நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 06, 2018

இடராழி நீங்குக 4

இன்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை...

புண்ணியங்கள் சேர்கின்ற நாள்... 
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...

அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...

அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..
***


இன்றைய பதிவில்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் (திருச்சந்த விருத்தம்) இடம் பெற்றுள்ளன...

ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் - ஸ்ரீரங்கப்பட்டினம்..
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.. (752)

சொல்லினால்தொ டர்ச்சிநீசொ லப்படும்பொ ருளும்நீ
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள்சொல்ல வல்லரே.. (762)

ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி - திருஅனந்தபுரம்.. 
கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் அண்ணலே
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேனி மார்பனே.. (775)

அம்புலாவு மீனுமாகி ஆமையாகி ஆழியார்
தம்பிரானும் ஆகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்குல் ஆயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆயவண்ணம் என்கொலோ எம்ஈசனே.. (786)

ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள்., கோபுரப்பட்டி.,
மண்ணச்சநல்லூர் அருகில் - திருச்சி (Dt).. 
ஆயனாகி ஆயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்
ஆயநின்னை யாவர்வல்லர் அம்பரத்தொ டிம்பராய்
மாயமாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்
மாயமாயம் ஆக்கினாயுன் மாயமுற்று மாயமே.. (792)

ஸ்ரீ பெரியபெருமாள் - திருஅரங்கம்., 
மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்
உன்னபாதம் என்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்
பொன்னிசூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே.. (806)


ஸ்ரீ சார்ங்கபாணி - திருக்குடந்தை.. 
நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.. (812)

திருமழிசைஆழ்வார் திருக்குடந்தைத்
திருக்கோயிலுக்குள் வருவதைக் கண்ட எம்பெருமான்
அரவணையிலிருந்து எழுவதற்கு முயற்சித்தான்...

அதைக் கண்ட ஆழ்வார் மனம் பதறி

உலகுய்வதற்காக நடந்த கால்கள் நொந்திருக்கின்றனவே..
நீ கிடந்தவாறே பேசுக எம்பெருமானே!...
என்று சொல்லி மங்களாசாசனம் செய்வித்ததாக ஐதீகம்..  

ஒன்றிநின்று நல்தவம்செய் தூழியூழி தோறெலாம்
நின்றுநின்ற வன்குணங்கள் உள்ளியுள்ளம் தூயராய்
சென்றுசென்ற தேவதேவ ரும்பரும்ப ரும்பராய்
அன்றியெங்கள் செங்கண்மாலை யாவர்காண வல்லரே.. (826)

ஸ்ரீ வல்வில் ராமன் (சயனத்திருக்கோலம்)
புள்ளபூதங்குடி - சுவாமிமலை அருகில்., கும்பகோணம்..
கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்
மிடைந்தவேழ்ம ரங்களும் அடங்கவெய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே அடைந்துநாளும் உய்ம்மினோ.. (832

விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாய வேலைநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு
அடைக்கலம்பு குந்தஎன்னை அஞ்சலென்ன வேண்டுமே.. (843)

ஸ்ரீ பரிமளரங்கன்., திருஇந்தளூர் - மயிலாடுதுறை நகர்... 
தூயனாயும் அன்றியும்சு ரும்புலாவு தண்துழாய்
மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்
நீயுநின்கு றிப்பினாற் பொ றுத்துநல்கு வேலைநீர்ப்
பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே.. (861

அத்தனாகி அன்னையாகி ஆளும்எம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்
எத்தினால் இடர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே.. (866)
* * *

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

28 கருத்துகள்:

  1. // அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வதுமாக //

    என்ன பொசுக்கென்று பட்டுக்காம இப்படி சொல்லிட்டீங்க.. !!!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      // அவரவர்க்கும் இயன்ற வழிகளில்...//

      புரட்டாசி மாதப் பதிவுகள் இந்த வாசகங்களுடன் தான் வந்து கொண்டிருக்கின்றன...

      விளக்கம் பிறகு...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பாசுரங்களும் படங்களும் சிறப்பு. ழுந்து வந்ததும் காபி கூட குடிக்கும் முன்னர் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      அவரவர்க்கும் இயன்ற வழியில்... - என்றால்

      பொருள் படைத்தோர் பொருளைக் கொண்டு அறம் செய்வதும்
      பொருள் அற்றோர் - தம்மால் இயன்றதைச் செய்வதும்!...

      பொருள் அற்ற ஏழையிடம் -
      நீ இதைத் தான் செய்யணும்.. இப்படித்தான் செய்யணும்!..
      - என்று உபதேசிப்பதால் ஆகப் போவது என்ன!...

      நம்மால் நல்லது செய்ய முடியவில்லையே என்ற உளைச்சல் தான் மிச்சம்..

      திருமூலர் முடிவாகக் கூறுவது -
      யாவருக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!...

      அதற்காக -
      ஒரு கோயிலை எடுத்துத் திருப்பணி செய்வதற்கு வல்லமை உள்ளவர் வீட்டோரமாக உட்கார்ந்து கொண்டு - கோயிலைப் பற்றி புகழ்ந்து இன்னுரை சொல்லிக் கொண்டிருந்தால் என்னவாகும்!..

      ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்!...
      - என்று சொல்லி வைத்தார்களே..

      அதெல்லாம் சரி... நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள்?.. எனக் கேட்டால்,

      அருகில் உள்ள கோயில்களில் சதுர்த்தி பஞ்சமி பௌர்ணமி நாட்களில் ப்ரசாதம் வழங்குவதற்கு ஆனதைச் செய்கின்றோம்...

      இதற்கு மேலும் ஒரு புண்ணியத்தைச் செய்திருக்கின்றோம்..

      அதை விளம்பரப்படுத்திக் கொள்வது முறையல்ல.. ஆயினும்,

      முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இன்றைய பாசுரங்களும், தரிசனமும் நன்று

    பதிலளிநீக்கு
  4. பாசுரங்களைப் பாடி தரிசனம் செய்தேன்.
    அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எனக்கு ம இகவும் பிடித்த பாசுரம், திவ்யப்பரபந்தத்தில் திருச்சந்த விருத்தம். சந்தத்தோடு கூடிய பாசுரங்கள். இதில் பல பாடல்களுக்கு விளக்கமே பல பக்கங்கள் போகும். யோசித்துப் பாருங்கள், பண்டைய இந்தியாவில், நாமெல்லாம் காட்டுமிராண்டிகள் என மேனாட்டினர் சொல்லும்போது, பஞ்ச பூதங்கள், காலக் கணக்குகள், இலக்கிய இலக்கணம் என நாம் செழித்து வாழ்ந்தோம். பெரும்பாலும் ஆசைகளற்ற சமூகம்.

    பிறகு வருகிறேன். படங்கள் மிக நன்று. ஆராவமுதன் மட்டும் சந்தேகமாயிருக்கு. அவன் கோலம் எழுந்ததுபோல் இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      பெரும்பாலும் ஆசைகளற்ற சமூகம்... மிகச் சரியான சொற்பிரயோகம்...

      ஆனாலும் பாருங்கள்...
      நம்மை நோக்கித் தான் மாற்றுச் சமய பிரசங்கிகளின் ஏளனங்கள்...

      மேலை நாட்டு சமயங்கள் வந்த பிறகு தான்
      இந்தியாவுக்கு கல்வி கிடைத்தது.. மருத்துவம் கிடைத்தது... -
      என்றெல்லாம் பிதற்றும் போது அவர்களுடைய அறியாமையை எண்ணிச் சிரிக்கத் தான் முடிகிறது..

      ஒருவன் சொல்கிறான் -

      தமிழ்நாடு முழுதும் சாத்தான் குடியிக்கும் இடங்களே கோயில்களாம்.. காஞ்சி மடத்திற்குள் சென்றானாம். எல்லா இடத்திலும் தனிமனித வழிபாடு தானாம்.. இந்த சாத்தான் வழிபாட்டில் இருந்து மக்களை மீட்க வேண்டுமாம்!...

      இப்படிச் சொல்பவனை விடுங்கள்...

      இந்த பிரசங்கத்தைக் கேட்டு விட்டு வெளியே வருபவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?...

      சைவனோ வைணவனோ - எவனொருவன் ஆனாலும் அவனால்
      உலகத்தை மட்டுமல்ல - இந்த அண்டம் முழுவதையும் ஒற்றைப் பார்வையால் பார்க்க முடிகின்றது!..

      ஆனால்,
      அவனைச் சூழ்ந்திருப்பவர்களால் அவ்வாறு முடிவதில்லையே!.. அது ஏன்!..

      தங்கள் மீள்வருகைக்குக் காத்திருக்கின்றேன்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருமழிசை ஆழ்வாரின் திருவரசு கும்பகோணத்தில் இருக்கிறது. இன்னும் தரிசனம் செய்ததில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> திருமழிசை ஆழ்வாரின் திருவரசு.. <<<

      அதென்ன திருவரசு!.. எனக்குப் புரியவில்லையே..

      நீக்கு
    2. அவர்கள் பரம்பதித்து சரம உடல் பள்ளிப்படுத்தப்பட்ட இடத்தில் சன்னிதி கட்டுவார்கள். திருவரசு என்பது பள்ளிப்படுத்தப்பட்ட இடம். இராமானுசர் திருவரசு ஶ்ரீரங்கம் கோவிலில் உண்டு. திருமங்கை ஆழ்வார் திருவரசு திருக்குறுங்குடில.

      நீக்கு
    3. திருமழிசையாழ்வார் சன்னதி (சமாதி) கும்பகோணம் சாத்தாரத்தெருவில் உள்ளது. அதனைப்பற்றி விக்கிபீடியாவில் புகைப்படத்துடன் நான் கும்பகோணம் திருமழிசையாழ்வார் கோயில் என்ற தலைப்பில் பின்வரும் இணைப்பில் பதிந்துள்ளேன். வாய்ப்பிருப்பின் அப்பக்கத்தை காண அழைக்கிறேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

      நீக்கு
    4. அன்பின் நெ.த.,

      திருவரசு - பொருள் தெரிந்து கொண்டேன்...
      விளக்கமளித்தமைக்கு நன்றி...

      நீக்கு
    5. அன்பின் B. ஜம்புலிங்கம் ஐயா ..

      தாங்கள் வழங்கியுள்ள இணைப்பினுக்கு நன்றி...

      நீக்கு
  7. இவர்தான் சிவ்வாக்கியராகப் பிறவி எடுத்தவர் (இதற்கு முன்பு) என்று சொல்வார்கள். சிவ்வாக்கியத்தின் பல பாடல்களின் சாயல் திருச்சந்தவிருத்தத்தில் இருக்கும். ஓரிரு பாடல்கள் அப்படியே முழுமையாக இருக்கும். எழுத ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் இருக்கிறது இந்த ஆழ்வார் பற்றிச் சொல்ல....இந்த பாடல்கள் பற்றி எழுத....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...
      திருமழிசை ஆழ்வார் முற்பிறவியில் சிவவாக்கிய சித்தர் - என, நானும் படித்திருக்கிறேன்..

      தேவார திருவாசகத் திருமுறைகள், திவ்யப்ரபந்தத் திருப்பாசுரங்கள் - இவற்றை உய்த்து உணர்வதற்கே இன்னும் பற்பல பிறவிகள் வேண்டும்!..

      அதற்கும் அவனருள் கூடி வரவேண்டும்!..

      நீக்கு
  8. ஆதிநாயகனையும், வல்வில் ராமனையும் பார்க்கக் கிடைக்கலை! திருஇந்தளூர் இப்போத் தான் போன மாசம் போனோம். பரிமளரங்கன் அருமையா அருள் பாலித்தார். கோயிலில் கூட்டமே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      புள்ளபூதங்குடிப் பெருமானைத் தரிசனம் செய்துள்ளேன்...

      ஆதிநாயகனையும் பரிமளரங்கனையும் தரிசிக்க வேணும்..

      நீக்கு
  9. திருமழிசை ஆழ்வார் குறித்த செய்தியை நானும் அறிந்திருக்கிறேன். தேவாரத் திருவாசகங்களின் உட்பொருளும், திவ்யப்ரபந்தத்தின் உள்ளார்ந்த பொருளையும் தெரிந்து கொண்டு விட்டால் பின்னர் இப்பிறவி எடுத்ததன் பலன் வேறே ஏது? அப்படி எல்லாம் நடந்து விட்டால்? !!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வதைப் போல்
      தேவார, திருவாசக, திவ்ய ப்ரபந்தங்களின் உட்பொருளை உணர்ந்து விட்டால்....

      அதை உணர்த்த வல்லான் அவன் ஒருவனே!...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. கோபுரப்பட்டி தவிர அனைத்து கோயில்களுக்கும் சென்றுவந்துள்ளேன். இன்று உங்களால் மறுபடியும் செல்லும் வாய்ப்பு. கோபுரப்பட்டி மங்களாசாசனம் பெற்ற கோயிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாளின் தலவரலாறு பிரமிக்க வைப்பதாக இருக்கின்றது.. இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோயில் இல்லை..

      ஆனாலும் பதிநாலாம் நூற்றாண்டில் தமிழகத்தை நோக்கி நடத்தப்பட்ட முகலாய படையெடுப்பின் போது திருவரங்கத்து நம்பெருமாளின் உற்சவத்திருமேனி இந்தக் கோயிலில் சில காலம் பாதுகாப்புடன் இருந்திருக்கின்றது...

      1342ல் ஹொய்சாள மன்னன் வீரவல்லாளனும் 1498 ல் இலங்கை உலகன் எனும் குறுநில மன்னனாலும் குடமுழுக்குகள் நிகழ்ந்திருக்கின்றன..

      அதன் பின் - ஏதோ ஒரு காலகட்டத்தில் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கிறது..
      நல்லோரால் மீட்கப்பட்ட திருக்கோயில் 2010 ல் திருமுழுக்கு கண்டு தற்போது செம்மையுற்றிருக்கின்றது..

      மண்ணச்சநல்லூரில் இருந்து திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் உள்ளது கோபுரப்பட்டி..

      வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்...

      நீக்கு
    2. கோயிலைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தந்தமைக்கு நன்றி. அவசியம் அக்கோயிலுக்குச் செல்வேன். நன்றி.

      நீக்கு
  11. ஒரே இடத்திலே பல பெருமாள் தரிசனம் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. புரட்டாசி சனிக்கிழமையன்று நீங்கள் போட்ட பதிவை மஹாலய அமாவாசையன்று படிக்கிறேன். அற்புதமான படங்கள். காலைப் பொழுதை மங்களகரமாக்கும் பதிவுகள் உங்களுடையவை. நடுவில் சில மாதங்கள் பார்க்க விட்டுப் போய்விட்டது. இனிமேல் தொடர்ந்து வருவேன். வாழ்த்துக்கள்! -

    இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  13. சனிக்கிழமை கிடைக்க வேண்டிய புண்ணியம் இப்பதான் கிடைச்சுதுப்பா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..