நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 27, 2017

மார்கழிக் கோலம் 12

தமிழமுதம்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு..(075) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 12


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித் தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்..
  *
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ கோதண்டராமன் - குடந்தை
திறம்பாதென் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய்
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான் - புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதம்தான் வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி..(2177)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருக்குடமூக்கு - கும்பகோணம்


இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை 

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - காவிரி, மகாமகக்குளம்..குடந்தையிலுள்ள பதிகம் பெற்ற
சிவாலயங்களுள் முதன்மையானது..

ஏனையவை
குடந்தைக் கீழ்க்கோட்டம் - ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்
குடந்தைக் காரோணம் - ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே..(3/59)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 07 - 08அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாமும் 
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னமும் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!..

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
 ***

8 கருத்துகள்:

 1. மார்கழிக் கோலம் 12 விரிவதுடன் இனிய காலை வணக்கம் சகோ!

  கனைத்திளம் கற்றெருமை கன்றிற்குஇரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர...கிராமத்தில் சிறு வயது நினைவுகள்...இப்போதெல்லாம் இப்படி நின்று பால் சோர என்று சொல்லிட முடியலையே...திருப்பாவை முழுவதும் அன்றைய நம் வாழ்வியலையும் சொல்லும் பாடல்கள்.

  திருக்குடமூக்கு முதல் பதிகம் பெற்ற தலத்து இறைவனையும் தரிசனம் கண்டோம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இன்றைய பாசுரம் மிகவும் அருமையான பாசுரம்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. திருப்பாவையும், திருவெம்பாவையும் படித்தோம். குடமூக்கு, குடந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் நான் பிறந்த ஊர். இக்கோயில்கள் அனைத்திற்கும் நான் பல முறை சென்றுள்ளேன். குறிப்பாக கும்பகோணத்தில் இருந்த எங்கள் வீட்டில் அருகில்தான் கும்பேஸ்வரர் கோயில். பள்ளி நாள்கள் முதல் விடுமுறை நாள்களும், தேர்வுக்கான வாசிப்பு நாள்களும் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரங்களே.

  பதிலளிநீக்கு
 4. மார்கழிக்கோலம் 12-ஆம் தரிசனம் நன்று

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா!

  அப்பனோடு அம்மை அருங்காட்சி கண்டிட
  எப்பொழுதும் வேண்டுமரு ளே!

  திவ்ய தரிசனம்!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு