நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 20, 2019

அழகா... அழகா..

சித்திரைத் திருவிழாவின் மற்றொரு அம்சமாக
கோலாகல கொண்டாட்டங்களுடன்
ஸ்ரீகள்ளழகர் நேற்று விடியற்காலையில்
தங்கக் குதிரையில் ஆரோகணித்து
வைகை மாநதியில் இறங்கியருளினார்...

மாநகர் மதுரையின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று...

ஈடு இணையில்லா வைபவ நிகழ்வுகளை
வலையேற்றி வழங்கிய அன்பு நெஞ்சங்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

மதுரையம்பதியை நோக்கிப் புறப்படும் கள்ளழகர் 
ஸ்ரீபாதந்தாங்கிகள் அழகர் மலையில்
ஸ்ரீ கருப்ப ஸ்வாமியிடம்
விடைபெற்றுக் கொள்ளும் திருக்காட்சி..

இந்தக் காணொளியை வழங்கிய 
அன்பின் திரு நெ.த. அவர்களுக்கு நன்றி..


அழகர் மலையிலிருந்து மதுரை மாநகருக்கு வருகை தந்த
ஸ்ரீ கள்ளழகருக்கு பேரானந்தத்துடன் வரவேற்பளித்தனர் - மதுரை மக்கள்..





இதற்கிடையில்
ஸ்ரீ கள்ளழகர் அணிந்து கொள்வதற்காக
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோதை நாச்சியாள்
சூடிக் களைந்த மாலையும்
பச்சைப் பசுங்கிளியுடன் புறப்பட்டது...

திருமாலையைச் சுமந்து வரும்
வைணவ நம்பியின் ஆனந்தத்தைக் கவனியுங்கள்...

அத்துடன் - கூடைக்குள்ளிருந்தபடி
இன்னும் மதுரை வரவில்லையா!?..- என்று ஆவலுடன்
எட்டிப் பார்க்கும் கிளியையும் பார்த்து மகிழுங்கள்..  

நன்றி - நெல்லைத் தமிழன்




வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொள்ள
வைகையில் கள்ளழகர்







ஸ்ரீவீரராகவப்பெருமாள் 






கார் கொண்ட கள்ளழகருக்கு
நீர் கொண்டு வரவேற்பு





ஆயிரமாயிரம் மக்களின்
அன்பெனும் வெள்ளத்தில்
நீந்திக் களிப்பதற்காகவே
காடு மேடுகளை எல்லாம்
கடந்து வருகிறார் கள்ளழகர்..

கள்ளழகர் கழலடிகள் போற்றி.. போற்றி..
ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ 

9 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    எனது இனிமையான மதுரை நினைவுகளை மீட்டிப் பார்க்கிறது சித்திரைத்திருவிழாப் பதிவு. அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வைகையிலும் சென்னை நதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டோட வேண்டும் என்று ஆசை வருகிறது... காவிரி என்ன பாவம் செய்தது என்கிறீர்களா? விவசாயிகளின் தெய்வம் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடவேண்டும் இறைவா...

    பதிலளிநீக்கு
  3. விழா நிகழ்வினைப் பகிர்ந்தவகையில் எங்களையும் அவ்விடத்திற்கு அழைத்துச்சென்ற உணர்வு. புகைப்படங்களை அளிக்கும் அன்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் அந்த நாட்கள் நினைவில் ஆடுகிறது. ஒவ்வொரு வருஷமும் எதிர்சேவை காணச் சென்றதும், காலை சீக்கிரமே எழுந்து சமையலை முடித்துவிட்டு அம்மாவுடன் அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணச் சென்றதும் இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது.ஊரே வைகைக்கரையில் தான் இருக்கும். எல்லோரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு சற்றும் பயமோ, கவலையோ இல்லாமல் வைகைக்கரைக்குப் போயிருப்போம். மனதில் பயமே தோன்றாது.

    பதிலளிநீக்கு
  5. காணொளியை அளித்த நெல்லைத் தமிழருக்கு மிக்க நன்றி. அருமையோ அருமை! ஸ்ரீபாதம் தாங்கிகள் பல்லக்கை ஆட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அந்தப் பல்லக்க்கைத் தொடக் கூட முடியாது. மற்றும் நெல்லைத் தமிழர் அளித்திருக்கும் மற்றப் படங்களுக்கும், நீங்கள் பகிர்ந்திருக்கும் உங்கள் நண்பர்கள் அளித்த படங்களுக்கும் நன்றி. மதுரையின் சிறப்பே இந்தச் சித்திரைத் திருவிழாத் தான். இந்த வருஷம் அன்று தேர்தல் வைத்தும் மக்கள் எவ்விதமான கலவரமோ ஆரவாராமோ இன்றி தேரிலும், மாலை எதிர்சேவையிலும் பங்கெடுத்துக் கொண்டதோடு ஓட்டளித்தலிலும் பங்கு கொண்டிருக்கின்றனர். நல்லதொரு வைபவம் சிறப்பாக நடந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  6. அழகர் திருவிழா படங்கள் எல்லாம் மிக அழகு.
    தண்ணீர் திறந்து விட்டதும் மதுரை மக்கள் குளித்து மகிழ்ந்த காட்சி மனதை மகிழ வைத்தது. இப்படியே வைகையில் தண்ணீர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
    அழகரை மகிழ்ச்சியாக தூக்கி வரும் அத்தனை கரங்களும் கொடுத்து வைத்த கரங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அழகிய காட்சிகள் காணொளியும் கண்டேன். மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  8. காணொளியும் மிகவும் அருமை... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  9. அத்தனை படங்களும் அழகு. உங்கள் மூலம் நாங்களும் விழாவினை கண்டு களித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..