நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 19, 2016

மார்கழிப் பூக்கள் 04

தமிழமுதம்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றலரிது.. (101)

ஔவையார் அருளிய
மூதுரை

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று 
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலை யாலேதான் தருதலால்.. 
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 04



ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..


ஸ்ரீ சௌம்யநாராயணன் திருக்கோஷ்டியூர்
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய 
திருப்பாசுரம்

விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாய வேலைநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு
அடைக்கலம்பு குந்தஎன்னை அஞ்சலென்ன வேண்டுமே.. (0843)

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவதரிசனம்
பஞ்ச சபைகள்

நான்காவது திருச்சபை

தாமிரசபை
திருநெல்வேலி



இறைவன் - அருள்தரு நெல்லையப்பர்
அம்பிகை - அருள்மிகு காந்திமதியம்மை
தீர்த்தம் - தாமிரபரணி
தலவிருட்சம் - மூங்கில்

எளியார்க்கும் ஏழையர்க்கும் அன்னம் பாலிப்பதற்கு - என,
தன்னடியார் உலர்த்தியிருந்த நெல்லை
மழையினின்று வேலியிட்டுக் காத்தருளி
ஈசன் கருணை மழை பொழிந்த திருத்தலம்..

சுற்றம் முசியாத மூங்கில் முளையில்
ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டு அருளிய திருத்தலம்..

கருணைமிகு அம்பிகை
இத்தலத்தில் காந்திமதி எனத் திகழ்கின்றனள்..

ஸ்ரீ காந்திமதி
மாமதுரையைப் போல இறைவனும் அம்பிகையும் 
கிழக்கு நோக்கிய சந்நிதிகளில் திகழ்கின்றனர்..

தாமிர சபையில் திகழும் நடராஜப் பெருமானுக்கு 
சந்தனசபாபதி - எனத் திருப்பெயர்..

இசைத் தூண்கள் இத்திருக்கோயிலின் சிறப்பு..
இத்தலத்தில் ஆடிப்பூரம் மிகச்சிறப்பான திருநாள்..

எண்ணிறைந்த சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது
நெல்லை மாநகர்..

- திருப்பதிகம் -
ஸ்ரீ திருஞானசம்பந்தப்பெருமான் 
* * *

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

முந்திமா விலங்கல் அன்றெடுத்தவன் முடிகள் தோள்நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல் உகிர்நுதியால் அடர்த்தார்
கந்தமார் தருமொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலியுறை செல்வர்தாமே.. (3/92)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 04


ஸ்ரீ பிரம்மபுரீசர் - திருப்பட்டூர்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்

சங்கரன்கோயில்
ஸ்ரீ கோமதியம்மன்


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. (013)
- அபிராமி பட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

6 கருத்துகள்:

  1. மணமுள்ள மார்கழிப்பூக்களை நுகர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதம் வந்தால் திருப்பாவையும் திருவெம்பாவையும் பதிவுகளில் களை கட்டும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. மார்கழி பூக்கள் அருமை.
    படங்களும், பாடல்களும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா! நன்றி பகிர்விற்கு!!

    பதிலளிநீக்கு
  5. படமும் பகிர்வும் அருமை ஐயா...
    மார்கழித் திங்கள் இங்கு மனம் நிறைக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..