நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

மார்கழிப் பூக்கள் 03

தமிழமுதம்


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.. (0398)

ஔவையார் அருளிய
மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிடமெல்லாம் சிறப்பு..
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 03


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
***

சிவதரிசனம்
  பஞ்ச சபைகள்

மூன்றாம் திருச்சபை
வெள்ளியம்பலம் 
மதுரையம்பதிஇறைவன் - அருள்தரும் சுந்தரேசர்
அம்பிகை - அருள்திரு அங்கயற்கண்ணி 
தீர்த்தம் - பொற்றாமரை, வைகை
தலவிருட்சம் - கடம்பு..


பராசக்தியாகிய அம்பிகை
மலையத்துவச பாண்டியனுக்கும்
காஞ்சன மாலைக்கும் மகவெனத் தோன்றி
மடி தவழ்ந்திருந்த திருத்தலம்..

ஈசன் கால் மாறி ஆடியது உள்பட
அறுபத்து நான்கு திருவிளையாடல்களை 
நிகழ்த்திய பெருமைகளைத் தன்னகத்தே கொண்டது..

தூங்காத் தொல்நகரம்..

பாடிப் பரவியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர்
மற்றும் பல புண்ணியர்கள்.. 
* * *

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச் செய்த
திருக்கடைக்காப்புமந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.. (2/66) 
* * *


ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த 
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 03
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணைக் காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்
ஸ்ரீ அங்கயற்கண்ணி
கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னைநயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என்னம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012) 
- அபிராமி பட்டர் -
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

5 கருத்துகள்:

 1. மார்கழிப் பதிவு படங்களுடன் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 2. மார்கழி மூன்றாவது நாளின் மகத்துவம் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா. இதற்கு முன் இரு பதிவும் வாசித்துவிட்டோம்,,,

  பதிலளிநீக்கு
 3. இம்மாதிரி பதிவுகள் எழுதுவதில் ஒரு லாபம் என்னவென்றால் விஷய ஞானம்/ தானம் நிறையவே இருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. படங்களும் செய்திகளும் மிக அருமை.தினம் காலை படித்துவிடுவேன் முழுவதும், மீண்டும் உங்கள் பதிவிலும் படித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு