நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 26, 2019

செப்பறைச் செல்வன் 2

திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரம் எனப்படும் செப்பறை - தாமிரசபையின் தரிசனத்தின் அடுத்த பதிவு...

முதல் பதிவின் இணைப்பு செப்பறைச் செல்வன் 1

பதிவிலுள்ளவை கடந்த மார்கழித் திரு ஆதிரை வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்...

திருக்கோயிலில் பொறுப்பான பணியில் உள்ள எவரோ ஒருவர் இந்தப் படங்களை - செப்பறை அழகிய கூத்தர் கோவில் எனும் இணைப்பில் வழங்கியுள்ளார்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

முந்தைய பதிவில் -
திருக்கோயிலில் கலை நயமிக்க சிற்பங்களை சித்திரங்களை
மண்டபத் தூண்களைப் படமெடுக்க அனுமதிக்காத நடைமுறையைப் பற்றி நண்பர்கள் அனைவரும் மிக அருமையான கருத்துகளை முன் வைத்திருந்தார்கள்...

அனைத்தும் ஒவ்வொரு தரப்பில் ஏற்புடையவையே என்றாலும் -

நல்லறிவு உடைய எவரும் சந்நிதி முன்பாக செல்பி எடுத்துக் கொள்ள முயற்சிப்பது இல்லை... கருவறைக்கு முன்பாக எவ்வித இடைஞ்சலும் செய்வதில்லை...

அதே சமயம் - கொடிமரம் முன்பாக சுற்றுப் பிரகாரங்களில் நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களில் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஆதார் அட்டையை பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட சிறு கட்டணத்துடன் அனுமதிக்கலாம்..

ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியிருந்ததைப் போல
அங்கு இங்கு என்று அலைந்து திரிய முடியாதவர்களுக்கும் மூத்த குடி மக்களுக்கும் அத்தகைய படங்கள் பெருமகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கும்...

திருமலையில் தரிசனத்துக்கு முன்பாகவே 
அங்கு புகைப்பட கருவிகளும் மற்றவைகளும் அனுமதிக்கப்படுவதில்லை.. 

சாமானியர்களுக்குத் தான் அனுமதியில்லையே தவிர
திருக்கோயிலுக்கு வருகை தரும் முக்கிய புள்ளிகள்
கொடிமரத்துக்கு அருகிலேயே தமது கூட்டத்தாருடன் காட்சிப்படுத்தப்படுகின்றனர்...

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோயிலில் நுழையும் முன்பாகவே
கரடு முரடான காவலர்கள் நமது உடைமைகளை உதறித் தள்ளி விடுகின்றனர் - பாதுகாப்பு சோதனை என்ற பெயரில்...

சென்ற ஆண்டு அங்கிருக்கும் கடைகளில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பின்
திருக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது - தீரிநூல் தீப்பெட்டி நல்லெண்ணெய் இவற்றைக்கூட அனுமதிக்கவில்லை - சேவார்த்திகள் திரு விளக்கு ஏற்றக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்!..

அங்கே கோயில் கடைகள் மாற்று சமயத்தினருக்கு உள்வாடகைக்குக் கொடுக்கப்படுவதும் அந்தக் கடைகளில் புலால் உணவுகள் புழங்குவதும்
மதுரை மக்களால் சொல்லப்பட்டிருந்தன - தீவிபத்து நடந்த சமயத்தில்!...

அதைப் பற்றி யாரும் மேலதிகமாக சிந்திக்கவில்லை அப்போது!..

ஆன்மிகத்தை வளர்ப்பதற்காக  ( !.. ) வர்த்தக ரீதியாக நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் சிலவற்றை வைத்திருந்தேன்...

அவற்றைத் தேடி எடுத்து பின்னொரு சமயம் தருகின்றேன்...
இது எவ்விதத்தில் நியாயம்?... என்று நாம் - பேசிக் கொள்வோம்...

இப்போது -

சிவ வைணவ தர்மங்களுக்கு எதிராக முளைத்திருக்கும் கூர் முட்கள்
இற்றுத் தொலைந்திடும்படிக்கு திருவருள் புரிக இறைவா!..

- என்று வேண்டிக் கொண்டு செப்பறை அழகிய கூத்தனைத் தரிசனம் செய்திடுவோம்!...    


