நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 22, 2016

மகாமக தரிசனம்

மகோன்னத மகாமகம்..

இன்று மகாமக நீராடல்  -
மங்கலகரமாக - கங்கையினும் புனிதமாய காவிரியில் நிகழ்ந்தது..


அண்டசராசரத்திற்கும் அதிபதியான ஐயன் - ஐயாறப்பனாகவும்
அகிலமனைத்திற்கும் அமுதூட்டும் அன்னை - அறம்வளத்த நாயகியாகவும்
உறைந்திருக்கும் திருஐயாற்றில் - காவிரியின் புஷ்ய மண்டபப் படித்துறையில் தீர்த்தமாடினோம்..

மகாமகப் புண்ய காலத்தில் காவிரியில் - குடைந்தாடிக் குதுகலித்தோம்..

இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியும் திருவையாறு!..

தென்னை மரத்தினின்று - தெங்கம்பழம்  - திடும் என்று வீழ்ந்த சப்தத்தைக் கேட்டு வெருண்ட எருமை இளங்கன்று -  தானும் திடு.. திடு.. - என,

செந்நெற்கதிர்களுடன்  செந்தாமரை மலர்களும் பூத்துக் கிடக்கும் வயல் வெளிகளைக் கலக்கியடித்துக் கொண்டு -

ஓட்டமாக ஓடி, நீர்நிலைக்குள் பாய்ந்து அமிழ்ந்து கொள்ளும் சிறப்பையுடைய திருஐயாறு!..

திருஞானசம்பந்தப்பெருமானின் திருவாக்கு அது!..

இத்தகைய பெருமை திருஐயாற்றுக்கு எப்படி உண்டானது!..

செண்டாடு புனல்பொன்னி செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறு!..

மலர்ச்செண்டுகள் மிதந்து வரும் நீரினை உடைய காவிரியாள் -
செழுமணிகளையும் கொணர்ந்து கரைகளில் இறைக்கின்றாளாம்!..

இத்தகைய பொன்னியின் கரையில் தான் -
எண்தோளனும் முக்கண்ணனும் ஆகிய ஈசன் எம்பெருமான் -
இறைவன் இனிதாக திருக்கோயில் கொண்டு அமர்ந்திருக்கின்றான்..

திருஐயாறு - பஞ்சநதீஸ்வரம்!..

காசிக்கு நிகரான திருத்தலம்..

கங்கையினும் புனிதமாய காவிரி இங்கு  எல்லாருக்கும் செல்ல மகளாக இலங்குகின்றாள்..

ஆயினும் - அவளே எமக்கு அன்னையும் ஆயினள்..


ஸ்ரீ ஐயாறப்பர் திருமூலஸ்தானம்
பொன்னியின் நீரலைகளில் ஆடி மகிழ்ந்து அர்க்கியம் வழங்கிக் கரையேறி -
ஐயாறப்பனையும் அறம் வளர்த்த நாயகியையும் வணங்கித் துதித்தோம்..

தெற்கு ராஜகோபுரத்தில் உறையும் ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நிதியில் நின்றிருந்த போது தீர்த்தவாரிக்கென - அம்மையப்பன் காவிரிக்கு எழுந்தருளினர்..

காவிரிக் கரையிலும் திருக்கோயிலினுள்ளும் பெருந்திரளாக மக்கள்..

மாசி மக தீர்த்தமாடி அம்மையப்பனை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தனர்..

மகாமகத் தீர்த்தமாடுதற்கென - காலைப் பொழுதில் திருஐயாற்றுக்குச் சென்ற நாங்கள் சிவதரிசனம் செய்தபின் மதிய வேளையில் இல்லந்திரும்பினோம்..

இதற்கிடையில்,

திருக்குடந்தை மாநகரில் மகாமக தீர்த்தவாரி சிறப்பாக நிகழ்ந்திருக்கின்றது..

ஸ்ரீ மங்களாம்பிகா உடனாகிய கும்பேஸ்வரர் விடை வாகனனாக - மற்றுமுள்ள திருக்கோயில்களின் திருமூர்த்திகளுடன்
மகாமகத் திருக்குளக்கரைக்கு எழுந்தருள கூடியிருந்த மக்கள்
ஆனந்தப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்..

மகாமக தீர்த்தவாரி நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட படங்களை நண்பர்கள் Fb ல் அனுப்பியிருந்தனர்..

அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

நிகழ்வுகளை வலையேற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..


முதல் நாளின் தேரோட்டம்














மாசிமகத் தீர்த்தவாரி 
மங்கலகரமாக நிறைவேறியுள்ளது..

மகாமகம் எனும் பெருந்திருவிழா
ஆன்மீகத் திருவிழா - ஆயினும்
தமிழர் தம் கலாச்சாரப் பெருவிழா!..
இனிதே நிறைவேறியுள்ளது..

அனைத்து தரப்பினருக்கும் நன்றி நவிலும் நெஞ்சம் 
அடுத்த மகாமகத்தினை எதிர்நோக்குகின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. உடனுக்குடன் நிகழ்வுகளை அருமையான விளக்கங்களுடன் அழகிய படங்களும் நன்றி ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இயன்றவரை நமது வேலை அதுதானே..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பினுக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கண்டு இன்புற்றேன் ஐயா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கும்பகோணம் மகாமகக் காட்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பக் கண்டேன் அப்போது பல மடாதிபதிகளும் வந்திருக்கக் கண்டேன் அவர்கள் நீராடினார்களா தெரியவில்லை. பதிவில் படங்களுடன் அனைத்தும் அருமை மாசி மகத்தன்று காவிரியில் நீராடியதை விவரித்த விதம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      மகாமக தீர்த்தவாரி நேரத்தில் நான் திருவையாறு கோயிலில் இருந்ததால் - குடந்தை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பில் கூட பார்க்கவில்லை..

      மாலையில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று - அஸ்திர தேவருக்கு நடந்த அபிஷேகத்தை மட்டும் காட்டியது..

      மடாதிபதிகள் அந்த நேரத்தில் நீராடினார்களா என்பது தெரியவில்லை..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்களும் தகவல்களும் அருமை ஐயா. தங்களின் விவரணம் அழகூட்டுகின்றது!! பகிர்வுக்கு மிக்க நன்ரி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்களும் பதிவும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆஹா அருமையான தொகுப்பு, மகிழ்ச்சியான நீராடல்,,, அருமை அருமை,, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் மகாமகத்திற்குச் செல்லவில்லையா?..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. இல்லை, எனக்கு அதற்கு வாய்க்க வில்லை, ஆனால் இல்லத்தில் அனைவரும் சென்றனர். தாங்கள் இன்னும் பல மகாமகம் காண அன்பின் வாழ்த்துக்கள்.

      நன்றி.

      நீக்கு
    3. எல்லா வகையிலும் நலம் விளைந்திட பிரார்த்திக்கின்றேன்..
      தங்களின் மறுமொழிக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..