நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 19, 2019

கலை விருந்து 8

இன்றல்ல... நேற்றல்ல..

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரிய கோயிலைப் பற்றிய
பல்வேறு விமர்சனங்களைக் கேட்டிருக்கிறேன்... படித்திருக்கிறேன்...

எங்கள் ஆசிரியர் ஒருவரே -
சகித்துக் கொள்ள முடியாத வித்தியாசமான கருத்துக்களைச் சொல்வார்...

இன்னும் பலர் -
இந்தக் கோயிலுக்குப் போனால்
ஆன்மீக உணர்வு வருவதில்லை..
சுற்றுலா வந்த உணர்வு தான் மேலிடுகிறது.. - என்பார்கள்...

அதையெல்லாம் கடந்து ஒவ்வொரு சமயமும்
புதுமையாகக் காட்சி தருகின்றது - என்பது நிதர்சனம்...

இன்றைய பதிவிலும் சில படங்கள் தங்களுக்காக...

முந்தைய பதிவுகள்...
கலை விருந்து 5   கலை விருந்து 6 
கலை விருந்து 7 


ஸ்ரீ சித்தர் கருவூரார் 
கருவூரார் சந்நிதிக்குப் பின்புறமுள்ள மரத்தில் நேர்ச்சை முடிச்சுகள் 
வடக்குக் கோட்டத்தில் வைரவரும் துர்காம்பிகையும் 
பூதகணம் தாங்கும் பிரம்மாண்டமான கோமுகம் 

ஸ்ரீ சுப்ரமண்யர் கோட்டமும் சண்டேஸ்வரர் கோயிலும் 
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் 
ஸ்ரீ துர்கை (சுப்ரமண்யர் கோட்டத்தின் வடபுறம்) 

மேலே கண்டுள்ள படம்
ஸ்ரீ முருகன் சந்நிதிக்கு வடபுற கோட்டத்திலுள்ள ஸ்ரீ துர்கை..

எவ்வித அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்படுவதில்லை..
என்ன காரணம் என்பதுவும் தெரியவில்லை...

ஆனாலும் விஷேச நாட்களில்
பக்தர்கள் தாங்களாகவே மாலைகளையும் மலர்ச்சரங்களையும் 
அணிவித்து விளக்கேற்றி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

ஸ்ரீ துர்காம்பிகையின் சிற்பத்துக்குக் கீழ்
அம்பிகையின் பராக்கிரமத்தைக் காட்டுகின்ற புடைப்புச் சிற்பம்
கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது...

சண்ட முண்ட வதம் 
மேலும் படங்களைக் கொண்ட Drive  ஒன்று எங்கோ மறைவாக 
சிக்கிக் கொண்டது...

அது எப்போது கையில் கிடைக்குமோ தெரியவில்லை...

தஞ்சை ஸ்ரீ தியாகேசரும் அல்லியங்கோதை அம்பிகையும்

தஞ்சை மாநகரில் பிறந்து வளர்ந்த எனக்கு
பெரிய கோயிலைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும்
என்றென்றும் இனிமையானவை.... 

எத்தனை எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
இந்த நினைவுகள் என்னை விட்டுப் போகக் கூடாது..
- என்று வேண்டிக் கொண்டிருக்கின்றேன்...
ஸ்ரீ ராஜராஜ சோழனும் உலகமாதேவியும் 
அந்த பிரார்த்தனைகளுடன் -
அடுத்து வரும் பதிவுகளில்
வேறு ஒரு திருக்கோயிலைத் தரிசிப்போம்..
***
கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதந்தன்னை இறப்பொடு பிறப்பிலானைப்
பெரும்பொருட் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே...(4/74)
-: அப்பர் பெருமான் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    // எங்கள் ஆசிரியர் ஒருவரே- சகித்துக்கொள்ள முடியாத வித்தியாசமான க்கருத்துகளைச் சொல்வார் //

    ஹிஹிஹிஹிஹிஹி... நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      எங்கள் ஆசிரியர் என்றால் - பள்ளி நாட்களில்..

      இஷ்டப்பட்டுக் கேட்கவும் இயலாது..
      கஷ்டப்பட்டு கட் அடிக்கவும் முடியாது...

      என்னே கொடூரம்!..

      நீக்கு
    2. ஸ்ரீராம்ஜி எங்கள் பிளாக் ஆசிரியர்கள் என்று சொல்லவில்லையே...

      ஹா.. ஹா.. ரசித்தேன்

      நீக்கு
  2. எல்லாப் படங்களும் அருமை. தஞ்சைப் பெரிய கோவில் நிதானமாகப் பார்த்து நாற்பது வருடங்களுக்கும் மேலாகிறது. 2014 இல் ஒருமுறை வேகமாகச் சுற்றி வந்ததோடு சரி... மறுபடியொரு பயணம் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      ஆரஅமற இன்புற்று இருந்து வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. ஸ்ரீராம்...இதெல்லாம் ஒத்திப்போடாதீர்கள்.

      உங்க பாஸோட கும்பகோணத்துல 4-5 நாட்கள் டேரா போட்டு (செலவு அவ்வளவு ஆகாது), 50 பழம்பெரும் கோவில்களை தரிசனம் செய்துவிடலாம். இருவருக்கும் மிக்க திருப்தியாக இருக்கும் (Well Spent Leave என்று). ஐடியா எங்கிட்ட கேளுங்க.... இதுல பசங்களைச் சேர்க்க நினைக்காதீங்க...சரிப்பட்டுவராது.

      நீக்கு
    3. கும்மோணத்துக்கும் தஞ்சாவூருக்கும் வித்தியாசம் இருக்குங்கோவ்...

      கும்பகோணம் ஒரு சந்தைக் கடை... அவ்வளவு தான்...

      எல்லாவகை வியாபாரங்களும் உண்டு...

      உலோகப் பொருட்கள் தஞ்சையில் தான் மலிவு..

      ஆனால் நம்மவர்களுக்கு
      நயமான பொருள் ஒன்று மலிவான விலை என்றால் தான் பிடிக்காதே!.

      நீக்கு
  3. மிக அருமையாக தரிசனம் செய்து வைத்தீர்கள்.
    ஸ்ரீதியாகேசரும், அல்லியம்கோதையும் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். மழை பெய்ய அருள வேண்டும். பசுமையும், வளமும் மீண்டும் எங்கும் காண அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      பசுமையும் வளமையும் மீண்டும் நிறையட்டும்....

      வாழ்க நலம்...

      நீக்கு
  4. அற்புதமான காட்சிகள் ஜி நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமையாக இருக்கு.

    சார்...கோவிலின் வெளிப்புறத்தில் உள்ளவைகள் சிற்பங்கள் என்ற அளவில்தான் பார்க்கணும். அதற்கு அலங்காரம், வழிபாடுகள் கிடையாது. அதனால்தான் துர்க்கைக்கு அலங்காரமோ இல்லை வழிபாடுகளோ இல்லை. ஆனால் இந்த முறையை பல கோவில்களில் மாற்றிவிட்டார்கள் (அதற்கு பக்தர்கள்தாம் காரணமாக இருக்கணும். இதுல சைவ, வைணவ கோவில்கள் வித்தியாசம் இல்லை).

    தூண்களில் இருக்கும் உருவங்கள், சுற்றுப்பிரகாரங்களின் சுவர்களில் உள்ள சிற்பங்கள் (சிலவற்றைத் தவிர..அதாவது திசைக்கு ஒன்றாக நிறுவப்பட்டவை என நினைக்கிறேன்) வழிபாட்டுக்குரியவை அல்ல.

    தஞ்சைப் பகுதியிலயே, நிறைய கோவில்களில் இந்த மாதிரி உள்ள துர்க்கை சிலைக்கு எண்ணெய் பூசி, உடை அணிவித்து அதனை சுவற்றை ஒட்டி ஒரு சன்னிதியாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள் (உதாரணப் படங்கள் வைத்திருக்கிறேன்). இதுபோல வைணவக் கோவில்களில் அனுமார், நரசிம்ஹர், கண்ணன் சிற்பங்களுக்கு குங்குமம் பூசி வழிபடுவதுபோல் வைத்திருக்கிறார்கள். அவை முறையானவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

    முனைவர் ஜம்புலிங்கம் சார் இன்னும் நிறைய கவனித்திருப்பார். அவர் இதனைப் பற்றிச் சொல்லுவார்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தாங்கள் சொல்வது சரியே...
      ஆனாலும் கோஷ்டத்தில் அம்பிகையை அலங்கார ரூபத்தில் பார்த்த கண்கள் அவ்வண்ணம் காண்பதற்கு அல்லவா விரும்புகின்றன...

      இந்த நீண்ட கருத்துரைக்குத் தனிப் பதிவே போடலாம்...

