நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 23, 2017

மார்கழிக் கோலம் 08

தமிழமுதம்

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு..(032)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 08

திருத்தங்கல் - சிவகாசி

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீராமன் - வடுவூர்
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார் - நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்..(2146) 
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருஆனைக்காஇறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு அகிலாண்டேஸ்வரி


தல விருட்சம் - நாவல்
தீர்த்தம் - காவிரி

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதம் ஏதும் இல்லையே!..(3/53) 
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 08  

திருஆனைக்கா
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

 1. இன்றைய தரிசனம் நன்று வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா!

  ஆண்டாள் திருப்பாவை அம்மையப்பன் காட்சிகள்
  தூண்டியதென் உள்ளத்தைத் தொட்டு!

  மனத்தை ஒன்றவைக்கும் அரிய காட்சிகள்!
  நல்ல தரிசனம்!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா இன்று ஆனைக்கா தரிசனம். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. வடுவூர் என் மாமியார் ஊர் என்பதால் வடுவூர் ராமரை தரிசித்ததுண்டு அது போன்று திருஆனைக்காவும் தரிசனம் செய்ததுண்டு. சிவகாசிப்பக்கம் சென்றதில்லை...
  8 ஆம் நாள் தரிசனமும் நன்று
  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..