நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி



கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..


ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்!..
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்!
உருவில் அழகாய் மலர்ந்தவனாம்!..
உயிரில் உயிராய் கலந்தவனாம்!.. 


ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..


குருவாயூருக்கு வாருங்கள்..
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்!..
ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!..


படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே!..
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே!.


ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்!..
வாழிய பாடுங்கள்.. வலம் வந்து தேடுங்கள்..
வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!..


கேட்டதும் கொடுப்பவனே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
கீதையின் நாயகனே. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நீயுள்ள சந்நிதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நெஞ்சுக்கு நிம்மதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..


நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறை தீர்ப்பு..
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..
பசிக்கு விருந்தாவான்.. நோய்க்கு மருந்தாவான்..
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே!..

அனைவருக்கும்அன்பின் இனிய
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    லிஸ்ட்டில் "அமரஜீவிதம்" பாடலைத் தேடி ஏமாந்தேன்... இன்று நான் கூட ( !!!! ) கண்ணன் பிறந்தான் பாடலைப் போடலாமா என்றுதான் நினைத்தேன். அப்புறம் வழக்கம் போலவே போட்டுவிட்டேன்!!

    பதிலளிநீக்கு
  2. ஊர் வந்து சேர்ந்து குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டிருப்பீர்கள். வாழ்த்துகள். இனிய பாடல் வரிகள் மனதை மகிழ்வித்தன. சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து..

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள் ஜி

    அனைத்தும் அற்புதமான பாடல் வரிகள் ஜி

    பதிலளிநீக்கு
  4. இந்த வருஷக் கிருஷ்ண ஜயந்தி குடும்பத்தாரோடு கொண்டாடும் வகையில் அமைந்ததும் ஸ்ரீகிருஷ்ணன் அருளே. அனைத்துப் பாடல்களும் பல முறை கேட்டதோடு அல்லாமல் மிகவும் பிடித்த பாடல்களும் கூட! பகிர்வுக்கு நன்றி. எங்கள் ப்ளாக் பக்கம் ஸ்ரீஜயந்தி சிறப்புப் பாடல் வருமோனு நினைத்தேன். ஆனால் அந்தப் பாடலிலும் கண்ணன் இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் பாக்களும் அழகு... கிருஸ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.

    துரை அண்ணன் உங்களுக்காக அம்பேரிக்காவில இருந்து அழகிய காய்கள் கொண்டு வந்து போட்டிருக்கிறேன் .. நீங்கள் பார்க்காமல் இருக்கிறீங்களே இது நியாயமோ?:).

    பதிலளிநீக்கு
  6. அன்பு துரை செல்வராஜு,
    கண்ணன் பிறந்திருக்கும் இந்த வேளையில் உங்கள் வீட்டிலும் நல்வரவாக இன்னோரு கண்ணன் வர என் ஆசிகள்.
    பாடல்களும் ப்டங்களும் அப்படியே கண்ணனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டன.
    அவன் தெய்வீக அருளில்
    உலகமே மகிழ்ந்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் எபி கருத்துரை கண்டு, இங்கு வந்தேன்... விடுமுறை சிறப்பாக அமையட்டும் ஐயா...

    அடடே... நான் நினைத்த இரு பாடல்கள் இங்கும்...!

    பதிலளிநீக்கு
  8. பாடல்களும் படங்களும் நன்றாக இருக்கிறது.

    குடும்பத்தோடு மகிழ்வோடு இருப்பீர்கள். சிறப்பாக எல்லாம் நடக்கட்டும்..

    கீதா

    விடுமுறைக்கு வந்திருக்கிறீர்களா. மகிழ்வான நாட்களாக அமைந்திட வாழ்த்துகள்.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. இனிமையான பாடல்களின் வரிகள்.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். தமிழகத்தில் உங்கள் நாட்கள் மகிழ்வாக அமைந்திட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. என் கருத்து..தொடர்ச்சி..நேற்று தஞ்சாவூரில் உள்ள யாதவ கண்ணன் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் புதிய பதிவினை (Yadhava Kannan Temple, Thanjavur) நான் ஆரம்பித்ததைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பகுதி மிக அருமை.
    அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்.
    நேற்று தஞ்சைகோபுரத்தை (பைபாஸ் ரோடில் போகும் போது தூரத்தில்) பார்க்கும் போது உங்கள் நினைவு வந்தது. குடும்த்தோடு இல்ல விழாவில் களித்து இருப்பீர்கள் என்று சாரிடம் சொல்லிக் கொண்டு போனேன். கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. படங்களும் அத்ற்கேற்ற பாடல்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..