      வாழ்க நலம்....

      நீக்கு
  6. கோவில் படங்கள் மீண்டும் அதன் பிரம்மாண்டத்தை வலியுறுத்துகின்றன.
    துர்கை அம்மா,அலங்காரம் இல்லாமல் இருப்பது மனதுக்கு ரசமாக இல்லை.

    கோவிலொழுகு தெரியாத போது இந்த நிலை பற்றிச் சொல்ல்வும் முடியவில்லை.
    தஞ்சை மீண்டும் அதிக வளம் பெற வேண்டும்.

    பழம் பெரும் பெருமைகள் மீட்கப் படவேண்டும்.
    அந்தப் பெருவுடையாரே வழிகாட்ட வேண்டும்.
    நன்றி துரை மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அம்மா..

      தாங்கள் சொல்வது போல அல்லாமல் ஏதோ ஒரு கால கட்டத்தில் அந்த வழிபாடுகள் தடைபட்டு - பின்னர் அதுவே வழக்கமாகி இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்...

      தொல்லியல் துறையின் நிர்வாகத்திலுள்ள கோயில் இது..

      ஏதாவது சொல்லப்போய் தவறாகி விடக்கூடும்...

      எல்லாவற்றுக்கும் இறைவனே துணை...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தற்சமயம் தஞ்சைக்கோயிலில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்றே அறிகிறேன். சில காலங்கள் நடுவில் இல்லை. அதன் காரணம் ஆகமம் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். பெருவுடையாரும் அந்த கோபுரமும் மகுடாகம முறைப்படியானது என்றும் அம்முறையில் வழிபாடு செய்யத் தெரிந்தவர் யாரும் இப்போது இல்லை எனவும் சொல்லிக் கேட்ட நினைவு! இதில் கோபுரத்தை அமைத்த பின்னர் பெருவுடையார் உள்ளே போனாரா, அல்லது பெருவுடையார் போன பின்னர் கோபுரம் எழுப்பப்பட்டதா என்றெல்லாம் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு காலத்தில் மிகவும் மும்முரமாகக் குழுமங்களில் விவாதிக்கப்பட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா ..
      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நான் DTP Center வைத்திருந்த போது தங்களது தளத்தில் பல பதிவுகளைப் படித்திருக்கின்றேன்...

      தஞ்சையம்பதி ஆரம்பிக்கப்படாத காலம் அது..

      ஆச்சர்யமாக இருக்கும்.. ஆனால் தங்களது தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த சொற்றொடர் அடேங்கப்பா.. என்றிருக்கும்..

      தாங்கள் இங்கே சொல்லியிருக்கும் விஷயத்தை தங்களது தளத்தில் வாசித்திருக்கின்றான்..

      பாணத்தைத் தவிர்த்து ஆவுடையும் பத்ம பீடமும் 32 பகுதிகள் என்று சொல்கிறார்கள்..

      கருவறையினுள்ளிருக்கும் ரகசியம் ராஜராஜ சோழன் மீண்டு வந்தால் தான் தீரும்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அதைக் குறித்து விரிவாகப் பார்க்கணும்னு ஆசை! எங்கே! எங்கள் குருநாதர் கோடி காட்டினார். கொஞ்சம் புரிந்தது. அவரைத் தான் இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. சித்தி அடைந்துவிட்டார் என்று பேச்சு! எங்களுக்காகவேனும் தரிசனம் கிடைக்காதா எனக் காத்திருக்கோம்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு பொக்கிஷங்கள்! துர்கை எளிமையாகக் காட்சி கொடுக்கிறாள். மானசிக வழிபாடு செய்யலாமே! மற்றபடி அலங்காரங்கள், வழிபாடுகள் செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சிலையின் உண்மையான அழகை மறைக்காமல் இருக்கிறார்களே, அதுக்கே நன்றி சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..
      நீங்கள் இந்த கோணத்துக்கு வருகின்றீர்களா... நல்லது..
      இதுவும் நியாயமே.. அழகு என்றென்றைக்கும் அழகு தான்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மிக மகிழ்ச்சி ..

    தெரிந்த கோவில் பார்த்த இடம் என்றாலும், தெரியாத செய்திகளும் தகவல்களும் அதிகம் என இங்கு வாசிக்கும் போது கண்டுகொண்டேன் ...

    அத்தகவல்களை அறிய கொடுத்தமைக்கு நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மிகுந்த மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..