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே..(4/23)
- : திருநாவுக்கரசர்:- 



கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ்சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்திசை யோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே...(4/23)
-: திருநாவுக்கரசர் :-







கூடும் அன்பினில் என்றும்
கும்பிடுதல் வேண்டும் 




பார்த்திருந்த அடியனேன் நான் பரவுவன் பாடியாடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம் பலத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூடநான் வந்தவாறே..(4/23)
-: திருநாவுக்கரசர்:-

இன்றைய பதிவில் 
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தின்
திருப்பாடல்களுள் சில இடம் பெற்றுள்ளன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

35 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    செப்பறைச்செல்வன்...

    தலைப்பு ஈர்க்கிறது!

    பதிலளிநீக்கு
  2. எனக்குத் தெரிந்தும் கர்ப்பக்கிரகத்தின் அருகே யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. சுயக்கட்டுப்பாடு இதில் எல்லோருக்கும் 99% இருக்கிறது. மற்றபடி அதிகார வர்க்கம், ஊடகங்களுக்கு கொடுக்கும் அனுமதி சாமானியனுக்கு தரப்படுவதில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகிய படங்கள். அழகிய பாக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பாதத்தின் கீழ் நந்தி மற்றும் அதற்கு அடுத்த படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருப்பதியில் மட்டுமல்ல மற்ற பெருமாள் கோவில்கள் அனைத்திலும் ஆச்சார்யர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய வருதலுக,கு "மங்களாசாசனம்" என்று பெயர். அப்போது கோவில் சார்பா வரவேற்பு கொடுப்பாங்க, கருவறையைத் தவிர மற்ற இடங்களில் அந்தக் குழுவின் போட்டோகிராபரோ இல்லை திருப்பதி போன்ற பெரிய கோவில்களில் கோவில் போட்டோகிராபரோ புகைப்படங்கள் எடுத்து பத்திரிகைகளுக்குத் தருவார்கள்.

    திருப்பதி மிகப் பெரும் ஜனங்கள் வரும் கோவிலாக இருப்பதால் அதன் பாதுகாப்புக்காக மிகவும் மெனக்கெடுகிறார்கள். அதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமலைக் கோயிலில் கொடிமரத்தின் அருகே படம் எடுத்தால் தான் ஆயிற்று என்ற மனோபாவம் எல்லாம் என்னிடம் இல்லை.. இருவேறு அளவுகளைச் சொன்னேன்..ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து விட்டு வெள்ளையும் வெள்ளையுமாகத் திரிபவர்களை விட அன்பினில் நிறைந்த பக்தர்கள் எவ்விதத்தில் குறைந்து போவார்கள்?... ஒருக்காலும் இல்லை.. பெருமாளின் பார்வை இவர்களுக்கே....

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... இங்க நம்ம புகைப்படம் எடுப்பது, அதை அனுமதிக்கும் அதிகாரிகள் பத்தித்தான் பேசறோம்.

      கடவுளின் பார்வையில் எல்லோரும் ஒன்று. அங்கு பக்தி மட்டும்தான் அளவுகோல். யார் தன்னோட பக்கத்துல இருக்காங்க என்பது அளவுகோல் அல்ல.

      ஆனாப் பாருங்க.... அரசியல்வாதிகள், சினிமாத்துறை, பெரிய அதிகாரிகள் இவங்கள்லாம் சாதாரண பக்தர்களைவிட பலமடங்கு மேம்பட்டவங்க என்றுதான் கோவில் நிர்வாகங்கள் நினைக்கின்றன. நீங்களும் நானும் போனா, கியூவில் தரிசனத்துக்கு நின்று, ஸ்பெஷல் டிக்கெட் வாங்குவதற்கும் கால் கடுக்க நின்று ஏமாறவேண்டியதுதான்.

      அதுக்குப் பதிலா வார்டு கவுன்சிலராக ஆகி, ரெக்கமெண்டேஷன் லெட்டர் எடுத்துட்டுப் போனீங்கன்னா, நல்ல தரிசனத்தை ஏற்பாடு செஞ்சுடுவாங்க. நிலைமை அப்படி இருக்கு. என்ன செய்ய?

