நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

தருமமிகு சென்னை

சென்ற ஆண்டில் இதே நாளில் -

சென்னையின் ஏரி குளங்களைத் திருடிச் சென்றது யாராக இருக்கும்?..

என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது - நமது தளத்தில்!..

திருடிச் சென்றவர் யாரென்று என்று இன்று வரை தெரியவில்லை..

ஆனால்,

ஏரி குளங்கள் திருடப்பட்டதால் -

சென்னை அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை..

அந்த வேதனையிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்து 
இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது..

ஸ்ரீ கபாலீஸ்வரம் - திருமயிலை
சென்னைக்கு இன்று வயது 377!.. 

தருமமிகு சென்னை என்று வாயாரப் புகழ்ந்தவர் வள்ளலார் ஸ்வாமிகள்!..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி இளைத்த உத்தமர் வள்ளலார்..

அத்தகைய புண்ணியர் - சில காலம் வாழ்ந்திருந்த திருநகரம் சென்னை!..

சென்னையில் அறச்செயல்கள் ஓங்கி வளர்ந்ததைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்ததனாலேயே - 

மனங்குளிர்ந்து அவ்வண்ணம் பாடியிருக்கின்றார்..

அன்றைக்கு அவ்விதம் பாடி மகிழ்ந்த வள்ளலார் ஸ்வாமிகள் 
இன்றைக்கு இருந்திருந்தால்!?..

சென்னையின் நிலையைக் கண்டு எவ்விதம் பாடியிருப்பார்!?..

St. மேரீஸ் சர்ச் - 1680
வாலாஜா மசூதி, திருவல்லிக்கேணி - 1795
சென்னை 1915
சென்னை 1930
சென்னை 1947
சென்னை என்று உருவாகும் முன்பே - மற்ற பகுதிகள் முழுதும் 
ஏரி குளங்களால் நிறைந்து விளங்கியிருக்கின்றன..

அடையாற்றிலும் கூவம் நதியிலும் மக்கள் மூழ்கிக் குளித்திருக்கின்றனர்..

கால ஓட்டத்தால் நதிகளின் ஓட்டம் மாறுதலுக்குள்ளாகியது..

அடையாறும் கூவமும் மக்களால் மிகக் கொடுமையான முறையில் பாழடிக்கப்பட்டது..

அடுத்தடுத்த காலகட்டத்தில் -

நதியின் மாசுகளை நீக்குவதாகச் சொல்லி 
காசு பணம் பார்த்தார்களேயன்றி
நதியும் கரைகளும் சீரமைக்கப்படவேயில்லை..

நதிக்கரையில் புகழ் கொண்டு வாழ்ந்த நாகரிகம் நம்முடையது... 
அந்த நதிக்கரைகளை நாசமாக்கிய பெருமையும் நம்முடையதே...

மனம் கறுத்துப் போன மனிதர்களால் 
கூவமும் அடையாறும் சிறுத்துப் போயின...

விளைவு!?..

விடாது பெய்த அடைமழையினை தாங்கிக் கொள்ள இயலவில்லை..
பெருக்கெடுத்து ஓடிய நீரினை தன்னுள் வாங்கிக் கொள்ள இயலவில்லை..

கடற்காதலனுடன் கைகோர்த்துக் கொள்ள முடியாதபடிக்கு 
ஏற்படுத்தப்பட்ட தடைகளால் மனம் தவித்த நதிக் கன்னியர் -
கொந்தளித்து எழுந்து இற்றுப் போயிருந்த கரைகளைத் துவம்சம் செய்தனர்..

நீர் மேலாண்மை என்பது ஏட்டுச் சுரைக்காய் என்றாகி விட - 
கடந்த மழைக்காலத்தில் - தமிழகம் தண்ணீரில் தவித்தது..

அதிலும் ஒருபடி மேலாக - 
சென்னைப் பெருநகர் அதிகமாகவே தடுமாறித் தத்தளித்தது...

காரணம் -

நீதிநெறி எனும் தடம் மாறியதால்!..
தெளிந்தோடிய தண்ணீரின் தடம் அழித்ததால்!..

சென்னையின் கண்ணீரைக் கொண்டு - 
அரசும் மக்களும் பாடம் கற்றுக் கொண்டார்களா?.. 
- என்பது வருகின்ற மழை நாட்களில் தெரிந்து விடும்..சென்னையில் மழைக்காலம் சற்றே கஷ்டத்திற்கு உரியது என்றாலும்
இத்தகைய கஷ்டம் யாரும் காணாதது..

தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கரங்கள் நீண்டு 
ஆங்கிருந்த மக்களின் துன்பத்தைத் துடைத்தன..

மனித நேயம் மலர்ந்த நாட்கள் அவை..

அந்த மனிதநேயம் என்றென்றும் மலர்ந்திருக்க வேண்டும் என்பதே ஆவல்!..

பெருவெள்ளத்தின் துயரத்தினுள்ளுளேயும் 
தமக்குள்ளேயே அன்புக் கரம் நீட்டி 
ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்ட 
பெருமையை நினைக்கும் அதே வேளையில் -

மக்கள் புழக்கம் உள்ள நடைமேடையில் 
கதறக் கதற இளம் பெண் வெட்டிச் சாய்க்கப்பட்டபோது 
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததையும் மறக்க இயலவில்லை...
எம்.ஜி.ஆர். நினைவிடம்
அப்படி இப்படி என்று, ஒருசில குறைகள் இருந்தாலும் -
பலநூறு நிறைகளைத் தன்னுடன் கொண்டது - சென்னை..

சென்னை உருவாகிய இந்த நாளில் -
சிங்காரச் சென்னையின் சில காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..


விவேகானந்தர் இல்லம்
வள்ளுவர் கோட்டம்
மெரீனா


தமிழகத்தின் மக்களைத் தம்முடன் அரவணைத்துக் கொள்ளும் 
சென்னை மாநகரை நோக்கி தற்சமயம் - 
பாரதத்தின் எல்லா மாநிலத்து மக்களும்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர்..

இது - நல்லதற்கா?.. கெட்டதற்கா?.. 
விடை சரியாகத் தெரியவில்லை...சென்னை - தன்னைத் தானே காத்துக் கொள்ளும்..

எனினும், 
சென்னையைக் காப்பதிலும் அதற்குப் புகழ் சேர்ப்பதிலும்
நமக்கும் பங்கு உண்டு.. 

அந்த வகையில் - நாமும் வாழ்த்துவோம்!..

வாழ்க சென்னை.. 
வளர்க சென்னை!.. 
***   

19 கருத்துகள்:

 1. சென்னை வாழ்க! உங்கள் வாக்கு பொய்க்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டில் குறைகள் குறைக்கப்பட்டிருக்கிறதா. இன்னொரு பெரு மழையைச் சென்னை தாங்குமாகால்வாய்கள் தூர் வாரப் பட்டிருக்கிறதா. வெள்ளம் ஓடும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறதா வடகிழக்குப் பருவ மழைக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   அதெல்லாம் இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்..

   ஆளாளுக்கு லாவணிக் கச்சேரி தானே..
   மக்களைப் பற்றி சிந்திப்பதற்கும் நேரம் உண்டோ -
   அரசு ஊழியர்களுக்கு!?..

   அதிலும், மழை வந்து விட்டால் மக்களின் சிந்தனையெல்லாம் வேறொன்றில் நாட்டமாகி விட்டதெனெச் சொல்லுகின்றார்கள்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சென்னையை பற்றிய பதிவு அருமை சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சென்னையைப் பற்றிய பகிர்வு அருமை ஐயா...
  அழகான படங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. சென்னை தின சிறப்புப் பதிவு - நன்று.

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சென்னையின் பழையப் படங்களுடன்
  அருமையான பதிவு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. சென்னை பழையதும், புதியதும்...அருமை ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. உங்களால் சென்னை வலம் வந்தோம். நன்றி, அரிய புகைப்படங்களுக்கும் வர்ணனைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 9. சென்னை தினத்தைப் பற்றிய சிறப்புப் பதிவு அருமை ஐயா!

  கீதா: சென்னையில் வசித்து வருவதால் தங்கள் பதிவு தரும் தகவல்களை அறிய முடிகிறது. இன்னும் சீர் கேடாகி வருகிறதே நீர் நிலைகள் எல்லாம் காணாமல் போய் பச்சை எல்லாம் அழிந்து கட்டடங்களாக...ம்ம்ம் வேதனை

  அருமையான பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தமிழகத்தின் மாவட்டங்களுள் சிறிதளவும் விவசாயம் இல்லாதது - சென்னை மாவட்டம்..

   நான் முதன்முதலாக 1981 ஜூலையில் ஓரளவுக்கு சென்னையை சுற்றிப் பார்த்தேன்..

   அன்றைக்கு இருந்த பசுமை நிலங்களையும் பச்சை மரங்களையும் பறிகொடுத்து விட்டு - சிங்காரச் சென்னை என்று பெயரானது..

   இனி வருங்காலம் எப்படியோ.. தெரியவில்லை..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. அன்றே மறந்து இருப்பார்கள். மழை வரும் போது சேமித்து வைக்க ஏரிகுளம் எங்கே என்று தேட வேண்டும். அதில் அரசாங்க அலுவலகம், குடியிருப்புக்கள் என்று வந்து விட்டது. இருக்கும் குளம் குட்டையில் குப்பையை கொட்டி தூர்த்து வருகிறார்கள்.
  இனியாவது விழித்துக் கொண்டால் சிங்கார சென்னை சீர்மிகு சென்னையாக வந்தாரை வாழவைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அன்றே மறந்திருப்பார்கள் என்று தான் தோன்றுகின்றது..

   எப்படியும் மழைக்காலத்தில் தெரிந்து விடும்..

   இருக்கும் நீராதாரங்களையும் அழிப்பது கண்கூடு..
   என்ன செய்வது - பொறுப்பினை உணராதவர்கள் திருந்தக்கூடுமோ?..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..