நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 11, 2017

பாட்டுத் திறத்தாலே..

11 டிசம்பர் 1882
மகாகவி பிறந்த நாள்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் 
பாலிக்கின்ற எங்கள் மகாகவிக்கு 
இன்று பிறந்தநாள்..
***


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு 
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர்மாளிகை
கட்டித் தரல்வேண்டும் அங்கு
கேணிய ருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்


பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலவொளி
முன்புவர வேணும் அங்கு
கத்துங் குயிலோசை சற்றேவந்து
காதிற்பட வேண்டும் என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வர வேணும்..


பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் 
பாலித்திட வேண்டும்..
***


துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக.. தீயது ஓட்டுக!..
-: மகாகவி :-

வாழ்க பாரதி.. வாழ்க பாரதி!.. 
* * *

13 கருத்துகள்:

 1. பாரதியின் பிறந்தநாளை போற்றுவோம் இது பலருக்கும் தெரிவதில்லையே ஜி

  நாளை ஒருவனுக்கு பிறந்தநாள் அது மட்டும் தெரிகிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி-இப்படி வருத்தப்படக் காரணமே கிடையாது. பொதிகையில் பாரதியைப் பற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 100 பேரில் எத்தனைபேர் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள்? ஓரிருவர் கூடத் தேறாது. தொலைக்காட்சிகள் எல்லாம் வியாபாரம் செய்ய வந்தவை. அவர்களைக் குறைகூறி என்ன பிரயோசனம்? குறை நம் மக்களிடம்தான் இருக்கிறது.

   சில வருடங்களுக்கு முன்பு, மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. பெரியார், காமராசர், பாரதியார். மூன்று படங்களுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆனால் அவை படுதோல்வி அடைந்தன. அந்தக் காலத்தில் சிவாஜி (அவர் சொன்னது இது) உயிரைக்கொடுத்து நடித்த 'கப்பலோட்டிய தமிழன்' அட்டர் பிளாப். அதனால, மக்களைத்தான் நாம குறை சொல்லமுடியும்.

   நீக்கு
  2. நண்பரே திரு. நெ.த. அவர்களுக்கு....
   நானும் அறியாப்பயல் மக்களையே குற்றம் சாட்டுகிறேன் நன்றி.

   நீக்கு
  3. கில்லர்ஜி...முதலில் யாரைப் பற்றிச் சொல்கிறார் கில்லர்ஜி என்று எனக்குத் தோன்றவே இல்லை. கூகுளில் தேடிய போதுதான் தெரிந்தது யாரைப் பற்றி என்று. ஸோ ஜி என்னைப் போன்று நிறையப் பேர் இருக்கலாம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதானே இல்லையா...இப்ப நீங்க இங்க எழுதியிருக்கறதுனால மறந்தவர்கள் கூட எனக்குத் தோன்றியது போலத் தோன்றி தேடலாம் இல்லையா...நாமே அதற்கு வித்து இடுவது போல ஆகிவிடுகிறதே ஜி.
   கீதா

   நீக்கு
  4. கில்லர்ஜி ரஜனி அங்கிளை நினைச்சுக் கவலைப்படுகிறார் கீதா:)).. எனக்கும் இது தெரியாது .. ஆனா நாளைக்கு இங்கின:) அங்கின:) ஒரு மிரேக்கிள்:) நடக்கவிருக்குது:).. அதைப்பற்றிய பேச்சு வந்தமையாலேயே ரஜனி அங்கிளின் பிறந்தநாள் என்பது எனக்குத் தெரிய வந்துது:).. நாளையிண்டைக்கும் ஒரு பிரபலத்துக்குப் பிறந்தநாள்:)..

   நீக்கு
 2. படங்கள் தேர்ந்தெடுப்பு நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. வளர்க நம் கவியின் புகழ்...

  பதிலளிநீக்கு
 4. பாரதியின் பிறந்த தினம் நினைப்போம் மாசிலா மனத்தனன் எங்கோ போய் இருக்க வேண்டியவன் இப்போது பலருக்கும் நினைவூட்ட வேண்டி இருகிறது

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு சகோ! பாடல்களும்..

  மாபெரும் கவி.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. பாரதித் தாத்தாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ஓடி விளையாடு பாப்பா..
  நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
  கூடி விளையாடு பாப்பா..
  அதிராவை வையாதே பாப்பா:)..

  பதிலளிநீக்கு
 7. பாரதியின் பிறந்த தினத்தில் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. மகாகவி நினைவைப் போற்றுவோம். என் மூத்த சகோதரர் பெயர் பாரதி - அவர் பாரதியார் மறைந்த நாளில் பிறந்ததால்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..