நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 26, 2017

வாழ்க பாரதம்!..

அனைவருக்கும் அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***
சாரநாத் ஸ்தூபியில்
கம்பீரமாகத் திகழும் காளைக்கு
பிரத்யேக வணக்கம்!..இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி இளவரசர் மாட்சிமை தங்கிய
ஷேக் முஹம்மத் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வருகையளித்துள்ளார்..

ஜனவரி 25 அன்று - 
அபுதாபி இளவரசரை குடியரசுத் தலைவர் அவர்களும்
பாரதப் பிரதமர் அவர்களும் வரவேற்ற காட்சிகள்..அபுதாபி இளவரசரின் இந்திய வருகையின் காரணமாக 
துபாயில் வானுயர்ந்து விளங்கும் புர்ஜ் கலீபாவில் 
அமீரகத்தின் கொடியுடன் இந்திய தேசியக் கொடியும் 
வண்ண விளக்குகளால் ஒளிர்கின்றது..


காணொளி வழங்கியோர்
கலீஜ் டைம்ஸ்
(Khaleej Times)இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா..
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா!..

ஒருபெருஞ்செயல் செய்த இளைஞர் பேரலை - சென்னை..
கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா..
ஒற்றுமைக் குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா!..


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறிமனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
- மகாகவி பாரதியார் -
***
வாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்!..

ஜய் ஹிந்த்!..
 ***

9 கருத்துகள்:

 1. எனது இனிய குடியரசுதின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்கள் அனைத்தும் அருமை
  குடியரசு தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 4. குடியரசு தினத்தில் நடக்கும் அணிவகுப்பைப் பார்க்க எனக்குப் பிடிக்கும்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. குடியரசுதின பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான குடியரசு தினப் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அணிவகுப்பு படங்கள் அருமை! குடியரசு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அனைத்தும் சிறப்பு ஐயா... இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. ஓ தாமதமாக வந்திருக்கிறோம்! படங்கள் அனைத்தும் அழகு. தாமதமானால் என்ன என்றென்றும் நம் தாய்நாடு நமது நாடுதானே எனவே தாமதமான வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு