நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

கயிலாய தரிசனம் 2

நேற்றைக்கு முன் தினம் - ஆடி அமாவாசை நாளில்,

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் திருக்கோயிலில் கயிலாய தரிசனம் கோலாகலமாக நிகழ்ந்துள்ளது..

ஐயாறப்பரும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருளி,

திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் வழங்கியதை
ஆயிரமாயிரம் அன்பர்கள் - கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்..

காலையில் காவிரியாற்றில் தீர்த்தவாரிக்கு - என,
ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் எழுந்தருளினர்..

தீர்த்தவாரிக்கு எழுந்தருளல்முன்னிரவுப் பொழுதில் அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி நல்கினர்..

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38) 
-: அப்பர் ஸ்வாமிகள் :-
  
அப்பர் ஸ்வாமிகள்
அப்பர் ஸ்வாமிகள்
திருவிழா நிகழ்வுகளை Fb ல் நண்பர்கள் வழங்கியுள்ளனர்..உழவாரம் (திருப்பணிக் குழு)

மற்றும்

ஐயாறப்பர் தர்மசம்வர்த்தனி - திருவையாறு சிவ சேவாசங்கம்

ஆகியோர் தமக்கு மனமார்ந்த நன்றி..

கயிலாய தரிசன திருவிழாவின் காணொளி..


பைங்கிளி பேடையொடாடி
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்!.. (4/3)
-: அப்பர் ஸ்வாமிகள் :-

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்!.. 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

8 கருத்துகள்:

 1. ரசித்துப் படித்தேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி அழகிய புகைப்படங்களும், விபரங்களும் நன்று.
  காணொளி கண்டேன்
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மிக அருமையான படங்கள், விவரங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 4. அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..