நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

மார்கழிக் கோலம் 16

தமிழமுதம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு..(086)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்..

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள் - காஞ்சி
பொருளால் அமருலகம் புக்கியல் ஆகாது
அருளால் அறம்அருளும் அன்றே - அருளாலே
மாமறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீமறவேல் நெஞ்சே நினை..(2222)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணைசிவ தரிசனம்

திருத்தலம்
திருஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர், ஸ்ரீ தியாகராஜர் 
  
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை


தல விருட்சம் - பாதிரி
தீர்த்தம் - கமலாலயம்


சுயம்புவாக எழுந்த புற்றுதான்
சிவலிங்கமாகத் திகழ்கின்றது..

பூமியின் அம்சமாகத் திகழும் திருத்தலம்...
ஆழித்தேர் பெருஞ்சிறப்புக்குரியது..

நீதி நெறிமுறையை நிலைநாட்டிய
மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த திருவூர்...


ஸ்ரீ சுந்தரரும் பரவை நாச்சியாரும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியாருடன்
வாழ்ந்திருந்த திருநகர்..
*

திருப்பதிகத்
திருப்பாடல்கள்.. 


வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் நறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே..(1/105)
-: திருஞானசம்பந்தர் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே..(6/34)
-: திருநாவுக்கரசர் :-

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் 
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப் பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்துஅணி
ஆரூரனை மறக்கலு மாமே..(7/59)
-: சுந்தரர் :-

***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 -16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

 1. நாயங்கனாய் நிந்ற நந்தகோபனையும், வல்லியந்தோளுடையான், வளர்திங்கள் கண்ணியினானையும் தரிசித்தோம்....வல்லியந்தோளுடையான், வளர்திங்கள் கண்ணியினான் அழகு!!! அந்தப் படம்!!

  ஓரொருகால் எம்பெருமான் என்றேன்றும் நம்பெருமான்!!! ஆம்!! ஆம்!! நம்பெருமான் அந்தப் படமும் வெகு அழகு!! நம்பெருமானே!! அழகான தரிசனம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பதினாறாம் கோலம் நன்று அழகிய பாடல்களுடன்,,,,

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 4. மார்கழி கோலம் சிறப்பு. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா!

  மார்கழிக் கோலமாய் வழங்கிய இன்றைய பதிவும்
  அனைத்தும் மிக அருமை!
  கண்களும் மனமும் குளிர்ந்தன!

  மிக்க நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. சில மாதங்களாக உங்கள் தளத்தைக் காணாது இருந்ததால் ஏற்பட்ட பாவம், இன்று உங்கள் பதிவையும் படங்களையும் தரிசித்ததால் நீங்கிவிட்டது. ஆரூர் அழகனைத் தரிசித்தபின் பாவங்கள் நிற்குமோ?

  இன்று பிறக்கும் புத்தாண்டிலும் தங்கள் பக்திப்பயணமாம் எழுத்துப்பணி என்றும்போல் குறையாது தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

  பதிலளிநீக்கு
 8. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு