நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 22, 2019

என்றென்றும்

எங்கும் தமிழ்...
எங்கள் தமிழ்...


நேற்றைய தினம்
உலகத் தாய்மொழி நாள்
* * *

சென்ற வருடத்தில் ஒருநாள்
அன்பின் ஜி அவர்கள்
எ - என்ற எழுத்தை வைத்து
வழங்கியிருந்தார்..

அதையடுத்து
எ - எனும் எழுத்தை வைத்து
நான் எழுதி வைத்த கவிதை
இன்றைய பதிவில்!...

***

எங்கும்
எதிலும்
எ - என்று
எழுத்து அதனை
எண்ணி
எடுத்து
எங்கள் முன்
எப்படி
எந்தன் பதிவு?..
எனப் படைத்திட்டார்
எங்கள் ஜி!..

எடடா அந்த
எட்டடி வாளை
என்னும் சொல்லை
எடுத்து எறிந்து விட்டு
எடடா அந்த
எழுதுகோலை
என்றே முழங்கி புவி
எங்கும் தமிழ் பரப்ப
எழுந்த தங்களை
என்னென்று சொல்ல!?..
எப்படித்தான் சொல்ல!?..

எனில்
எத்தனை எத்தனை வியப்பு!.. 
என்னவொரு அழகான சிற்பம்!...
எங்கு உள்ளது இந்தக் கோயில்?..
எப்படி நீங்கள் நலமா!..
எத்தனை நாள் தங்களைப் பார்த்து!..
எதற்கு வீண் சிரமம்?..


எனில் 
எழுக..
எதிர்ப்புகளை நீக்கி விரைக..


எனில் 
எண்ணம்
எண்ணாயிரமாகிடும் வண்ணம்


எனில் 
எழுத்து
எட்டுத் திக்கிலும் செலுத்து...



எனில்
எழில்
எழிலின் அரசி
எழிலரசி..
எள்ளின் பூ நாசி..
என்றெல்லாம் பேச
எங்குந்தான் வீசும்
எழுதுங்கவி வாசம்..


எனில்
எறும்பு
எருது
எருமை

எண்ணிப் பார்..
என் நெஞ்சே..
எண்ணிக்கையை அல்ல..

எறும்பின்
எண்ணத்தை...

எண்ணிப் பார்..
எருமையின் அருமையை..


எண்ணிப் பார்..
எருதுகளின் பேருழைப்பை...

எண்ணம் நலம் என்றால்..
எங்கும் வளம் அன்றோ..

எல்லாம் இனிது
என்றும் புதிது...

எண்ணம் இனிது..
எழும் சிந்தை புதிது!..


எழுங் கதிராய்
எழும் நிலவாய்
எங்கள் தமிழே..
எந்தன் அமுதே..
எங்கும் வாழ்க!..
என்றும் வாழ்க!..

எங்கெங்கும் தமிழாக..
என்றென்றும் வாழ்க..
ஃஃஃ

வாழ்க தமிழ்..
வாழ்க நலம்!...
* * * 

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங். தாய்மொழி தினக்கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  2. ஆனால் முதலெழுத்தாய் அன்பான அ இருக்க, ஆச்சர்யமாய் ஆ வும் காத்திருக்க, எதற்காக எ வரை சென்றீர்கள்?!! முதல் ஆறெழுத்தை ஏங்க விடலாமா? ஆறெழுத்தில் மந்திரமே இருக்கே...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      அன்றைக்கு தேவகோட்டையார் எ என்ற எழுதியிருந்தார்... அதனால் தான் மறுபடியும்....

      நீக்கு
  3. 'எ' வை வைத்து என்னென்ன வரிகள் தீட்ட முடியுமோ எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்... அருமை, சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் ..
      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம் ..
      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. எ எழுத்தின் முதல் எழுத்து.
    அருமையாக கோர்த்திருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கவிதை அருமை.
    வாழ்க தமிழ்!
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தாய்மொழி தினத்துக்கு அருமையான படங்களுடன் கூடிய கவிதைக்கு நன்றி. எல்லோரும் கூடியவரை தாய்மொழியிலேயே எழுதிப் பழகுவோம். ஆங்கிலம் கலக்காமல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படி ஒரு ஆசை உண்டு கீதா அக்கா. கட்டுரைகளில் சாத்தியப்படும் இந்த விஷயம் கதை எழுதும் பொழுது காணாமல் போய் விடுகிறது. :((

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. பானுக்கா ஹையோ அதை ஏன் கேக்கறீங்க...நான் கதை எழுதும் போது கதை மாந்தர்களைப் பொருத்து ஆங்கிலம் வந்துவிடுகிறது! என்னாலும் அதைத் தவிர்க்க இயலவில்லை. அதுவும் இப்போதெல்லாம் ஆங்கிலம் கலந்து உரையாடல்கள் என்று ஆகிவிட்டதால் ..இயல்பாக இருப்பது போல் தோன்றும்....

      வீட்டிலும் கூட..வீட்டில் ஆங்கிலம் தான் பலரும்...அதுவும் இப்போதையக் குழந்தைகள்...என் மகன் அவன் கஸின்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் அவன் தமிழ்ல் தான் பதில் சொல்லுவான்...தேவைப்பட்டால் மட்டும் தான் ஆங்கிலம்...ஆனால் நானோ குழந்தைகளோ வீட்டு மனுஷங்களோ உறவினர்களோ ஆங்கிலத்தில் பேசினால் நானும் ஆங்கிலம்...ஹிஹிஹிஹி என்னதான் சொல்லுங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஒட்டுதல் வருவதில்லை...தமிழில் பேசும் போதுதான் அந்த ஒரு ஒட்டுதல்...வருகிறது..இனி கதை எழுதும் போது அதைத் தவிர்க்க முயற்சி செய்யனும்னு பார்க்கிறேன்...பார்ப்போம்...

      கீதா

      நீக்கு
  7. தாய்மொழி தினக் கொண்டாட்டம் ரசித்தேன். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்சி துரை சார். ரசித்தேன்.
    'அ' என்னும் ஒரு எழுத்தை மட்டும் வைத்து முழு ராமாயணம் எழுதப்பட்ட பதிவு ஒன்று வாட்ஸாப்பில் வலம் வந்ததே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. whats app ல் எந்தக் குழுவுடனும் இணைந்திருக்கவில்லை..
      எனவே தாங்கள் குறிப்பிட்டுள்ள ராமாயணம் பற்றி அறியேன்...
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஜி
    தாமதமாகவே வந்தேன் பொருத்தருள....

    "எ"
    என்ற
    எழுத்தில்
    எழுதிய
    எழுச்சிமிகு கவிதை
    அழகு
    அருமை
    அற்புதம்
    வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகையே எனக்கு மகிழ்ச்சி.... நன்றி..

      வாழ்க தமிழ்.. வெல்க தமிழ்...

      நீக்கு
  12. தாய்மொழி தினத்திற்கான உங்கள் பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. அண்ணே எ - என்னோ உங்கள் திறமை! எ" எங்கேயோ போய்ட்டீங்க!!! ரொம்ப -நல்லாருக்கு கவிதை..உங்கள் திறமையை என்னவென்று சொல்ல?!!!

    மிகவும் ரசித்தோம் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோ - என்னே நு வந்த்ருக்கனும் அண்ணா. டைப்போ...

      கீதா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..