நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி

உலகில் தீமைகள் அனைத்தும் ஒழிந்திடவும் அறங்கள் தழைத்தோங்கிடவும் திருப்பாற்கடலில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீஹரி பரந்தாமன் மண்ணுலகில் அவதரித்த திருநாள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. 


சத்தியம் எங்கிருக்கின்றதோ - அங்கே இருப்பவன் ஸ்ரீகிருஷ்ணன். ஏனெனில் சத்தியம் என்பதே ஸ்ரீகிருஷ்ண ஸ்வரூபம்!.. என்பர் பெரியோர். 

அவ்வண்ணமே -  சத்திய ஸ்வரூபமாகக் காட்டியளித்தவன். சத்ய யுகத்தில் பிரஜாபதியானவர் சுதபா.  இவரது பத்னி - பிரிஸ்னி.

வேத வித்துக்களான இந்த தம்பதியரின் மனம் ஒன்றிய வேண்டுதலின் பேரில் பூவுலகில் மூன்று முறை மடியில் மழலையாகக் கிடந்தவன் -

ஸ்ரீஹரி பரந்தாமன்!..

ஆதியில், சுதபா - பிரிஸ்னி தம்பதியரின் புத்ரனான ஹரி - பின்னாளில் காஷ்யபர் - அதிதி தம்பதியர்க்கு ஸ்ரீ வாமனனாகத் தோன்றினான். 


அதன் பின், துவாபர யுகத்தில் வசுதேவர் - தேவகி தம்பதியர்க்கு - அன்று சொன்ன வண்ணம் வசுதேவ சுதனாக - ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் செய்து -
சத்தியமாகவே காட்சி தந்தான்!.. 

இருள் சூழ்ந்த நள்ளிரவுப் பொழுதில் - கடுங்காவலுடன் கூடிய சிறைச் சாலைக்குள் நான்கு திருத்தோள்களுடன் சங்கு சக்ரம் தாங்கிய திருக்கோலத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நிகழ்ந்தது.

அந்த வேளை -  சிம்ம ராசியில் சூரியன் இருக்க தேய்பிறை அஷ்டமி திதி. கௌலவ கரணத்தில்  ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதம். நள்ளிரவுப் பொழுதில் சந்திரோதய நேரம்.  ரிஷப லக்னம். புதன் கிழமை.

தேவகி மைந்தனாகப் பிறந்தாலும் - ஆயர்பாடியில் யசோதையின் மடியில் தவழந்தது அவன் நிகழ்த்திய நாடகம்!..



கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது எதற்காக?..

இயற்கையை வாழ வைப்பதற்காக!..


கோபாலனாக வளர்ந்த வேளையில் - கோகுலத்தின் மக்கள் வழக்கமான - இந்திர பூஜைக்கு ஆயத்தமாகினர். 

அனைத்தும் அறிந்திருந்த கண்ணன் யாதொன்றும் அறியாதவனைப் போல - என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்!.. - என்று கேட்டான். 

மழையைத் தரும் இந்திரனுக்கு மரியாதை செய்வதற்காக விழா எடுக்கின்றோம்!.. - என்றனர் கோகுலத்தின் மக்கள். 

அதனைக் கேட்டு புன்னகைத்த கண்ணன் - 

இந்திரனா மழையத் தருகின்றான்?.. கோவர்த்தன கிரி அல்லவா மழையைத் தருகின்றது!. நீரின்றி அமையாது உலகு என்பதை நீங்கள் அறிந்ததில்லையா!.. சுனையும் அருவியும் ஆறும் குளமும் நீர் நிறைந்து விளங்குவதற்கு மலையும் மரங்களும் அல்லவா காரணம்!.. 


கோவர்த்தன கிரியில்  செழித்து வளர்ந்திருக்கும் மரங்களல்லவா - பயனுள்ள பூக்களையும் காய்களையும் கனிகளையும் வழங்குகின்றன!..  

பலவகையான சிற்றுயிர்களும் பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குக் காரணம் - கோவர்த்தன மலையும் அதில் அடர்ந்திருக்கும் வனமும் அல்லவா!.. ஆகவே கோவர்த்தன கிரிக்கு உங்கள் வழிபாட்டினை செய்யுங்கள்!.. - என்றருளினான். 

கிருஷ்ணனின் வார்த்தையைத் தலைமேற்கொண்ட மக்கள் அவ்வாறே செய்தனர். 

இதனால் மனம் கடுத்த இந்திரன் - மேகங்களை அழைத்து பிருந்தாவனத்தை மூழ்கடித்து விடும்படியாகக் கட்டளையிட்டான். 

