நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 15, 2016

இனிய பாரதம்

அன்பின் இனிய 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!..

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு!..ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு!..

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சின் 
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலேமிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு!..

சியாச்சன் பனிமலை
நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு!..


கோனார்க் 
ராணி கிணறு - குஜராத்
யாகத்திலே தவவேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் - தம்
அருளினிலே உயர் நாடு!..

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே - தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்திலே உயர் நாடு!..வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு!..


பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் 
புதல்வர் இந்நினைவகற்றாதீர்!..
-: மகாகவி பாரதியார் :-வாழ்க சுதந்திரம்
வந்தேமாதரம்!..  
***   

9 கருத்துகள்:

 1. இறை பக்தியிலும், தேச பக்தியிலும் ஆழ்ந்த அன்பு வைத்திருக்கும், சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு எனது உளங்கனிந்த இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   தங்களுடைய வாழ்த்துரையில் மனம் நெகிழ்ந்தது..
   அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சுதந்திர தின நல் வாழ்த்துகள். எனக்கு மட்டும் பாரதி போல் கவி பாடும் திறமை இருந்திருந்தால் என் பட்டியலே வித்தியாசமாய் இருந்திருக்கும் பழம்பெருமை பேசி என்ன பலன் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   மந்தையை விட்டு ஆடுகள் விலகிப் போய் விட்டால் -
   இடையர்கள் திரும்பத் திரும்ப குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்..

   ஏதாவது ஒரு குரலை கேட்டு ஓடிப்போன ஆடுகள் மந்தைக்குத் திரும்பவும் வந்து விடும்..

   அதைப் போல - பழம் பெருமையைப் பேசித் தான் வைப்போமே!..
   எவராவது ஒருவர் - மனம் திருந்தினால் கூட நல்லது தானே!..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. இந்தியாவை வலம்வந்தோம், சுதந்திர நாளில். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அருமை
  அருமை
  சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 6. இனிய பாரதம்...
  படங்கள் அழகு ஐயா...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..