      நீக்கு
    3. இப்படியான அவல நிலைக்கு யாருங்க காரணம்?...இந்த அரசியல் அமைப்பும் அதன் அடிப்படையில் உருவாகிற அரசும் அதன் அற நிலையத் துறையும் தானே.. 2005 களில் ஆனைக்கா ஜம்புகேஸ்வரர் சந்நிதிக்கு எவ்வித கட்டணமும் இல்லை.. அதற்குப் பின் கட்டண வசூல்... திருச்சி மலைக் கோட்டை கோயிலுக்குச் செல்வதற்கு கட்டணம்... புறச் சமயத்தினர் எப்படியெல்லாம் கேவலமாகப் பேசுகிறார்கள் தெரியுமா?.. உள்ளுக்குள் புழுங்கிக் கிடக்கிறேன்...

      நீக்கு
    4. உங்க பாயிண்ட் வேலிட். அரசு கோவில்களுக்கு பணம் கொடுப்பது குறைவு. கோவில் பணிகளுக்கு தங்கள் ஆட்களுக்கு வேலை கொடுக்கறதுல இருக்கற மும்முரம், கோவில்களுக்குச் செய்வதில் இல்லை. நிறைய கோவில்ல, உண்டியல்ல போட்டா அது கோவிலுக்குப் போய்ச் சேர்வதில்லைனே சொல்றாங்க.

      புறச் சமயங்களைப் பற்றி நான் ஓரளவு நன்றாக அறிந்தவன். அதைப் பற்றிக் கவலை கொள்ளர்க்க. கோவில்களில் தரிசனத்துக்கான கட்டணம், 'முடியாதவர்களின் அல்லது அவசர வேலையா வந்தவர்களின் வசதிக்கு' என்பது மாறி, பணமுடையவனுக்கு என்றாகிவிட்டது வருத்தம் தரும் விஷயம்தான். இதைப்பற்றி நிறைய பொதுவெளில எழுத முடியாதது எனக்கும் வருத்தம்தான்.

      நீக்கு
    5. அன்பின் நெ.த..
      கோயில் உண்டியலில் இடப்படும் காணிக்கைகள் அரசுக்குத் தான் செல்கின்றன.. பல கோயில்களின் திருவிழாக்கள் மண்டகப்படி கட்டளைதாரர்களால் தான் நடைபெறுகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கருவறைக்கு முன்பாக இடைஞ்சல்கள் பக்தர்களால் செய்யப்படுவதை நான் கண்டிருக்கிறேன். செல்ஃபி எடுக்கப்படுவது சில கோவில்களில் பார்த்திருக்கிறேன். உங்களிடம் முடிந்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தாங்கள் சொன்னதைப் போல நான் கண்டதில்லை.. நீங்கள் சொல்வது போல பல இடங்களில் இருக்கலாம்.. கருவறையின் முன்னால் செல்பி என்பது அறிவற்றோர் செயல்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. செப்பறைச் செல்வனின் தரிசனத்துக்கு மிக்க நன்றி. மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறாரள். அதிலும் அந்தக்குஞ்சிதபாதம் மட்டும் தனியா தரிசனம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அந்தப் படம் அழகாக இருக்கின்றது...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பல கோயில்களின் கருவறையையும் அங்குள்ள கடவுள் விக்ரகங்களுக்குச் செய்யப்படும் அபிஷேகத்தையும் தொலைக்காட்சி சானல்கள் பல ஒளி பரப்புகின்றன. ஆனால் நாம் கோயிலில் பிரகாரத்தில் படம் பிடிப்பதைத் தடுக்கின்றனர். எல்லாம் பணம் படுத்தும் பாடு. மீனாக்ஷி கோயிலில் உள்ளே எந்தப் பொருட்களும் எடுத்துச் செல்லக் கூடாது என்று கெடுபிடி. ஒரு விதத்தில் நல்லதே என்றாலும் கோபுர வாசலில் கூடப் படம் எடுக்க முடியாது என்பதால் காமிராவையோ, அலைபேசியையோ விட்டுவிட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது. காரில் போனால் ஓட்டுநரிடம் கொடுத்து வைக்கலாம். பேருந்து, ரயில் மூலம் போறவங்க என்ன செய்ய முடியும்? தங்குமிடத்தில் வைத்துவிட்டுப் போக வேண்டி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல நிறைய லாஜிக் மீறல்கள் கோவில்களால் செய்யப்பட்டாலும் (அபிஷேகத்தை எல்லோரும் பார்க்கட்டும், கோவில் பிரபலமடையட்டும், நம் உருவம் தொலைக்காட்சியில் வரட்டும் என்றெல்லாம்), கேமராவோ மொபைலோ கொண்டுசெல்லக்கூடாது என்றிருக்கும் இடங்களில் நமக்குக் கஷ்டம்தான்.

      நான் திருப்பதியில் தரிசனம் முடித்து பிறகு கேமராவை எடுத்து நடந்து நிறைய புகைப்படங்கள் வெளியில் எடுத்திருக்கிறேன். பல சமயம் அதற்கு நேரம் கிடைக்காது.

      நீக்கு
    2. அதேசமயம், ஆச்சார்யர்களுடன் வருபவர்களுக்கு கேமரா கொண்டுசெல்ல அனுமதி உண்டு. இதற்குக் காரணம், 'நம்பிக்கையற்றவர்கள்' ஆல் கோவில் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.

      நீக்கு
    3. சென்ற ஆண்டு மதுரைக்குச் சென்ற போது மீனாக்ஷி அம்மன் கோயிலில் எங்களிடமிருந்த மூன்று செல்போன்களுக்கும் தனித் தனியாக கட்டணம் வாங்கிக் கொண்டு ஒரே பையில் போட்டு கட்டிவைத்திருந்து கொடுத்தார்கள்..

      அங்கே பொருள்களைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் பெரும் பிரச்னை தான்... பலருடைய பொருட்களை மாறிக் கொடுத்து விட்டு வம்பு செய்து கொண்டிருந்தார்கள்...

      நீக்கு



    4. மாறிப் போய்விடும் பயம் காரணமாகவே நாங்க அங்கே எடுத்துச் செல்வதே இல்லை.














































      நீக்கு
  10. வடமாநிலங்களில் சோம்நாத், துவாரகை போன்ற கோயில்கள், காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி, விசாலாக்ஷி ஆகியோரைத் தரிசிக்கச் செல்லும்போது தோல் பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது! இடுப்பில் பெல்ட் கூட இருக்கக் கூடாது. இதிலே சோம்நாத்தில் மட்டும் ஆங்காங்கே தூண்கள் போல் கட்டி அவற்றில் லாக்கரும், சாவியும் இருக்கும். எது காலியாக இருக்கோ அதில் நம் சாமான்களை வைத்து நாமே பூட்டிவிட்டுச் சாவியை எடுத்துச் செல்லலாம். திரும்பி வந்து நம் பொருட்களை நாமே எடுத்துக் கொள்ளலாம். அயோத்யாவில் அதுவும் முடியாது. அக்கம்பக்கம் உள்ள கடைக்காரர்கள் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்வதில்லை. நாங்க பண மூட்டையைத் தூக்கிக் கொண்டு அலைந்தோம். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயோத்தியைக்கு நாங்கள் சென்றிருந்தபோது, எதையும் கொண்டுபோகக் கூடாது என்று சொல்லியிருந்ததால் எல்லாவற்றையும் தங்குமிடத்தில் விட்டுவிட்டுத்தான் சென்றிருந்தோம்.

      நீக்கு
    2. கருத்துரைப் பக்கத்தில் பயனுள்ள செய்திகளை வழங்கிய தங்களுக்கு நன்றி..

      நீக்கு
  11. செப்பறை செல்வரை மீண்டும் அழகிய கோலங்களில் தரிசனம் செய்தேன், மகிழ்ச்சி.

    மீனாட்சி கோவிலில் லாக்கர் வசதி இருக்கு அலைபேசி காமிராவை வைக்க.
    ஆனால் கூட்டத்தில் வைப்பது, வாங்குவது சிரமம்.
    பச்சைபசேல் வயல்கள்பின்னனியில் தேர் படம் அழகு.
    முதியவர் வழிபடுவது நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. கருவறையில் செல்ஃபி எடுப்பவர்கள் பக்தியற்றவர்கள்தான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. ஆஹா அற்புத காட்சிகள் ...


    அதிலும் அந்த குட்டி நந்தியும் , பச்சை வயலுக்கு நடுவே தேர் காட்சியும் மிக அழகு ..
    கருவறையில் மட்டும் படம் எடுப்பதில் எனக்கு உடன்ப்பாடு இல்ல...நானும் அங்கு மட்டும் அனைத்து கருவிகளையும் மூடி பையில் இட்டு இறைவனை மட்டும் காண வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..