நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 13, 2014

உங்களுடன் நான்

இன்று விடியற்காலையில் வேலைமுடித்துத் திரும்பியதும் சற்று நேரம் வலைத்தளங்களில் உலாவிய பின், குளியல் - வழிபாடு!..

பின்னர் சமையல்!.. சற்றே ஓய்வு.. மனம் பின்னோக்கிச் சென்றது. 

பழைய படங்கள் ஏதாவது பார்க்கலாமே!.. - என்று யூ டியூப்பில் துழாவினேன்.

மனதுக்கு மிகவும் பிடித்த அந்தப் படம் சிக்கியது!.. அது - 

மூன்று தெய்வங்கள் - எனும் திரைப்படம். 

கூகிள் வழியே திரைப்படத்தில் ஆழ்ந்திருந்தபோது,  மேலே - 
மணியில் சிவப்புக் குறி!.. ஏதோ செய்தி வந்திருக்கின்றது என்றது மனம்.


வணக்கம் என்று படம் முடிந்ததும் வலைத்தளத்தினுள் நுழைந்து செய்தியைத் திறந்தால் - அன்புக்குரிய ராஜலக்ஷ்மிபரமசிவம் அவர்கள் தனக்கு விருது கிடைத்த விஷயத்தினைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்..

அவர்களுக்கே இப்போது தான் கிடைத்திருக்கின்றதாம் - என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த சில வரிகளில்  - 
ஆன்மீகம்  வளர்க்கும் ........... எனக் குறிப்பிட்டு எளியேனின் பெயர்.

ஒரிரு விநாடிகள் ஒன்றுமே புரியவில்லை..

அப்படியா!..


எனக்கும் ஒரு விருது!.. முதல் விருது!..  
அதுவும் அன்புக்குரிய ராஜலக்ஷ்மிபரமசிவம் அவர்கள் கையால்!..

அன்பின் வழி நின்று நல்லனவற்றைப் போதித்த நல்லாசிரியை அவர்களின் கையால்!..

இதனை நினைத்துக் கூட பார்க்கவில்லை!..
எனவே நெஞ்சம் நெகிழ்கின்றது.. கண்கள் கசிகின்றன..

உடனடியாக நன்றி கூறி  பதிவு செய்யத் துடித்தது மனம்.
ஆனால் - இயலவில்லை.  தட்டச்சு செய்ய இயலாமல் கைகள் நடுங்கின.

சற்று நேரம் அமர்ந்திருந்தேன். அபிராமி அந்தாதியை எடுத்து சில பாடல்களை வாசித்தேன்.

ஆன்மீகம் வளர்க்கும் - என்ற சொற்கள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஆன்மீகம் என்னையும் வளர்ப்பதாகப் பொருள் புரிந்தது.

அதுதானே உண்மை!..

அவர்களுடைய தளத்திற்குச் சென்று வருகையைப் பதிவு செய்தேன். அங்கே நன்றி எல்லாம் கூறவில்லை.

எனது முழுமையான மகிழ்ச்சி அவர்களுக்கு சமர்ப்பணம்!..

இப்போது உங்களுடன் நான்!..

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது இந்த விருது - எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.



முதலில் விருது வழங்கியவரின் தளத்திற்கு இணைப்பு!..

நீங்கள் மேலும்  பல விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்வுடன் அவர் தளத்திற்கு இணைப்பு இங்கே http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/

அடுத்து,
விருதினை  தளத்தில் போட்டுக் கொள்ள  வேண்டும்.
அவர்கள் சொன்னது போல - கரும்புத் தின்னக் கூலியா?..
போட்டுக் கொண்டு விட்டேன்.

அடுத்ததாக,
என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும்.
இதோ!.. அதையும்  சொல்லி விடுகிறேன்,.

பிறந்ததும் தவழ்ந்ததும் - நெஞ்சை அள்ளும் தஞ்சை. ஆனாலும் தந்தை அரசு ஊழியரானதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயணம்.

ஆதலால் - பயணங்களில் சலிக்காத ஆர்வம்.
 
கதை எழுதுவதில் ஆர்வம். பதின்ம வயதில் எழுதிக் கொடுத்த கல்யாண வாழ்த்துப் பாடல்கள் நூற்றுக்கும் மேல்..

அன்றைய வார இதழ்களுக்கு படைப்புகளை ஆர்வத்துடன் அனுப்பினால் - போன வேகத்தில் திரும்பி வரும். இருந்தாலும் 1977ல்  தஞ்சை நகரைப் பற்றி நான் எழுதிய துணுக்குச் செய்திகளை - ஆனந்த விகடன் வெளியிட்டு முப்பது ரூபாய் பரிசுத் தொகையும் (சொக்கா!..) வழங்கி சிறப்பித்தது.

மிகவும் பிடித்தவன் - பொன்னியின் செல்வன்!..

ஆர்வத்துடன் படிப்பது - கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!..

சிங்கப்பூரில் நான்காண்டுகள். அதன்பின்  - இனிய இல்லறம். மகள் நந்தினி. மகன் சிவஸ்ரீகாந்த்.

பத்தாண்டுகள் குவைத் வாழ்க்கை. அதன்பின் -2005ல் கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் என பயணம் தொடர்ந்த வேளையில் -

மீண்டும் குவைத் அழைத்தது. இறையருளால் - இன்று உங்களுடன் நான்!..

அடுத்ததாக -
குறைந்த பட்சம் ஐந்து நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதோ - விருதினை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.



என்றும் எனது அன்புக்குரிய - கரந்தை ஜெயக்குமார்

மரியாதைக்குரிய ஐயா சூரிசிவா

மரியாதைக்குரிய  கோபு அண்ணா (VGK)

அன்புக்குரிய தஞ்சை ஹரிணி

அன்புக்குரிய வெங்கட் நாகராஜ்

அன்புக்குரிய அ. பாண்டியன்

அன்புக்குரிய தளிர் சுரேஷ்

அன்றாடம் ஆன்மிக மலர் தொடுக்கும் இராஜராஜேஸ்வரி

அன்புக்குரிய கோமதிஅரசு

கவிதாயினி அம்பாளடியாள்

குருபக்தியுடன் பாமாலை புனைந்த இளையநிலா இளமதி

தேனடையில் இருந்து சிதறும் தேன்மதுரத் தமிழ்

கவிகாயத்ரியின் தூரிகைச்சிதறல்

கவிதையால் கட்டிப்போடும் காவியக்கவி இனியா

வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு?..

ஒருவழியாக விதிமுறைகளை நிறைவேற்றி விட்டேன்.

இந்த விருதினைப் பெற்றவர்கள் - இந்த விருதினை தங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவர்களுக்கு மட்டுமல்ல..

தஞ்சையம்பதியுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு உரித்தாகின்றது.


இந்த விருதுக்கு உரியதாக நான் எதையும் செய்திருப்பதாக எண்ணவில்லை.

நான் என்றும் போற்றி வணங்கும் அபிராமவல்லியே இந்த விருதிற்கு உரிமையானவள்!..

நானறிந்த தமிழே - நல்லோர் மத்தியில் என்னையும் இருத்தியது.

கண்ணியது அவள் புகழ்.. கற்பது அவள் நாமம்!.. 
கசிந்து பத்தி பண்ணுவது அவள் திருபாதாம் புயத்தில்!.. 

பெண்ணில் நல்லாளொடு இருக்கும் பெருந்தகை 
அனைவருக்கும் பேரருள் பொழிய வேண்டுகின்றேன்!..

வாழ்க தமிழ்!.. 
வாழ்க நலம்!..
* * *