நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 03, 2019

ஏழூர் தரிசனம் 7

திருநெய்த்தானத்தில் சிவதரிசனம் செய்தபின்
திருப்பழனத்தை நோக்கிப் புறப்பட்டோம்...

திருநெய்த்தானத்தை அடுத்த ஊர் திருஐயாறு.. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் திருப்பழனம்...

திருப்பழனத்தை நெருங்கும் முன்பாகவே பெருத்த ஆரவாரம்...

வானவெடிகளின் பெருஞ்சத்தமும் கேட்டது....

என்னவென்று விசாரித்தால் பல்லக்கு புறப்பட்டு காவிரியில் இறங்குகின்றது என்றார்கள்...

ஸ்கூட்டியை அங்கேயே ஓரமாக நிறுத்தி விட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்துள் புகுந்து விரைந்தோம்...

ஐயாறப்பர் பல்லக்கு ஆற்றில் இறங்கியதும் இயல்பாக ஆற்று மணலில் அழுந்தி விட்டது...

கூடியிருந்த மக்கள் உந்தித் தள்ளிவிட டிராக்டரும் சேர்ந்து இழுத்த நிலையில் பல்லக்கு இருந்த வண்டி மெல்ல ஆற்று மணலில் நகர்ந்தது...



ஆற்று மணலில் இலகுவாக செல்லும்படிக்கு உலர்ந்த கரும்புத் தோகையை பரப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...

கூட்டத்தோடு சேர்ந்து நானும் என் மகனும் பல்லக்கினை சிறிது தூரம் நகர்த்திக் கொடுத்து விட்டு ஸ்வாமி தரிசனம் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்...

முன்பெல்லாம் -
ஐயாறப்பர் பல்லக்குடன் தனியானதொரு பல்லக்கில் நந்தியம்பெருமானும் சுயம்பிரகாஷிணியும் ஆரோகணித்திருப்பர்...

இப்போது ஒரே பல்லக்கில் எழுந்தருளப் பண்ணியிருந்தனர்..

என்ன காரணம் என்று தெரியவில்லை...
பொருளாதார சூழ்நிலையாக இருக்கலாம்...

சென்ற ஆண்டில் நல்ல மழை பெய்தும் காவிரியில் தண்ணீர் இல்லை...

காவிரி ஆற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்...








மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ..(4/12)
-: திருநாவுக்கரசர் :-





பல்லக்குகள் திருச்சோற்றுத்துறையை நோக்கி நகர்ந்த போது மாலை மணி ஐந்து..

பல்லக்குகளில் ஸ்வாமி தரிசனம் செய்தபின்
ஆற்றிலிருந்து கரையேறி திருப்பழனம் திருக்கோயிலுக்குச் சென்றோம்..

ஆடினார் ஒருவர் போலும் மலர்கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே..(4/36)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ  

17 கருத்துகள்:

  1. பல்லக்கு படங்களின் தரிசனம் நன்று மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங்.

    காவிரியில் தண்ணீர் இருந்திருந்தால்தான் ஆச்சர்யப்பட்டிருப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி....

      காவிரியில் தண்ணீர் இருந்திருந்தால் ஆச்சரியம்...

      அதுதான் நிலைமை...

      வாழ்க காவிரி....

      நீக்கு
  3. வழக்கம்போல படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பல்லக்கு அலங்காரங்கள் அருமை. தனிப்பல்லக்குக்கு வழியில்லாமல் கோயில் நிர்வாகம், இத்தனை பெரிய கோயிலில்? எப்படியோ வழிவழியாக வந்த திருவிழா நிற்காமல் நடந்து கொண்டிருப்பதும் ஊர் மக்கள் ஒத்துழைப்பும் மனதைச் சிலிர்க்க வைக்கிறது! அருமையான தரிசனம் கிட்டியது. திருப்பழனம் தரிசனத்துக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      தாங்கள் சொல்வதுபோல வருடந்தோறும் திருவிழா நடத்துவதே பெருமை.....

      ஐயாறன் அருள் புரியட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பல்லக்கு மிக அழகாய் இருக்கிறது.நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.ஆற்று மணலில் எளிதாக செல்ல கரும்பு தோகைகள் நல்ல யோசனை.

    காவிரியில் தண்ணீர் இருக்கும் போது பல்லக்கு எப்படி வேறு வழியாக போகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...


      கோடையில் ஒருவாறு கணுக்கால் அளவு தண்ணீர் ஓடினாலும் இந்தப் பாதை வழியாகவே- ஆற்றில் இறங்கியே அக்கரைக்குச் செல்லும்...

      இங்கே பாலங்கள் இல்லை..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. நாங்களும் கலந்து கொண்டோம்... அருமை... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  8. நாங்கள் சப்தஸ்தான விழாவில் கலந்துகொண்டு இத்தலங்களுக்கு நடந்தே சென்றது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      மறுபடி எல்லா ஊர்களுக்கும் நடந்தே செல்லவேண்டும் என ஆசை இருக்கிறது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் அழகு. நேரில் காண ஆசையுண்டு. எல்லாம் அவனருள்....

    பதிலளிநீக்கு
  10. பல்லக்குகள் எல்லாமே அலங்காரத்துடன் அழகாக இருக்கின்ற்ன. அஆற்றில் தண்ணீர் இருந்திருந்தால் எப்படிச் சென்றிருப்பார்கள்? படங்கள் அத்தனையும் வெகு சிறப்பு.

    துளசிதரன்., கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..