாதமாகின்றன...
இந்தப் பிரசாதமே - விருந்தெனவும் மருந்தெனவும் ஆகின்றது...

இதுவே மூளையின் இயக்கத்தினை அறவழியில் தூண்டுகின்றது...


எனவேதான் விநாயகர் - சிற்சில தலங்களில்
தூண்டுகை விநாயகர் எனும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்...

இப்படி  - மூளையின் இயக்கம் தூண்டப்பட்டு விட்டால்,
எல்லாம் ஒன்றென உணர்ந்து சித்தம் - சிவம் ஆகிவிடும்..

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்..

இப்படி உணரச் செய்வது தான் - இந்த நிலையை எய்துவதைத்தான்,

''சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி..''

என்று விநாயகர் அகவல் மூலமாக நிலைநிறுத்துகின்றார் - ஒளவையார்..


ஒளவையார் நமக்களித்த நல்வழிப்படி  
விநாயகப் பெருமானைச் சரணடைவோம்!..

பெருமானின் திருவருள்
நல்லோர் அனைவரையும் வாழ்விப்பதாக!..

துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..

ஓம் கம் கணபதயே நம:
ஃஃஃ 

18 கருத்துகள்:

  1. கொழுக்கட்டை மார்னிங்!

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்... எப்பவோ பள்ளி நாட்களில் படித்தது! அவ்வையாரின் அமுதமொழிகளைச் சுவைக்கத் தந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகிய விளக்கம் ஜி
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் எமது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகரைக் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உங்க தளத்துல நிறைய படிக்கவேண்டியிருக்கு. மெதுவா படிக்கவேணும்.

    விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்

    குவைத் போனதுனால, கொழுக்கட்டை படங்களை பகிர்ந்துக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...

      சமையலறை இல்லாமல் போனதில் இருந்து மிகுந்த சிரமம்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
    ஸிறப்பு பதிவு மிகவும் அருமை.
    பாடல்கள், படங்கள் நல்ல தேர்வு.

    ஒளவையாரின் அமுத விருந்து மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      பிள்ளை - யார் என்று குறித்து வாழ்த்து கூறியமைக்கு மகிழ்ச்சி..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். எத்தனை சிறப்பான தகவல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அனைத்துப் படங்களும் பாடல்களும் அமிர்தம். ஔவை இல்லாத வினாயகத் துதி ஏது.
    //அன்று இடாவிடில் இன்று நமக்கும் யாரும் இடார்// என்ற மொழி எத்தனை உயர்ச்சி.
    இடர் வரும்போதும் வராத போதும் பார்வதி குமாரனை நினைக்க
    மனம் அடங்கும்.
    அன்பு துரை செல்வராஜுக்கு வாழ்த்துகள். கணேசன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      ஸ்ரீ கணேசனின் அருள் எங்கெங்கும் நிறையட்டும்...
      அன்பின் வாழ்த்துரையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு