நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

நீ எனது இன்னுயிர்..

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்!..

ஏன்.. என்ன ஆச்சு.. உங்களுக்கு!?..

அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும் -

சரிதான்.. இத்தனை வயசுக்கு அப்புறம் பித்து தான் பிடிச்சிருக்கு!.

பத்து மாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்..

பசங்க எல்லாம் வெளியே போய்ட்டாங்க...ங்கற தைரியமா!..

இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே!..

ஏன்!.. இப்போ மட்டும் என்னவாம்?..
தேவலோகம் போலத்தானே இருக்கு!.. 
நீ எனதின்னுயிர் கண்ணம்மா!..
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்!..

ஆகா!.. இப்படியே இருந்தா..
வீட்டு வேலையெல்லாம் யார் பார்க்கிறதாம்!?..


துயர் போயின போயின துன்பங்கள்
நின்னைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே!..

அதுதானே.. வேணும்!.. 
வீணையடி நீ எனக்கு.. மேவும் விரல் நான் உனக்கு!.. 
அப்படின்னு இருந்தா.. துன்பங்கள் துயரங்கள் தொலையாதா!..

என்றன் வாயினிலே அமுதூறுதே..
கண்ணம்மா என்ற பேர் செல்லும் போழ்திலே!..

..... ..... ..... ..... .....!..

கண்ணம்மா!..

ம்!..

கண்ணம்மா!..

ம்!!..

என்றன் வாயினிலே அமுதூறுதே..
உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே 
உன்றன் சிந்தனையே எந்தன் சித்தமே!..

..... ..... ..... ..... .....!..

தோயும் மது நீ எனக்கு.. தும்பியடி நான் உனக்கு..
அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. நல்ல நேரத்தில தான் வந்திருக்கிறாய்!.. 
பாரு.. உங்க.. அத்தானை.. பாரதியார் பாட்டைப் பாடிக்கிட்டு!...

அப்போ.. நான் வந்து கெடுத்துட்டேனா!?.. அடடா!.. 

தாரையடி நீ எனக்கு.. தண்மதியம் நான் உனக்கு!..
வீரமடி நீ எனக்கு.. வெற்றியடி நான் உனக்கு!..

கேட்டியா.. தாமரை!.. 

நிஜந்தானே அக்கா!.. வீரத்தையும் வெற்றியையும் பிரித்துப் பார்க்க முடியுமா?.. வீட்டுக்கு வீடு இப்படி..ன்னா வாழ்க்கையே வசந்தம் தானே அக்கா!.. 

நல்லா சொல்லு தாமரை!..

ஆமா.. பசங்க எல்லாம் எங்கே?..

அவங்க இல்லை..ங்கற தைரியம் தான்!..

இருந்தாலும் -
பாயும் ஒளி நீ எனக்கு.. பார்க்கும் விழி நான் உனக்கு..
தோயும் மது நீ எனக்கு.. தும்பியடி நான் உனக்கு!..
அப்படின்னு.. நீங்க ஒவ்வொரு நிமிஷத்தையும் கொண்டாடறது சந்தோஷமா இருக்கு அக்கா!..

கிளித்தோப்புல உங்க அத்தான் - என்னைச் சுத்திச் சுத்தி வந்து பாடினதும் - இந்தப் பாட்டு தான்!.. 

நீங்களும் அத்தானும் கிடைக்கறதுக்கு நான் கொடுத்து வச்சவ அக்கா!..

ஏம்மா!?..

வாழ்க்கை..ன்னா.. இதுதான்.. இப்படித்தான்..ன்னு!.. எவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட வேண்டியிருக்கு உங்கக் கிட்டயிருந்து!..

எங்கக் கிட்டயிருந்து இல்லேம்மா!.. மகாகவி.. கிட்டயிருந்து !..

சரி.. நாம புறப்படுவோம்.. கருத்தரங்கத்துக்கு நேரமாச்சு!..

புறப்படலாம்... அக்கா.. பசங்க எங்கே..ன்னு கேட்டேனே?..

அவங்க முன்னயே போய்ட்டாங்க!..

சரி.. செல்வி.. நாம புறப்படுவோம்.. தாமரை நீயும் வர்றியாம்மா?..

தாமரையை வரச் சொன்னதே நான் தானே!..

ஓ!...

அக்கா.. அங்கே யார் பேசப்போறது!..

உங்க அத்தான் தான்!.. என்ன தலைப்பு..ல பேசப் போறாங்க தெரியுமா!..

என்ன தலைப்பு.. அக்கா?..

பாரதி போற்றிய பெண்மை!..

அதைத்தான்!.. நான் நேர்..லயே பார்த்தேனே!..

தாமரை.. மகாகவியைப் பற்றி ஒவ்வொரு அறிவார்ந்த ஆண்மகனும் பேச வேண்டும் அம்மா!.. பெண்மை வெல்க!.. ந்னு கூத்தாடிய கவிஞன் அவன் அல்லவா!..

உண்மைதான் அத்தான்.. உண்மைதான்!..

சரி.. நீ அங்கே ஏதாவது பேசு தாமரை!..

கூட்டத்தில.. திடீர்..ன்னு என்ன பேசறது அத்தான்?..

பாரதியைப் பற்றி பேசறதுக்கு படிச்சுக்கிட்டா வரணும்?..

ஏதாவது பாடு.. தாமரை.. உனக்குத் தான் பாரதி பாட்டெல்லாம் தெரியுமே!..

சரிங்க.. அக்கா!.. 
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் - இவள்
பார்வைக்கு நேர்ப்பெருந் தீ..
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தர் எல்லாம்
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம்.. சக்தி ஓம்.. சக்தி ஓம்!..
***போற்றி.. போற்றி!.. ஓராயிரம் போற்றி.. நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்!..
என்று பெண்மையைப் போற்றி நின்ற
மகாகவியின் பிறந்த நாள் இன்று!..

சக்தி ஓம்.. சக்தி ஓம்.. 
சக்தி ஓம்.. 
***

12 கருத்துகள்:

 1. பெண்மையைப் போற்றுவோம்....

  நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பெண்மை போற்றுவோம்... மகாகவியை நினைவில் கொள்வோம்...
  அருமையான பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பாரதி போற்றுவோம்
  பாரதி போற்றுவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பாரதியின் நினைவு பதிவா?? அருமை அருமை,,

  பாடல் தேர்வு அருமை,,

  கவியின் நினைவினை போற்றும்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு