நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 30, 2017

அருள்மொழி


மகாத்மா அமரத்துவம் எய்திய நாள்
இன்று..
***

நமது சிந்தனைக்கு
அண்ணலின் அருள்மொழிகள்..


எங்கே அன்பிருக்கின்றதோ 
அங்கே தான் வாழ்க்கை இருக்கின்றது..

மனித குலத்தை அன்பு என்கிற விதிதான் ஆட்சி செய்கின்றது.. 
வெறுப்பு வன்முறை போன்றவை நம்மை ஆட்சி செய்தால் - காட்டுமிராண்டிகளாகி விடுகின்றோம்..


எல்லாவிதத்திலும் ஒத்துப் போவது நட்பு அல்ல.. 
இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்ட போதிலும் 
அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு..

தண்டி யாத்திரை
நீ ஏதொன்றையும் செய்வதற்கு முன் 
எவ்வித ஆதரவும் இல்லாத ஏழை ஒருவனின் 
முகத்தை ஒருகணம் நினைவுக்குக் கொண்டு வந்து 
அவனுக்கு நீ என்ன செய்திருக்கின்றாய் என்பதை நினைத்துப் பார்..


பேச்சாலோ அல்லது எழுத்தாலோ 
பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை.. 
நமது வாழ்வின் மூலமாகத் தான் அதை அடைய முடியும்.. 

***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க.. வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
எளியேனின் அஞ்சலி.. 
*** 

7 கருத்துகள்:

 1. அண்ணலை நினைவு கூர்வோம் ஜி

  பதிலளிநீக்கு
 2. அண்ணலின் நினைவினைப் போற்றுவோம்,,

  பதிலளிநீக்கு
 3. அண்ணலின் சிந்தனைகள் அருமை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. // எங்கே அன்பிருக்கின்றதோ அங்கே தான் வாழ்க்கை இருக்கின்றது //

  இதை விட என்ன வேண்டும்... அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. அண்ணலின் பெருமையைப் பகிர்ந்தவிதம் அருமை.

  பதிலளிநீக்கு