நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 17, 2017

மார்கழிக் கோலம் 02

தமிழமுதம்

கற்றதனால் ஆயபயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்..(02) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 02


ஸ்ரீ ஆராவமுதன் - குடந்தை
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடியே பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டுநாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..


திரு அரங்கன்

தித்திக்கும் திருப்பாசுரம்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே..(890)
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

இன்று ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி..


சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவல் அரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில் காததூதன் நம்மையும் அளித்துக் காப்பான்..
-: கம்பர் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்


திருத்தலம்
வைத்தீஸ்வரன்கோயில்


இறைவன் - ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை - அருள்தரும் தையல்நாயகி
தலமரம் - வேம்பு
தீர்த்தம் - சித்தாமிர்த தீர்த்தம்


ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வன் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் 
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே..(6/54)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 02


ஸ்ரீ சந்த்ரசேகரர் - மனோன்மணி அம்பிகை - உவரி
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

6 கருத்துகள்:

 1. தாயைச் சொல்லி விட்டுத்தானே சாதாரணமாக தந்தையைச் சொல்வார்கள்... இங்கு தந்தை முதலில்!

  ஸ்ரீராம ஜயம்.

  பதிலளிநீக்கு
 2. அழகிய தரிசனம் மார்கழி 2 நன்று

  பதிலளிநீக்கு
 3. மார்கழித் திங்கள் மகிழ்வுடன் நகரட்டும்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. மார்கழி இரண்டாம் நாளில் சிறப்பான தரிசனம்....

  பதிலளிநீக்கு
 5. மார்கழி இரண்டாம் நாள் பாடல்களைக் குறிப்பிட்டு மற்றும் தரிசனமும் கிடைத்தது. படங்கள் கண்ணிற்கும் மனதிற்கும் இனிமை...அருமை

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..