நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

புண்ணிய புரட்டாசி

தட்க்ஷிணாயணத்தின் மூன்றாவது மாதம் புரட்டாசி. 

சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கின்றான்.

கன்னி ராசியின் அதிபதி புதன். வாழ்வின் அடிப்படைத் தேவையான கல்வி, கலை இவற்றுக்குரியவன் - புதன். 

பச்சை நிறத்துக்குரியவனாகிய புதனின் அதிபதி  - 

''..பச்சை மாமலை போல் மேனி!..'' என ஆழ்வார் புகழ்ந்துரைத்த - ஸ்ரீ மகாவிஷ்ணு. 


எனவே தான் புரட்டாசி மாதத்தினை பெருமாளுக்கு உகந்ததாகக் கொண்டு, சிறப்பான விரதங்கள் அனுசரிக்கப்படுகின்றன.  

புதனுடன்  நட்பு பூண்டிருப்பவர் சனைச்சரன். எனவே - புதனுக்குரிய புரட்டாசியில் சனைச்சரனுக்குரிய கிழமைகள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு - மாதம் முழுதும் மங்கலகரமாக விரதங்களும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.


திருப்பதியில் பிரம்மோத்ஸவம் நிகழ்வது புரட்டாசியில் தான்!..


புரட்டாசி மாதத்தின் பெளர்ணமி அன்று மதுரையில் அருள்மிகு கூடலழகர் திருக்கோயிலில் ஐந்து கருட சேவை விமரிசையாக நிகழ்வுறுகின்றது.

இந்த புரட்டாசி மாதத்தில் பெளர்ணமிக்குப் பின் வருகின்ற பிரதமை முதல் (தேய்பிறை முழுதும் ) மஹாளய பட்சம்.    

முன்னோர்களுக்கு உரிய நீர்க் கடன்களைச் செய்வதற்கு உகந்த நாட்கள். வருடத்தின் மற்ற நாட்களில் அனுசரிக்க இயலாமற் போன தர்ப்பணங்களை இந்த நாட்களில் செய்யலாம் என்பர்.  

பித்ருலோகத்தில் கொண்டாடப்படும் உற்சவம் தான் மஹாளய பட்சம் என்றும் கூறுகின்றனர். 

4.10.2013 வெள்ளிக்கிழமை அன்று மகோன்னதமான மஹாளய அமாவாசை.

இந்த மஹாளய அமாவாசையை அடுத்து வருவது - இல்லங்கள் தோறும் மங்கலம் பொங்கிப் பெருகும் நவராத்திரி கொலு வைபவம். 


சக்தி வழிபாட்டில் நவராத்திரி கொலு என்பது மிக எளிய வழியில் அம்பிகையின் அருளைப் பெறுவதற்கான காரணியாகும்.

''மனிதன் என்பவன் தெய்வமாகலாம்''  - எனும் மகத்தான தத்துவத்தின் விளக்கம் தான் கொலு அலங்காரம். 

அந்த அலங்காரத்தை முறையாக உணர்ந்து விட்டால் - அழிவது நமது அகங்காரம்!..


சாரதா நவராத்திரி எனப்படும் மங்கல வைபவத்தில் ஸ்ரீதுர்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி தேவியரை  - அலங்கார அழகுப் பதுமைகளில் ஆவாஹனம் செய்து வழிபடும் உன்னத நாட்கள்.

நிறைவாக ஒன்பதாம் நாளன்று சரஸ்வதி பூஜை - 13.10.2013.

பத்தாம் நாள்  விஜயதசமி - 14.10.2013. 

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதற்கு மிகச் சிறந்த நாள். 

முன் ஜன்ம வினைகளால் உண்டாகும் பிணிகள், பீடைகள், தோஷங்கள், இன்னல்கள், இடையூறுகள் அனைத்தும் விலகவும் கொடிய வினைகள் நம்மைத் தொடராமல் தொலையவும், 

நம் முன்னோர்களால் நமக்கு அருளப்பட்டவை -

இறைவழிபாடுகளும் தியானங்களும் விரதங்களும்!..

இவற்றை முறையாக அனுசரிப்பதால் - உடலும்  உள்ளமும்  நலமாகின்றன!.. 

வாழ்க்கை முறையும் கூட  - ஒருநிலைப்படும்!.. சமநிலைப்படும்!..

உணவுக் கட்டுப்பாடும் புலனடக்கமும் - நம்மை மனித நிலையில் இருந்து மகத்தான நிலைக்கு உயர்த்துபவை. 


புரட்டாசி முழுதும் விரதம் இருக்க இயலாத சூழ்நிலை எனில் மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமாவது, 

''..பெருமாளே சரணம்!..'' - என்று விரதம் மேற்கொள்ளலாம்!..

அந்த வகையில் மகத்துவம்  வாய்ந்த புரட்டாசி மாத விரதங்கள் உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தி -

ஆன்மாவில் ஆனந்தப் பேரொளியினை ஏற்றி வைக்கின்றன.

ஆன்மாவில் சுடரும் ஆனந்தப் பேரொளியால் -

அன்பு துலங்குகின்றது!.. 
அருள் இலங்குகின்றது!.. 
அகிலம் விளங்குகின்றது!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=13776#sthash.jJFUNM6G.dpuf
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=13776#sthash.jJFUNM6G.dpuf
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=13776#sthash.jJFUNM6G.dp

6 கருத்துகள்:

 1. புரட்டாசி மாத விரதங்கள் உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தட்டும். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. அற்புதமான படங்களுடன் மிகவும் அழகான விளக்கங்கள். புரட்டாசி மாதப்பிறப்புக்கு ஏற்ற மிகவும் சந்தோஷம் அளிக்கும் பதிவுக்கு நன்றியோ நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 4. ஆன்மாவில் சுடரும் ஆனந்தப் பேரொளியாய்
  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..