நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருநறையூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநறையூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 05, 2023

திருநறையூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 20 
சனிக்கிழமை
 
இன்றைய
 தரிசனம்

ஸ்ரீ கருடராஜன்

 திவ்யதேசம்

திருநறையூர்
{நாச்சியார் கோயில்}

ஸ்ரீநிவாசப் பெருமாள்
நறையூர் நம்பி
வஞ்சுளவல்லி நாச்சியார்
கல் கருடன் சிறப்பு

காணொளியாளருக்கு நன்றி


தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்  தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1503

முருக்கிலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவியச் சென்று  வென்றிச் 
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1505
-: திருமங்கையாழ்வார் :-
**

ஓம் ஹரி ஓம்
***