நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 14, 2013

வெள்ளையம்மாள்

தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்தவள் எங்கள் அன்புக்குரிய வெள்ளையம்மாள்.

 

திருக்கோயிலைத் தேடிவரும் அன்பர்களை முன்னின்று வரவேற்பவள் அவளே!...


தமிழகத்தின் திருக்கோயில் யானைகளில் வயதில் மூத்தவள் இவளே!..

முதுமையின் காரணமாக சிலகாலமாக உடல் நலம் குன்றியிருந்தாள்.  இந்த ஆண்டு நடைபெற்ற புத்துணர்வு முகாமுக்குக் கூட அவள் செல்லவில்லை.

அதுவே நமக்கு மிக்க வருத்தம்!.. அதுவும் பதிவிடப்பட்டது.. 

அந்தப் பதிவு - வெள்ளையம்மாள்

ஓய்வு எனும் பேரில் - 

பக்தர்களைக் கண்டு பரவசப்படுவதில் இருந்து சில வாரங்களுக்கு முன் விலக்கி வைக்கப்பட்டாள். 

அதுவே - பரிபூரண ஓய்வு கூட  - அவளுக்கு மன பாரமாக இருக்கலாம். 

உடல் நலம் குறைவாக இருந்த வெள்ளையம்மாள்  -

இன்று சிவகதி அடைந்தாள். 

இறைநிழலில் - இனி அவள் இன்புற்றிருப்பாளாக!..

நடிகர்திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களால், தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டவள் - வெள்ளையம்மாள்!..

திரு.சிவாஜிகணேசன் - வெள்ளையம்மாளுடன்
மாரியம்மன் கோயில் - யானையின் பராமரிப்பு பணிகளுக்கு வசதி குறைவாக இருந்த காரணத்தினால், ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயிலிலேயே - அவள் தங்கி விட்டாள். 

ஆயினும் திருக்கோயில் வைபவங்களில் அவள் கலந்து கொள்ளத் தவறியதே இல்லை.


தற்போது கூட புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா நடந்து வருகின்றது.  

என்ன நினைத்தாளோ.. 

எப்படித் துயறுற்றாளோ..

அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே - என்று மனம் கலங்கியிருப்பாளோ..

நாம் அறியோம்..

பேரானந்தப் பெருவெளியில் - நீங்காது நிலை பெற்று விட்டாள்!..

 

நம்முடன் நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த அவள் என்ன சுகத்தைக் கண்டிருப்பாள்?.. 

பெரியகோவில் வாசலில் நின்றதே - பெரும் பேறு - என்று பூரித்திருப்பாளோ!..


கடைசியாக - ஒருமுறை அவள் முகத்தைக் காணக் கூட நமக்குக் கொடுத்து வைக்கவில்லை!.. 


இனி - பெரியகோயிலின் முன் முற்றம்  -  
வெள்ளையம்மாள் இன்றி பரந்து கிடக்கும்..

ஆயினும் எங்கள் மனம் - வெள்ளையம்மாளின் 
நினைவுகளால் நிறைந்தே இருக்கும்..

வெள்ளையம்மாளின் பெயர் 
என்றும் நிலைத்தே இருக்கும்!..

4 கருத்துகள்:

 1. வெள்ளையம்மாளின் பெயர்
  என்றும் நிலைத்தே இருக்கட்டும்...

  பதிலளிநீக்கு

 2. சில யானைகள் கோயிலின் பெயரை நினைவு படுத்தும். அப்படிப் பிரபலமான ஒரு யானை குருவாயூர்க் கேசவன். அதேபோல் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் மங்களம் என்றொரு யானை. பக்தர்கள் கோயிலுக்குப் போகும்போது வெளியே யானைக்குக் கொடுக்கவே அகத்திக் கீரை விற்கிறார்கள். அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்தபோது யானைக்கு கொடுக்கவென்றே கீரைகள் விற்கப் படுவது கண்டோம்.

  பதிலளிநீக்கு
 3. இறைநிழலில் - இனி அவள் இன்புற்றிருப்பாளாக!..

  பதிலளிநீக்கு
 4. வெள்ளையம்மாளின் பெயர்
  என்றும் நிலைத்தே இருக்கும்!..

  மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். படங்களும் அழகு.

  செய்தி கேட்க வருத்தமாகத்தான் உள்ளது.

  இறைநிழலில் - இனி அவள் இன்புற்றிருப்பாளாக!.. அதே அதே !

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..