நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 05, 2019

பிள்ளையார் தரிசனம் 2

தன்னிடம் துடுக்காக நடந்து கொண்டாள் என்பதற்காக
காவிரியைத் தனது கமண்டலத்துக்குள் அடைத்து விட்டார் அகத்தியர்...

நதியின் ஓட்டம் தடைப்பட்டதால் நாடு வறண்டு விட்டது...

தேவாதி தேவர்களுக்கு தமிழ் காத்த அகத்திய முனிவரைக் கண்டு நடுக்கம்..

கடலைக் கையில் அள்ளிக் குடித்தவராயிற்றே!...

அவரிடம் சென்று காவிரி துள்ளி விளையாடினாள்..
குள்ள உருவங்கண்டு எள்ளி நகையாடினாள்...

சிறுபிள்ளைத் தனத்தால் சிறைப்பட்டாள்...

அகத்தியரின் சினம் குறைந்திருக்குமோ?..
காவிரிக்காக பரிந்து பேச நமக்கும் கூடுமோ?..

தவித்து நின்ற தேவர்கள் ஈசனின் தலைமகனாகிய
விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்...

அந்த அளவில் - காக்கை வடிவங்கொண்டு
அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டு
காவிரியை இப்பூமியில் ஓடவிட்டார்...

அகத்தியரின் கோபத்தைத் தான் தாங்கிக் கொண்டார்...

சிறை மீட்ட செல்வக் கணபதி 
தமிழகத்தை வாழச் செய்த வழங்கப்படும்
இந்த ஐதீகத்தை யார் மறந்தாலும் தஞ்சை மக்கள் மறக்கவே மாட்டார்கள்...

நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை... - என்று,
அகத்தியரின் கோபத்தைத் தான் தாங்கிக் கொண்டார் பிள்ளையார்..

அவரைத் தான் பிள்ளை யார்?... என்று கேட்கிறார்கள்
தமிழகத்து நல்லோர்களுள் சிலர்!...

மகாபாரதத்தை எழுதுவதற்காக வியாசர் வேண்டி நின்றபோது

எழுத்து வேகம் தடைப்படாமல் சொல்ல வேண்டும்!.. என்ற
நிபந்தனையை முன்வைத்தார் கணபதி..

வியாசரும்
தாமும் தடைப்பட்டு நிற்காமல் எழுதவேண்டும்!.. என்று வேண்டிக் கொண்டார்...

ஆனாலும் இறைவனின் சித்தமாக
விநாயகரின் திருக்கரத்திலிருந்த எழுத்தாணி முறிந்து போயிற்று..

கணமும் தாமதிக்காத கணபதி தனது தந்தத்தினை உடைத்து
எழுத்துப் பணியைத் தொடர்ந்தார் என்பது புராணம்...

ஸ்ரீ ஹரித்ரா கணபதி
பிள்ளையார்பட்டி - தஞ்சாவூர் 
பிள்ளையார் பட்டி - தஞ்சாவூர் என்றதும் சற்றே யோசிப்பீர்கள்...

தஞ்சை மருத்துவக் கல்லூரியைக் கடந்து வல்லம் செல்லும் வழியில் உள்ளது பிள்ளையார்பட்டி எனும் கிராமம்...

பெரிய கோயிலுக்கு மூத்தவர் இந்தப் பிள்ளையார்..
சாலையின் ஓரத்திலேயே பிள்ளையார் கோயில் உள்ளது..

மேலதிக விவரங்களை வேறொரு பதிவில் தருகிறேன்..

ஆக - 
இன்றைய பதிவிலும் பிள்ளையார் தரிசனம்..

அழகிய படங்களை வலையேற்றித் தந்த
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ செந்தூர கணபதி
திரு அண்ணாமலை
 
திரு ஆமாத்தூர் 
ஸ்ரீ கள்ள வாரணர் - திருக்கடவூர் 
கஞ்சனூர் 
ஸ்ரீ சுந்தரகணபதி - கீழ்வேளூர் 
ஸ்ரீ மணக்குள விநாயகர்
விநாயக சதுர்த்தியன்று பிள்ளையார் பட்டி திருக்கோயில் நிகழ்ந்த
பஞ்ச மூர்த்தி தரிசனம்...


கடல் கடந்தும் கணபதி 
மேலே காணப்படும் விநாயகர் ஊர்வலம் ஆப்பிரிக்காவில்!..
எந்த நாடென்று தெரியவில்லை...


ஸ்ரீ மாணிக்க விநாயகர்
திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் 
குரு வடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை தான் வந்தெனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே...

- என்று, விநாயகப் பெருமானிடம் - ஔவையார் வேண்டிக் கொள்கிறார்...


இன்று குருவாரம் எனும் வியாழக்கிழமை..
கூடவே ஆசிரியர் தினம்...

குரு தேவோ மகேஸ்வர .. என்று வணங்கும் நாள்...
நாமும் அவ்வாறே வாழ்த்தி வணங்கி நிற்போம்...

ஸ்ரீ சங்க சக்ர கணபதி
ஓத வினை அகலும் ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப் போர் தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்..
-: பெருந்தேவனார் :-

ஓம் கம் கணபதயே நம: 
ஃஃஃ 

12 கருத்துகள்:

 1. ஆம்... தந்தத்தை உடைத்து பாரதம் எழுதியதை மறந்து விட்டார்களே... ஒரு முருகன் அவர்களை மன்னிக்கட்டும்!

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
 2. ஆசிரியர் தினத்தில் ஓம்காரப்பொருளை இறைஞ்சுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பிள்ளையார் தரிசனம் அருமை.
  அனைத்து படங்களும், செய்திகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

  வழங்கிய படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆசிரியர் தினத்தோடு பிள்ளையாரின் புராணமும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதிவில் உள்ள அனைத்து விநாயகரையும் அந்தந்த கோயில்களில் பார்த்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..