அதன்படி இடைவிடாது மழை பெய்ததும் அந்தப் பகுதியே வெள்ளக் காடாகிப் போனது. 

தனது வழிபாட்டினை நிறுத்தியதால் இந்திரன் பழி தீர்க்கின்றான் என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் - இந்திரனின் கர்வத்தைப் பங்கம் செய்திடத் திருஉளம் கொண்டான். 

அடாத மழையைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்களுக்கு அபயம் அளித்த கண்ணன் - கோவர்த்தன மலையைத் தன் திருக்கரத்தினால் தூக்கிக் குடையாகப் பிடித்து ஆருயிர்கள் அனைத்தையும் காத்தருளினான். 

எட்டுத் திக்குகளையும் அடைத்துக் கொண்டு ஏழு நாட்கள் பெய்தது மழை.

முடிவில் மேகங்களும் வறண்டு விழுந்தன.  


ஏதும் செய்ய இயலாதவனாகி தலை குனிந்து நின்ற இந்திரன் சரணடைந்தது - ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்பாதங்களில்!..

செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் தன்னிடம் அர்ப்பணம் செய்து விட்டு அனைத்திற்கும் ஆதாரமான - தன் திருவடிகளைச் சரண் அடைபவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர்!.. என்கின்றான் கண்ணன். 

நம்மை அவ்வழிக்கு உய்விக்கவேண்டியதும் அவன் தான்!..

அதைத் தான் மகாகவி பாரதியாரும் வேண்டுகின்றார்.


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்!..

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா 
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா 
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா 
கமலத் திருவோடிணைவாய் கண்ணா!..

இணைவாய் எனதா வியிலே கண்ணா 
இதயந் தனிலே அமர்வாய் கண்ணா 
கணைவாய் அசுரர் தலைகள் சிதறக்
கடையூழி யிலே படையோ டெழுவாய்!..

எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையாய் உளமீதினிலே!..
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே!..


ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அன்று வீட்டில் உள்ள குழந்தைகளை - கண்ணனைப் போல் அலங்கரித்து மகிழ்வது பாரம்பர்ய பழக்கம். 


வீடெங்கும்  வண்ணக் கோலங்களிட்டு வாசலில் மாவிலை தென்னங் குருத்துத் தோரணங்களைக் கட்டி, பாலகிருஷ்ணனுக்குப்  பிடித்த பால், தயிர், வெண்ணெய், பழவகைகள், பலவகையான இனிப்புகள் மற்றும் சீடை,முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து   -

கிருஷ்ணனின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, 

ஸ்ரீகிருஷ்ணன் தங்கள் இல்லத்திற்குள் எழுந்தருளினான் என -  மகிழ்ச்சி பொங்க அவனை வழிபடும் வேளையில் -  

இயற்கையைக் காப்போம்!.. 
- என உறுதி கொண்டு அவ்வண்ணம் இயன்றவரை நடந்தால் -  

குன்றம் எடுத்த குளிர் மனத்தான் நம்மையும் 
குன்றாத வளங்களுடன் காத்தருள்வான் என்பது சத்தியம். 

ஏனெனில், சத்திய வடிவானவன் - அவனே!..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
* * *

18 கருத்துகள்:

  1. சிந்தை குளிர்ந்தது ஆயர்பாடி மைந்தனின் புகழினை பாடியமைக் கேட்டு!
    இதனையும் படித்து கருத்திடுங்கள் அய்யா!
    http://www.krishnaalaya.com/2014/08/blog-post_16.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கிருஷ்ணா..
      அன்பின் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
    2. இனிய ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!..

      இனிய ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

      நீக்கு
    3. அன்புடையீர்..
      வருகை தந்து வாழ்த்துரைத்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கிருட்டின ஜெயந்தி அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சொல்லும்போதே
    வாய் மணக்கும்!. எண்ணும்போது சிந்தை குளிரும்!

    குறை நீக்கக் குழலூதும் கோகுலன் பதிவும் படங்களும்
    மனதைக் கொள்ளை கொண்டன ஐயா!

    அற்புதம்! உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான படைப்பு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  5. அன்பின் துரைராஜு அவர்களே ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு என் பதிவில் கிருஷ்ணாயணம் பதிவு, கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வரவும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தி காணவைத்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. நல்ல நாளில் நல்ல பகிர்வு. எங்கள் இல்லத்திற்கு கிருஷ்ணன் வந்ததுபோலிருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..